• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நீங்கள் எப்போதும் பிரகாசிக்கும் அழகுடன் இருக்க வேண்டுமா..? இந்த ஜூஸை தினமும் குடிங்க

நீங்கள் எப்போதும் பிரகாசிக்கும் அழகுடன் இருக்க வேண்டுமா..? இந்த ஜூஸை தினமும் குடிங்க

எலுமிச்சை, பீட்ரூட், கேரட், தக்காளி ஜூஸ்

எலுமிச்சை, பீட்ரூட், கேரட், தக்காளி ஜூஸ்

பிரகாசமான ஒளிரும் சருமத்திற்கு ஆரஞ்சுபழம் , பீட்ரூட் மற்றும் கேரட், தக்காளி ஆகிய காய்கறிகள் அடங்கிய பழச்சாறினை குடித்து வந்தாலே போதும், சருமம் தானாக பொலிவடையும்.

  • Share this:
பழங்கள் சருமத்திற்கு இயற்கையின் அமுதம் என்று கூறப்படுகிறது. அதேபோல பழச்சாறுகளுக்கும் இது பொருந்தும். பொதுவாக பெண்கள் தங்கள் சருமத்தில் வறட்சி மற்றும் பொலிவற்ற தன்மை போன்ற சிக்கலைகளை எதிர்கொள்கின்றனர். இதனை சரிசெய்ய பேஷியல், பேஸ் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

ஆனால், முகப்பொலிவு என்பது வெறும் ஒப்பனை அலங்காரங்களால் மட்டும் கிடைக்காது. உடலின் உட்புற அமைப்பு ஆரோக்கியமாகவும் சீராகவும் இருக்கும் போது முகப்பொலிவு தானாக வரும். அப்படியானால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருவர் கட்டாயம் பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

அதிலும், பிரகாசமான ஒளிரும் சருமத்திற்கு ஆரஞ்சுபழம் , பீட்ரூட் மற்றும் கேரட், தக்காளி ஆகிய காய்கறிகள் அடங்கிய பழச்சாறினை குடித்து வந்தாலே போதும், சருமம் தானாக பொலிவடையும். மன அழுத்தம் மற்றும் வயது முதிர்வு காரணமாக இயற்கையான பளபளப்பை நீங்கள் இழந்திருந்தால், இந்த அற்புதமான பழச்சாறினை குடிக்க வேண்டிய நேரம் இது. சரி இதனை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

எலுமிச்சை, பீட்ரூட், கேரட், தக்காளி ஜூஸ்:

தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு -1
எலுமிச்சை - 1
கேரட் - 2
பீட்ரூட் - 1
தக்காளி - 1
இஞ்சி - சிறிதளவுசெய்முறை:

கேரட், பீட்ரூட், தக்காளி, இஞ்சி ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி அவை அனைத்தையும் ஜூஸரில் சேர்க்க வேண்டும். பின்னர் அதனுள் ஆரஞ்சு சுளைகள் சேர்த்து, எலுமிச்சை சாறினை பிழிந்து விட வேண்டும். இந்த கலவையை ஜூஸரில் நனவு அரைத்து வடிக்கட்டிய பின்னர் குடிக்கலாம். வேண்டுமானால் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.

தர்பூசணி ஃபேஷியல்... பார்லர் போன்ற புத்துணர்ச்சியை வீட்டிலேயே பெறலாம்..!

கேரட் பயன்கள் :

வைட்டமின் ஏ நிறைந்த கேரட் சரும நோய்கள் வராமல் தடுக்க உதவும். முகத்தில் நிறம் மாற்றத்தை தடுக்கும். முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முகத்தை இளமையாக வைத்திருக்க உதவும். உடலில் ரத்ததை சுத்திகரிக்கவும் உதவுவதால் சருமத்தின் பளபளப்பை இயல்பாகவே பெறலாம். கேரட்டில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து, குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.பீட்ரூட் பயன்கள்:

கேரட்டுக்கு நிகரானது பீட்ரூட் ஜூஸ். சருமத்துக்கு போன்று உடலுக்கும் வேண்டிய சத்து கொடுக்கவல்லது. கேரட் பீட்ரூட் சாறாக்கி குடித்தால் 7 நாட்களில் முகத்தில் மாற்றம் அறிவீர்கள். பீட்ரூட்டில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் முகம் பொலிவடையும்.

ஆரஞ்சு பழத்தின் பயன்கள்:

ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.எலுமிச்சையின் பயன்கள்:

எலுமிச்சை சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.

இஞ்சி: இது தோலில் உள்ள கிருமிகளை சுத்திகரிக்க பயன்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: