Home /News /lifestyle /

உங்கள் சருமம் எந்த வகை..? கண்டறிய டிப்ஸ்...

உங்கள் சருமம் எந்த வகை..? கண்டறிய டிப்ஸ்...

 சருமத்தின் வகையை அறிய டிப்ஸ்

சருமத்தின் வகையை அறிய டிப்ஸ்

உங்கள் சருமத்தின் வகையை அறிய முதலில் அதை சுத்தப்படுத்துவதற்கு முன், உங்கள் முகத்தை ஒரு துணியால் துடைக்கவும். ஏனெனில் முகம் சுத்தமாக இருந்தால் தான், இயல்பான தோல் முதல் வறண்ட சருமம் வரை அது குறித்து அறிய முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும். சிலருக்கு மிகவும் வறண்ட சருமம் இருக்கும், அதுவே சிலருக்கு சென்சிடிவ் வகையான சருமம் இருக்கும். இப்படி பல வகையான சருமம் உள்ளது. எனவே ஒருவரின் சரும வகையை பொறுத்து தான் அதற்கேற்ற புராடக்டுகளை பயன்படுத்த வேண்டும். உங்கள் சருமத்தின் வகையை அறிந்துகொள்வது வழக்கமான தோல் பராமரிப்பின் அடிப்படையான முறையாகும். உங்கள் சொந்த தோல் வகையை அறிய, உங்கள் தோலின் தோற்றம் மற்றும் உணர்வைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

உங்கள் சருமத்தின் வகையை அறிய முதலில் அதை சுத்தப்படுத்துவதற்கு முன், உங்கள் முகத்தை ஒரு துணியால் துடைக்கவும். ஏனெனில் முகம் சுத்தமாக இருந்தால் தான், இயல்பான தோல் முதல் வறண்ட சருமம் வரை அது குறித்து அறிய முடியும். மேலும் நீங்கள் துடைக்க பயன்படுத்தும் திசுக்களில் கிரீஸ் படிந்தால், நீங்கள் சாதாரணமாக எண்ணெய் பசையுள்ள சருமத்தைப் பெறுவீர்கள். பொதுவாக நெற்றி, மூக்கு மற்றும் கன்னம் போன்ற பகுதிகளில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் இருக்கும். எனவே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு திசுக்களை பயன்படுத்தி துடைக்க வேண்டியது நல்லது.

அதன்படி நெற்றி, மூக்கு மற்றும் தாடை ஆகியவற்றை ஒரு திசு பேப்பரால் துடையுங்கள். மேலும் கன்னங்களைத் துடைக்க மற்றொன்றைப் பயன்படுத்தவும். இதன் பிறகு நம்மால் எளிதால தோல் வகையை அறிய முடியும். நமது சருமமானது நான்கு முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகின்றன. சாதாரண சருமம், உலர்ந்த சருமம், எண்ணெய் பிசுக்கான சருமம் மற்றும் கலவையான சருமம் என வகைப்படுத்தப்படுகின்றன.



வறண்ட சருமம்

உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், சருமத்திற்கு சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்த புராடக்ட்டை பயன்படுத்தலாம். இவற்றுடன் இயற்கை மாய்ஸ்சரைசர்களைக் கொண்ட ரீஹைட்ரேட் கிளென்சர்களைப் பயன்படுத்தவும். வறண்ட சருமத்தை பாதுகாக்க தினமும் இரவில் முகத்தை மென்மையான காட்டனை கொண்டு துடைக்க வேண்டும். மேலும் சருமத்தில் ஈரப்பதம் குறைவாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பகலில் சன்ஸ்கிரீன்களைப் பயன்படுத்துங்கள் மற்றும் மேக்கப்பின் கீழ் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த மறவாதீர்கள்.

48 வயதிலும் இளமையாகத் தோன்றும் நடிகை கஜோல் - ரகசியம் இதுதான்..!

எண்ணெய் பிசுக்கான சருமம்

எண்ணெய் பிசுக்கான சருமத்தை கொண்டவர்களுக்கு பெரிய திறந்த துளைகளுடன் அதன் அமைப்பு இருக்கும். எனவே இவர்களுக்கு சிறந்த வழிமுறைகளை பின்பற்றுவது மிக அவசியம். இப்படி செய்வதால் சருமத்தின் துளைகள் அடைக்கப்படாமல் இருக்கும் மற்றும் கரும்புள்ளிகள், பருக்கள் வரமால் தடுக்கலாம்.. எண்ணெய் பசை சருமத்திற்கு, வேம்பு மற்றும் துளசி போன்ற பொருட்கள் அடங்கிய ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது. முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு, மருந்து கலந்த க்ளென்சரைப் பயன்படுத்தவும். மேலும் அஸ்ட்ரிஜென்ட் லோஷன் அல்லது ரோஸ் கலந்த ஸ்கின் டோனர் பயன்படுத்தலாம்.



கலவையான சரும வகை

சிலருக்கு சருமம் என்பது கலவையான தன்மையை கொண்டதாக இருக்கும். ஒரு பகுதி தோல்கள் எண்ணெய் பிசுக்கான பகுதியைக் கொண்டிருக்கும், மீதமுள்ள தோல் வறண்ட அல்லது சாதாரணமானதாக இருக்கும். எனவே அவற்றிற்கேற்ப தனித்தனி வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதற்கு முதலில் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம். எண்ணெய் மற்றும் கலவையான சருமத்திற்கான தினசரி ஸ்கின்கேர் வழக்கத்தில் ஃபேஸ் ஸ்க்ரப்பை பயன்படுத்துவது நல்லது.

உங்களின் சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைக்க, சீரான உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கியம். எனவே, உங்கள் தினசரி உணவில் பழங்கள், சாலடுகள், முழு தானியங்கள் மற்றும் தயிர் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் நல்ல பொலிவை பெறலாம். இவற்றுடன் தினமும் 6 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதும் முக்கியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Skin types, Skincare

அடுத்த செய்தி