Home /News /lifestyle /

பொடுகு தொல்லை, வறண்ட கூந்தல் பிரச்சனையா..? இந்த ஹேர் மாஸ்க் அப்ளை பண்ணுங்க..

பொடுகு தொல்லை, வறண்ட கூந்தல் பிரச்சனையா..? இந்த ஹேர் மாஸ்க் அப்ளை பண்ணுங்க..

ஹேர் மாஸ்க்

ஹேர் மாஸ்க்

Hair Care Tips : உங்களின் முடியை மென்மையானதாக மாற்ற விரும்பினால் நீங்கள் இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வறண்ட சருமம், வறண்ட முடி, பொடுகு தொல்லை, முடி உதிர்வு ஆகிய பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டு அவஸ்தை படுகிறீர்களா? எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும் சரியாகவில்லையா? இதோ உங்கள் வீட்டிலேயே கிடைக்கும் சாதாரண தயிரை பயன்படுத்தி முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.

இன்றைய நவீன காலத்தில் முடி உதிர்வு என்பது ஆண்கள், பெண்கள் என்ற பாரபட்சம் இன்றி இளம் வயதினர் தொடங்கி அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் வெளித்தோற்றம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு மனதளவிலும் மிகப்பெரிய தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். முடி உதிரும் பிரச்சனை மட்டுமல்லாமல் முடி சம்பந்தமான வேறு பல பிரச்சினைகளும் மன உளைச்சலை ஏற்படுத்தும். வறண்ட சருமம், வறண்ட முடி, அதிக அளவிலான பொடுகு தொல்லை ஆகியவை ஒருவரை நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மனதளவில் பாதித்துவிடும்.

இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலில் வெப்பம் அதிகரிப்பது ஆகும். முக்கியமாக தலைப்பகுதியில் வெப்பம் அதிகமாக அதிகமாக அங்குள்ள மேல் தோலானது மிகவும் வறண்டு செதில் செதிலாக மாறி பின்பு அவை பொடுகாக உதிர துவங்கும். அந்த நேரத்தில்தான் பொடுகு தொல்லை வறண்ட சருமம் மற்றும் தாங்க முடியாத அரிப்பு ஆகியவையும் ஏற்படுகிறது.நீங்கள் வெளியே சிகிச்சை எடுப்பவராக இருந்தால் சில நேரங்களில் அவர்கள் அளிக்கும் மருந்துகளில் உள்ள வேதிப்பொருட்களே கூட உங்களின் முடியை இன்னும் அதிகமாக பாதிக்கலாம். இவற்றை குணப்படுத்த நாம் வீட்டிலே அன்றாடம் பயன்படுத்தும் தயிறை வைத்தே உங்கள் உடல் வெப்பத்தை தணிப்பதோடு முடியும் வேர்கால்களுக்கும் வலுவை கூட்ட முடியும். மேலும் இது மிக மிகக் குறைந்த அளவில் செய்யப்படுவதோடு இதனால் அடையும் பயன் மிக பெரிதாக இருக்கும். தயிரை பயன்படுத்தி எந்த வகையில் எல்லாம் நம் முடிக்கு நாமே சிகிச்சை அளிக்கலாம் என்பதை பார்ப்போம்.

also read : முடி வளர்ச்சியை அதிகரிக்க டிரெண்டாகும் ஹேர் டஸ்டிங் முறை : முழுமையான தகவல் இங்கே...

தயிர் மற்றும் சோற்றுக்கற்றாழை ஹேர் மாஸ்க்:

இந்த ஹேர் மாஸ்கை வெறும் மூன்று பொருட்களை வைத்து நீங்கள் செய்ய முடியும். ஒரு கப் தயிர், 5-6 டீஸ்பூன் சோற்றுக்கற்றாழை ஜெல், இரண்டு டீஸ்பூன் தேன். இவற்றைக் கொண்டே நாம் ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம்

செய்முறை:

மூன்று பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்பு அந்தக் கலவையை உங்கள் முடியின் மீது மெதுவாக அப்ளை செய்ய வேண்டும். முதலில் உங்கள் முடியில் வேர் கால்களில்படும்படி இதனை அப்ளை செய்து அதன் பிறகு தலை முழுவதையும் அப்ளை செய்ய வேண்டும். 30-40 நிமிடங்கள் வரை அப்படியே உலர விடுங்கள். அதன் பின்பு மிதமான சூடு நீரால் முடியை கழுவி விடுங்கள்

(பின்குறிப்பு: வறட்சியான முடியை உடையவர்கள் இந்த கலவையுடன் ஒரு வாழைப்பழத்தை நன்றாக குழைத்து இந்த கலவையில் சேர்த்து அதன் பின்பு முடியில் அப்ளை செய்யலாம்).

ஆலிவ் ஆயில் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்:

உங்களின் முடியை மென்மையானதாக மாற்ற விரும்பினால் நீங்கள் இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம். ஒரு கப் தயிர், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸ் தேவையான அளவு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம்.செய்முறை :

தயிரையும் ஆலிவ் ஆயிலையும் நன்றாக கலக்கவும். வேறொரு பெரிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு லெமன் ஜூஸையும் தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு உங்கள் முடியை நன்றாக ஷாம்பு போட்டு அலசிய பின் தயிர் மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மாஸ்கை சற்று ஈரமான நிலையில் முடி இருக்கும் போது அதன் மீது தடவவும். அதை 20 நிமிடங்கள் காயவிட்ட பின் சுத்தமான தண்ணீரை கொண்டு உங்கள் முடியை கழுவும். பிறகு ஏற்கனவே கலந்து வைத்த தண்ணீர் கலந்த லெமன் ஜூஸ் கலவையை வைத்து மீண்டும் கழுவும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தயிர் மற்றும் வெந்தயம் ஹேர் மாஸ்க் :

பொடுகில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த ஹேர் மாஸ்க் உதவும். ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கப்பட்ட வெந்தய விதைகள் மற்றும் தயிர் ஆகியவை நமக்குத் தேவைப்படும் பொருட்கள் ஆகும்

also read : மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார் செய்வது.?

செய்முறை:

வெந்தய விதைகள் அல்லது மெத்தி விதைகள் எடுத்து ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கவும். காலையில் அவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும். அந்தக் கலவையை உங்கள் தலைமுடியின் வேர் பகுதியில் படுமாறு நன்றாக அப்ளை செய்ய வேண்டும். அரை மணி நேரம் காய வைத்த பிறகு மிதமான சூடு நீரில் உங்கள் முடியை கழுவவும்.தயிர் ஹேர் மாஸ்க்:

செய்முறை:

தேவையான அளவு புளித்த தயிரை எடுத்து உங்கள் தலையில் தடவ வேண்டும். ஐந்து முதல் பத்து நிமிடத்திற்கு நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு அதனை காய வைக்கவும்.அதன் பிறகு மிதமான சுடுநீரில் உங்கள் முடியை கழுவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வதை பெருமளவு இது தடுக்கும்

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Beauty Tips, Hair care, Hair Mask

அடுத்த செய்தி