வயது செல்ல செல்ல முகத்தில் கோடுகள், தோல் சுருக்கங்கள், பொலிவிழந்த சருமம் போன்றவை தோன்றும். இருப்பினும் இவற்றையெல்லாம் சமாளித்து அழகு நிறைந்த முகத்த்தைப் பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கும். ஆனால் அதை எல்லாவற்றையும் விட சருமத்தை ஹெல்தியாக வைத்துக்கொள்ள ஃபேஸ் சீரம் போதும் என்கின்றனர். ஏன் தெரியுமா..?
பளிச் முகம் : துக்காமின்மை, வேலை காரணங்களால் உங்கள் சருமம் பொலிவிழந்து காணப்பட்டால் சீரம் பயன்படுத்தும்போது செல்களுக்கு புத்துயிர் தந்து இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தும். இதனால் முகம் பளிச்சென மாறும்.
சருமத்துகள்கள் இறுகும் : சருமத்தில் உள்ள துகள்கள் பெரிதானால் அதனால் ஏகப்பட்ட சருமப் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இதை தவிர்க்க சீரம் அந்த துகள்களை இறுகச் செய்து சீரான சருமத்தை அளிக்கும்.
Also Read : தினமும் பப்பாளி சாப்பிட்டால் இந்த நோயை கட்டுக்குள் வைக்குமாம்..
மென்மையான சருமம் : சீரம் கொண்டு முகத்தில் மசாஜ் செய்வதால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் சருமம் மென்மையாக மாறுகிறது.
சுருக்கங்கள் களையும் : C0Q10, ரெட்டினால் மற்றும் காப்பர் போன்ற மூலக்கூறுகள் சீரத்தில் இருப்பதால் அவை உங்களை எப்போதும் இளமையாகவே காட்டும்.
எப்படி பயன்படுத்த வேண்டும் : காலை மற்றும் இரவு தூங்கும் முன் அப்ளை செய்து கொள்ளலாம். வறண்ட சருமத்தினர் மாய்ஸ்சரைசர் போன்றும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Face serum