ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கொத்தமல்லியில் என்றைக்காவது அழகுப் பராமரிப்பு செஞ்சிருக்கீங்களா..? இப்பவும் மிஸ் பண்ணிடாதீங்க..!

கொத்தமல்லியில் என்றைக்காவது அழகுப் பராமரிப்பு செஞ்சிருக்கீங்களா..? இப்பவும் மிஸ் பண்ணிடாதீங்க..!

சமைத்த பிறகு இறுதியாக உணவில் தூவப்படும் கொத்தமல்லி தழைகள் வாசனைக்கானது மட்டுமல்ல பல வகையான மருத்துவ ஆரோக்கியங்களையும் கொண்டுள்ளது. அவை என்னென்ன தெரியுமா..?

சமைத்த பிறகு இறுதியாக உணவில் தூவப்படும் கொத்தமல்லி தழைகள் வாசனைக்கானது மட்டுமல்ல பல வகையான மருத்துவ ஆரோக்கியங்களையும் கொண்டுள்ளது. அவை என்னென்ன தெரியுமா..?

கொத்தமல்லியில் வைட்டமின் சி இருப்பது சருமத்தில் மறைந்திருக்கும் அழக்கு, நச்சு, இறந்த செல்களை நீக்க உதவும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொத்தமல்லியில் மெக்னீசியம், இரும்புச் சத்து இருப்பது உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் அதில் ஒலிந்திருக்கும் அழகு ரகசியங்களும் ஏராளம் என்பது தெரியுமா..? தெரிந்துகொள்ள மேலும் படிக்க.!

  இளமையை மீட்டுத் தரும் : யாருக்குதான் இளமை பிடிக்காது. உங்களுக்கும் ஆசை எனில் உங்கள் இளமையான சருமத்தை பாதுகாக்க கொத்தமல்லியை அரைத்து அதனுடன் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனால் முகச் சுருக்கங்கள், தொங்கும் தோல் இறுகி பொலிவாக மாறும்.

  கோடையில் வெப்பம் மட்டுமல்ல... இந்த விஷயங்களையும் நீங்கள் சமாளிக்க வேண்டும்..!

  நச்சுகளை நீக்கும் : கொத்தமல்லியில் வைட்டமின் சி இருப்பது சருமத்தில் மறைந்திருக்கும் அழக்கு, நச்சு, இறந்த செல்களை நீக்க உதவும். எனவே கொத்தமல்லியை மைய அரைத்து முகத்தைக் கழுவிவிட்டு இந்த பேஸ்டை அப்ளை செய்யுங்கள். 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

  பளிச் முகம் : கொத்தமல்லி பேஸ்டுடன் ஓட்ஸ் மற்றும் முட்டை வெள்ளைப் பகுதி இரண்டையும் சேர்த்து நன்குக் கலக்கிக்கொள்ளுங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து நன்குக் காய்ந்து உதிரும்போது கழுவுங்கள்.

  வறண்ட உதடுகள் : எலுமிச்சை சாறுடன் கொத்தமல்லி பேஸ்ட் கலந்து இரவு தூங்கும் முன் உதட்டில் பேக் போல் அப்ளை செய்து மறுநாள் காலை கழுவுங்கள். மாற்றத்தை நீங்களே காணலாம்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: