முடி பராமரிப்பு மற்றும் பொடுகு பிரச்சனையை தீர்க்க இனி விலையுயர்ந்த ஷாம்புகள், கன்டிஷனர்கள் வேண்டாம். ஊறவைத்த அரிசி நீர் இருந்தால் போதும் இவற்றையெல்லாம் சரி செய்துவிடலாம்.
பெண்களை அழகாகக் காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது தலைமுடி. நீளமான, அடர்த்தியான தலைமுடிகளோடு வலம் வரும் பெண்களை புகழ்வதற்கு வார்த்தைகள் இல்லை. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த பல பெண்கள் நீளமான முடியை முன்பெல்லாம் வளர்த்து வந்தனர். ஆனால் தற்போது பேஷன் என்கிற பெயரில் தலைமுடியை விதவிதமாக வெட்டுகின்றனர். இருந்த போதும் ஒரு சில பெண்கள் தங்களின் முடியை பராமரிக்க வேண்டும் என்பதற்கான விலையுயர்ந்த ஷாம்புகள், கண்டிசனர்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இவை முற்றிலும் கெமிக்கல் என்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் இனி கவலை வேண்டாம்.. எந்த செலவும் செய்யாமல் முடி வளர்ச்சி பெறுவதற்கு அரிசி கழுவிய நீர் போதுமாம். இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா?
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் அரிசி கழுவிய நீரை பயன்படுத்தி இயற்கையான முறையில் தலை முடிக்கு ஷ்பா போன்றவற்றை மேற்கொள்வதாக வரலாறுகள் கூறுகிறது. இந்நேரத்தில் எப்படி அரசி கழுவிய நீர் முடி வளர்ச்சி உதவுகிறது? என்னென்ன நன்மைகள் உள்ளது என அறிந்துக்கொள்வோம்.
அ
ரிசி கழுவிய நீர் எப்படி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது?
அரிசி கழுவிய நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, வைட்டமின் ஈ போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள ஃபெருலிக் அமிலம் காரணமாக இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ங்களும் கூந்தலுக்கு வலு சேர்க்கின்றன. இதனால் இயற்கையாகவே முடி வளர்ச்சி அடைகிறது.
எனவே ஒரு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அரிசியை ஊறவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது சாதம் வடித்த வடி தண்ணீரையும் எடுத்து கொள்ளலாம். இத்தண்ணீரை வாரத்திற்கு 2 முறையாவது தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
அரிசி கழுவிய நீரை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
கூந்தலுக்கு பிரகாசம் அளிக்கிறது:
முடி உதிர்தல் மற்றும் டிரையான முடி உள்ளவர்களுக்கு அரிசி நீர் மிகவும் சிறந்தது. வாரத்திற்கு இரு முறை இந்நீரை முடிக்கு தேய்க்கும் போது முடியில் நீரேற்றத்தை அதிகரிக்கிறது. முடியில் ஏற்படும் (split) உடைப்புகளை சரிசெய்வதோடு முடியை பளப்பளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க.. இந்த இயற்கை முறைகளை டிரை பண்ணுங்க
முடி வளர்ச்சியை அதிகரிக்கும்:
அரிசி கழுவிய நீரைத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது பெண்கள் கூந்தலை வலுவாகவும், அடர்த்தியாக வைத்திருக்க உதவுகிறது. இதில் நியாசின், ஃபோலிக் அமிலம் முடியை பராமரிப்பதோடு பல ஊட்டசத்துக்களை வழங்குகிறது. மேலும் அரிசி நீரில் உள்ள அமினோ அமிலம் புதிய முடி வளர உதவுகிறது.
முடி உடைவதைத் தடுக்கும்:
அரிசி நீரில் வைட்டமின்கள் பி, சி மற்றும் ஈ போன்றவை இருப்பதால் முடியை வலுவாகவும், ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் பல மணி நேரத்திற்கு முடியை டிரை ஆகாமல் பாதுகாக்கிறது. எனவே முடி உதிரும், முடி உடையும் வாய்ப்புகள் இல்லை.
மாதவிடாய் கப் பயன்படுத்துவது கர்ப்பம் தரித்தலை பாதிக்குமா..? மருத்துவர் விளக்கம்
முடியைப் பாதுகாக்கும்:
கூந்தலை பராமரிக்க இதுவரை பல கெமிக்கல் கலந்த ஷாம்புகளை பயன்படுத்தி இருப்போம். இனி அரிசி நீரைப்பயன்படுத்தும் போது முடியை பாதுகாக்கிறது. சூரிய ஒளியில் வெளியில் செல்லும் போது கூந்தலுக்கு எந்த சேதமும் ஏற்படுவதில்லை. குறிப்பாக அரிசி நீரில் உள்ள இனோசிட்டால் என்ற மூலப்பொருள்கள் சேதமடைந்த முடியைப் பராமரிக்கவும் உதவியாக உள்ளது.
எனவே விலையுயர்ந்த கெமிக்கல் கலந்தவற்றை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் முடியை வளர்க்க அரிசி நீரை பயன்படுத்த ஆரம்பியுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.