Home /News /lifestyle /

ஐஸ் வாட்டரில் சில வினாடிகள் முகத்தை மூழ்க வைத்தால் பலன் கிடைக்குமா..? கொரியன் பியூட்டி டிப்ஸ்...

ஐஸ் வாட்டரில் சில வினாடிகள் முகத்தை மூழ்க வைத்தால் பலன் கிடைக்குமா..? கொரியன் பியூட்டி டிப்ஸ்...

ஐஸ் வாட்டர் பியூட்டி

ஐஸ் வாட்டர் பியூட்டி

நல்ல மிருதுவான மற்றும் சுத்தமான சருமத்தை பெற பலர் ஹாட் ஃபேஷியல் ஸ்டீமை விரும்பினாலும், ஒரு கொரிய ஸ்கின்கேர் ஹேக் தற்போது சருமப் பராமரிப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

வழக்கமான தோல் பராமரிப்பு நடைமுறையில் மிகவும் முக்கியமானது க்ளென்சிங் (cleansing) அதாவது சுத்தம் செய்வது. ஏனென்றால் முகம் சுத்தமாக இருக்கும் போது தான் பயன்படுத்தும் தோல் பராமரிப்பு பொருட்கள் நன்றாக சருமத்தில் உறிஞ்சப்பட்டு, அவை மிகவும் திறம்பட செயல்படும்.

நல்ல மிருதுவான மற்றும் சுத்தமான சருமத்தை பெற பலர் ஹாட் ஃபேஷியல் ஸ்டீமை விரும்பினாலும், ஒரு கொரிய ஸ்கின்கேர் ஹேக் தற்போது சருமப் பராமரிப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஐஸ் தண்ணீரில் முகம் நனைப்பது தான் அந்த எளிமையான கொரியன் ஹேக். ஆம் உலகெங்கிலும் உள்ள மக்கள் உண்மையில் இந்த ஸ்கின்கேர் ஹேக்கை மிகவும் விரும்புகின்றனர். ஐஸ் வாட்டரை பயன்படுத்துவதால் உங்கள் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். உங்கள் தோல் பராமரிப்பு இலக்குகளை அடைய இந்த எளிய முறையை உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்கலாம். இதனிடையே Deyga Organics நிறுவனர் ஆர்த்தி ரகுராம் வைரலாகி வரும் இந்த ஹேக் குறித்த பல விஷயங்களை ஷேர் செய்து உள்ளார்.



ஐஸ் வாட்டரில் உங்கள் முகத்தை நனைக்க வேண்டும்...

இந்த ஹேக்கை நீங்கள் வீட்டில் செய்ய சில ஐஸ் க்யூப்ஸுடன் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பவுல் தண்ணீர் உங்களுக்கு தேவை. பெரிய பவுல் என்றால் உங்கள் முகம் உள்ளே நுழையும் அளவிற்கானது. ஐஸ் க்யூப்கள் போடப்பட்ட ஜில் தண்ணீரை எடுத்து கொண்டு, உங்கள் முகத்தை பவுலில் இருக்கும் ஜில் தண்ணீரில் 30 விநாடிகள் மூழ்க வைக்கவும். பின்னர் உங்கள் முகத்தை ஐஸ் தண்ணீரிலிருந்து வெளியே எடுத்த பிறகு ஒரு டவலால் லேசாக துடைக்கவும். வழக்கமாக இந்த முறையை ஒரு நாளைக்கு இரண்டு முறை பின்பற்ற பரிந்துரைக்கப்படுகிறது.

சாக்லேட் சாப்பிடுவது ஒன்றை தலைவலியை தூண்டுமா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்

இந்த ஐஸ் வாட்டர் ஹேக் உண்மையில் வேலை செய்யுமா?

முகத்தை ஸ்க்ரப் செய்ய ஜில் நீரைப் பயன்படுத்துவது பழங்கால தொழில் நுட்பமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐஸ்-கோல்ட் வாட்டர் எரிச்சல் ஏற்பட்டுள்ள முகத்தை சரி செய்ய ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. எனவே நீங்கள் முகப்பருவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது தோல் வெடிப்புகள் இருந்தாலும், உங்கள் முகத்தை ஐஸ் வாட்டரில் மூழ்க செய்வது அந்த நிலைமைகளில் இருந்து விடுபட உதவும். பளபளப்பான மற்றும் இளமையான சருமத்தை அடைய விரும்பினால், உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் இந்த முறையை தவறாமல் பயன்படுத்துவது பல அதிசயங்களை செய்யும்.



உங்கள் முகத்தை ஐஸ் வாட்டரில் மூழ்க செய்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்...

உடனடி சரும பளபளப்பு:

உங்கள் முகம் மந்தமாகவும், பொலிவு இல்லாமலும் இருந்தால் ஐஸ் வாட்டரில் உங்கள் முகத்தை நனைப்பது, உடனடி பிரகாசத்தை பெற உதவும் எளிய வழி. இதனால் உங்கள் முகம் ரத்த ஓட்டம் பெறுகிறது, மேலும் சரும செல்களுக்கு ஆக்ஸிஜன் சென்று பளபளப்பாகிறது.

வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாப்பது எப்படி - எளிமையான டிப்ஸ் இதோ

நல்ல தோற்றம்:

ஐஸ் வாட்டர் உங்கள் போர்ஸ்களை டைட் செய்கின்றன. ஜில் தண்ணீரில் உங்கள் முகத்தை மூழ்கடித்து நனைத்து எடுப்பதால் சருமத்திற்கு ஒரு நல்ல தோற்றம் கிடைக்கிறது. சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளை தடுக்க விரும்பினால் இது ஒரு சிறந்த ஹேக் ஆகும். இளமையை தக்கவைத்து, முதுமையை தாமதப்படுத்துகிறது.



லாங்-லாஸ்ட்டிங் மேக்கப்:

ice-cold வாட்டர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் போர்ஸ்களை குறைக்கிறது. இது உனக்குள் முகத்தில் போடப்படும் மேக்கப் நீண்டநேரம் இருக்க உதவுகிறது. உங்கள் மேக்கப்பை தொடங்கும் முன், முகத்தை ஐஸ் தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து பின் நடக்கும் மேஜிக்கை நீங்களே பாருங்கள்.

முக எரிச்சலை குறைக்கும் :

முகப்பரு, சன்பர்ன் மற்றும் தோல் வெடிப்பு ஆகியவை பொதுவான தோல் அழற்சியின் நிலைகள். இந்த சிக்கலை தீர்க்க ஐஸ் வாட்டரில் முகத்தை நனைப்பது சிறந்த பலனை தரும். குளிர்ந்த நீர் சருமத்தை மென்மையாக்குகிறது. மேலும் த்ரெடிங் அல்லது ஷேவிங் செய்த பிறகு இந்த முறை மிகவும் பயனுள்ளதாகவும், எரிச்சலையும் குறைக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Ice water, Korean Beauty Tips

அடுத்த செய்தி