• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முகப்பருவை சரி செய்ய உங்க சமையலறையில் இருக்கும் பூண்டே போதும்...

முகப்பருவை சரி செய்ய உங்க சமையலறையில் இருக்கும் பூண்டே போதும்...

காட்சி படம்

காட்சி படம்

உங்களுக்கு முகப்பரு பிரச்சனை இருக்கா ? அப்ப பூண்டை இந்த மாதிரி பயன்படுத்துங்க..

  • Share this:
    பதின் பருவ இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது முகப்பருக்கள். முகப்பரு இருந்தால் ஒருவரின் அழகு கெடுவதுமட்டுமின்றி தன்னம்பிக்கையும் பாதிக்கப்படும். கரும்புள்ளிகளும், முகப்பருக்களும் தோன்றுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

    முகப்பரு ஏற்படுவதற்கான காரணம் :

    அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. உடல் சூடு, ஜீன் மாற்றம் மற்றும் காற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும். பொடுகுப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். பருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும். அழகு சாதனங்களில் உள்ள வேதிப்பொருட்களினாலும் முகத்தில் பருக்கள், தேமல்கள் ஏற்படலாம். சில உணவுகள் முகத்தில் பரு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். பித்தம் அதிகமாவதாலும், ஐஸ்கிரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும்.

    ஏன் பூண்டு பயன்படுத்தலாம்?

    ஆங்கில மருந்துகளைக் காட்டிலும் வீட்டு சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்துகூட முகத்தில் உள்ள பருக்களை நீக்க முடியும். பூண்டு, காலம் காலமாக மிகச்சிறந்த நோய் நீக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு மற்றும் அதன் தோலில் இருக்கும் அல்லிசின் எனப்படும் ஆர்கனோசல்பர் கலவை ஆன்டிவைரஸ் மற்றும் பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. முகத்தில்தோன்றும் வீக்கம் மற்றும் சிவந்த தன்மையை குறைக்கவும் இவை உதவியாக உள்ளன. சிங்க், செலேனியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 ஆகிய பண்களும் பூண்டில் உள்ளதால், அவை முகத்தில் எண்ணெய் சேருவதை தடுத்து முகம் பொலிவாக இருக்க உதவுகின்றன.

    பூண்டை எவ்வாறு உபயோகிக்கலாம்?

    1. தோலை நீக்கிய பின்பு பூண்டை நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். அதனை முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மீது நேரடியாக அப்ளை செய்யுங்கள். சுமார் 10 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். உங்களின் முகப்பரு சதைப்பகுதிக்குள்ளும் இருந்தால், இரவு முழுவதும் பூண்டை முகத்தில் தடவிக்கொண்டு காலையில் எழுந்து சுத்தமாக முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

    2. பூண்டு தோலில் பேஸ்ட் செய்து, அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள். அவற்றை முகத்தில் பருக்கள் இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்துவிடுங்கள். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் சுத்தமாக்குங்கள்.

    also read : வீட்டு விசேஷத்திற்கு என்ன மாதிரி ட்ரெஸ் போடலாம் என்று குழப்பமா இருக்கா ? இந்த மாதிரி பாவாடை தாவணி காஸ்டியூம் போடுங்க..

    3. பூண்டு தோலுடன் யோகார்டை (yoghurt) சேர்த்து பேஸ்ட் ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மீது நன்கு மசாஜ் செய்து சிறிது நேரம் விட்டுவிட வேண்டும். கொஞ்சம் நேரம் கழித்து சுத்தமான நீரால் முகத்தை கழுவி, தண்ணீர் இல்லாமல் தோல் வறண்டு இருக்குமாறு செய்யுங்கள்.

    4. பூண்டு தோல் மற்றும் தேன் இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அவற்றுடன் மஞ்சள் தூளை சேர்த்து பருக்கள் மற்றும் சிவந்த பகுதிகள் மீது அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு முகத்தை தண்ணீரால் கழுவிக்கொள்ளுங்கள்.

    ஒவ்வொருவரின் தோலின் அமைப்பும் வேறுவிதமான பண்புகளைக் கொண்டிருப்பதால் அதற்கேற்ப இந்த ரெமிடியை பயன்படுத்த வேண்டும். பூண்டு பேஸ்டை அப்ளை செய்தபிறகு உங்களின் முகத்தில் அதிகமான அரிப்பு ஏற்பட்டால்,உடனடியாக முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். ஏனென்றால், உங்களின் தோலுக்கு அந்த ரெமிடி ஒத்துப்போகாமல் கூட இருக்கலாம். மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி இயற்கையான முறையில் உங்களின் முகப்பருக்களுக்கு தீர்வு காணுங்கள். முகம் அழகாகவும், பொலிவாகவும் நிச்சயம் மாறும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: