முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கூந்தலின் முனை முடியை அடிக்கடி வெட்டுவதால் வேகமாக வளருமா..? உண்மை இதுதான்..!

கூந்தலின் முனை முடியை அடிக்கடி வெட்டுவதால் வேகமாக வளருமா..? உண்மை இதுதான்..!

முடி வளர்ச்சி

முடி வளர்ச்சி

தலைக்கு நல்ல ஆயில் மசாஜ் செய்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க பெரிதும் உதவும். ஆயில் மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டம் அதிகரித்து சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை மயிர்க்கால்களுக்கு சென்று முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

  • Last Updated :

நாம் அனைவருக்குமே நீளமான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நீளமான கூந்தலை டிரெண்டிங் ஹேர் ஸ்டைல்களுக்கு ஏற்ப மாற்றுவது எளிதாக இருக்கும். நல்ல நீளமான முடி வேண்டும் என்றால் அடிக்கடி முடியை ட்ரிம்மிங் செய்து கொள்வது சரியாக இருக்கும் என்பது பலரும் கூறும் அறிவுரையாக உள்ளது. சில நாட்களுக்கு ஒருமுறை முடியை கட் செய்வதன் மூலம் ட்ரிம் செய்தால் முடி நீளமாக வளரும் என்று பலரும் நம்புகிறார்கள். இது உண்மையா என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

முடியை அடிக்கடி ட்ரிம் செய்வது உண்மையில் அவற்றை வேகமாக வளர உதவுமா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதே. வழக்கமான ட்ரிம் தலைமுடி வளர உதவாது, முடி வளர்ச்சியைத் தூண்டாது. ஏனெனில் உங்கள் தலைமுடியை வெட்டுவது உங்கள் முடியின் நுண்ணறைகளை (follicles) பாதிக்காது. உங்கள் உச்சந்தலையுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒன்று, உங்கள் தலைமுடியை எப்படி வளர செய்யும் என்று கேள்வி எழுப்புகிறார் பிரபல அழகுக்கலை நிபுணர் Blossom Kochhar.

பின் வழக்கமான ட்ரிம்மிங் செக்ஷன்கள் ஏன்?

வழக்கமான ட்ரிம்மிங் செக்ஷன்கள் தலைமுடியை வேகமாக வளர செய்யாது. ஆனால் முடியை ஆரோக்கியமாக, அடர்த்தியாக மற்றும் பளபளப்பாக மாற்றும். தவிர வழக்கமான அடிப்படையில் முடியை வெட்டி ஒழுங்கமைப்பது சரியான திசையில் முடி வளர உதவுகிறது. மேலும் முடியின் அமைப்பையும் நீளத்தையும் பராமரிக்கிறது. முடியின் முனைகள் பிளவுபட வாய்ப்புள்ளவர்கள் ட்ரிம்மிங் செக்ஷன்கள் செல்வது முடியை பலவீனம் மற்றும் எளிதில் உடைந்து போகும் முடி போன்ற சிக்கல்களை சரி செய்ய உதவும்.

நம் முடி எப்படியும் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 முதல் 1.5 செமீ வரை வளரும். எனவே முடியை 1 செமீ நீளம் வெட்டுவது பற்றி கவலை கொள்ளாதீர்கள். உங்கள் தலைமுடி நீளத்தைக் கொஞ்சமும் கட் செய்ய விருப்பம் இல்லை என்றால் dust your hair முறையை செய்ய சொல்லி சிகை அலங்கார நிபுணர்களிடம் கேளுங்கள். உங்கள் முடி நீளத்தை குறைக்காமல் இது பிளவுபட்ட முனைகள், இறந்த மற்றும் சேதமடைந்த முடிகளை மட்டுமே நீக்குகிறது.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க வேறு என்ன செய்வது?

தலைக்கு நல்ல ஆயில் மசாஜ் செய்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க பெரிதும் உதவும். ஆயில் மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டம் அதிகரித்து சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை மயிர்க்கால்களுக்கு சென்று முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெயை அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு ஒவ்வொரு வாரமும் மசாஜ் செய்வதன் மூலம் உங்களின் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.

ஹை ஹீல்ஸ் போட்டு பாதங்களில் வலி அதிகமாக உள்ளதா..? இதை கடைப்பிடியுங்கள்..!

முடி நீளமாக மற்றும் அடர்த்தி, வலுவாகவும் இருக்க புரதம், ஒமேகா 3 மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சீரான உணவு பழக்கத்தை பேண வேண்டும். நீங்கள் சரியாக சாப்பிடாவிட்டால் ஆரோக்கியமான நீளமான கூந்தலைப் பெற முடியாது. எனவே டயட்டில் நிறைய பச்சை இலைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் நிறைய தண்ணீர் சேர்க்கவும். சரியான உச்சந்தலை பராமரிப்பு முடி வளர்ச்சியை தூண்டும் என்றாலும் உங்கள் முடிக்கு உயிர் கொடுக்க இறந்த முடி, பிளவுபட்ட முடிகளை அகற்ற வேண்டும்.

எதனால் முடி உதிர்தல் ஏற்படுகிறது?

மன அழுத்தம் முதல் மாசுபாடு வரை முடி உதிர்தலின் அடிப்படை பிரச்சனைக்கு பல காரணங்கள் இருக்கலாம். இவை தவிர ஊட்டச்சத்து குறைபாடுகள், பொடுகு, எண்ணெய் பசை, தைராய்டு அல்லது ஹார்மோன் சமநிலையின்மை, ரசாயன லோஷன்களின் பயன்பாடு, பரம்பரை மற்றும் ஹார்மோன்களும் காரணமாக இருக்கலாம்.

முடி உதிர்வது & முடி உடைவது வேறுபாடு என்ன?

top videos

    முடி உதிர்தல் என்பது முடி வேரில் இருந்து உதிர்வதால் ஏற்படுகிறது. சாதாரணமாக தினமும் 50 முதல் 100 முடிகள் உதிர்வது இயல்பு. முடி உடைவது என்பது உங்கள் தலைமுடியின் நீளத்தில் எங்காவது உடைவது ஆகும்.

    First published:

    Tags: Hair care, Hair fall