மேக்கப்பிற்கு அதிக நேரம் செலவழிக்காமல் கம்பீரமாகவும், அழகாகவும் இருக்க நாம் அனைவரும் விரும்புவோம். எனவே, நாம் நல்ல மேக்கப் ஹேக்குகளை தேடுகிறோம். ஆனால், அனைத்து விஷயங்களை பொறுமையாக செய்ய யாருக்கும் நேரம் இல்லை.
தற்போதைய டிஜிட்டல் சகாப்தத்தில் ஒவ்வொருவரும் மேக்கப் நிபுணராக மாறியுள்ளனர். தங்களின் தனி திறமையால் பிரபலங்களின் மேக்கப் லுக்கை அப்படியே உருவாக்குவதுடன், சில முக்கியமாக மேக்கப் ஹேக்குகளையும் பகிர்கிறார்கள். நாம் மேக்கப் மீது உள்ள ஆர்வத்தால், சமூக ஊடகங்களில் மேக்கப் ஹேக்குகளை பார்ப்போம். ஆனால், சில ஹேக்குகள் உண்மையில் பெரிய தவறு என்பது உங்களுக்குத் தெரியுமா?.
மேக்கப்பை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. ஏனென்றால், மேக்கப் சருமத்தை பளபளப்பாக காட்டுவதோடு, மற்றவர்களை ஈர்க்கிறது. எனவே தான் அதற்காக அதிக நேரத்தை சிலர் செலவழிக்கிறார்கள். இன்னும் சிலர், பல்வேறு மேக்கப் பொருட்களை சோதித்து மற்றவர்களுக்கு பரிந்துரைப்பார்கள். அந்த வைரல் வீடியோக்கள் உண்மையில் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அப்படி நீங்கள் ஒருபோதும் முயற்சி செய்ய கூடாத சில மேக்கப் ஹேக்குகளை இங்கே காணலாம்.
லிப் லைனரை ஐ லைனராக பயன்படுத்துதல்
லிப் லைனர்கள் கண்களை எரிச்சலூட்டும். இது நீண்ட கால நிறமிகளைக் கொண்டிருப்பதால், இந்த ஹேக்கை முயற்சிக்க வேண்டாம். கருவளையம் இருந்தால் உங்கள் கண்களை அழகாகவும், எடுப்பாகவும் காட்ட சிறிது காஜலை உபயோகிக்கவும்.
லிப்ஸ்டிக்-யை ப்ளஷ் ஆக பயன்படுத்துதல்
பெரும்பாலான மேக்கப் ஆர்வலர்கள் பயன்படுத்தும் தந்திரங்களில் ஒன்று, லிப்ஸ்டிக்யை ப்ளஷ் ஆக பயன்படுத்துவது. அடர்த்தியான நிறமுடைய லிப்ஸ்டிக் அல்லது லிக்வீடு மேட் லிப்ஸ்டிக்யை ப்ளஷ் ஆக பயன்படுத்துவது உங்கள் சரும ஆரோக்கியத்தை கெடுக்கலாம்.
Also Read : டிரெண்டில் உள்ள பிரா வகைளை பற்றி தெரியுமா..? உங்களுக்காக சில இரகசியங்கள்..
ஏனெனில், அவற்றில் உதட்டில் உள்ள பிக்மன்டேஷனை குறைப்பதற்கான அமிலங்கள் உள்ளது. எனவே, இவற்றை கன்னங்களில் பயன்படுத்தினால் கன்னம் கருமையாவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, லைட் கலர் கிரீம்களை நீங்கள் ப்ளஷ் ஆக பயன்படுத்தலாம்.
ஐ லாஷ்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துதல்
அனைவரும் அடர்த்தியான மற்றும் நீளமான ஐ லாஷ்களை விரும்புவோம். அதற்காக உங்கள் கண் இமைகளுக்கு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. இதனால், உங்கள் கண் இமைகள் தடிமனாகவோ அல்லது நீளமாகவோ வளராது. இதன் விளைவாக உங்கள் கண்களுக்குக் கீழே சிறிய நீர்க்கட்டிகள் உருவாகும். நீண்ட மற்றும் கருமையான கண் இமைகளை பெற ஆமணக்கு எண்ணெயை தடவவும்.
கிளென்சர் மற்றும் ப்ளாக்கேட் ரிமூவரை பசையுடன் உபயோகிப்பது
இந்த ஹேக்கை ஒருபோதும் ட்ரை பண்ணாதீர்கள். உங்கள் கைகளில் பசையை ஊற்றி அதை காய வைத்து உரித்து விளையாடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால், அதை உங்கள் முகத்தில் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பசையில் மனித உடலுக்கு நீங்கி விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படும். இதை சருமத்திற்கு பயன்படுத்தினால், தோல் வெடிப்புகள் மற்றும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
டியோடரண்ட் ரோல்ஸ்-யை பிரைமராக பயன்படுத்துதல்
இது மிகவும் வினோதமான ஹேக், இதை யாரும் பயன்படுத்த வேண்டாம். இது பல இரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அவை உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்வதுடன், அழற்சிகள் ஏற்படலாம்.
புருவங்களில் சோப்பு பயன்படுத்துதல்
புருவங்களில் சோப்பை பயன்படுத்துவதால், முடி உதிர்வு பிரச்னையை சந்திக்க நேரிடும். எனவே, இந்த ஹேக்கை நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சோப்பில் உள்ள கெமிக்கல் உங்கள் புருவங்களில் உள்ள முடியை பலவீனமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Hacks, Beauty Tips, Makeup