• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பார்லர் இல்லை என்றாலும் கவலை வேண்டாம்... வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் 'கோல்ட் ஃபேஷியல்'..!

பார்லர் இல்லை என்றாலும் கவலை வேண்டாம்... வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் 'கோல்ட் ஃபேஷியல்'..!

 கோல்ட் ஃபேஷியல்

கோல்ட் ஃபேஷியல்

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பார்லருக்கு நிகரான அழகுப் பராமரிப்பு, பொலிவையும் மீட்டெடுக்க முடியும்.

  • Share this:
    முகத்தை பராமரிக்க பார்லர்தான் செல்ல வேண்டும் என்றில்லை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பார்லருக்கு நிகரான அழகுப் பராமரிப்பு, பொலிவையும் மீட்டெடுக்க முடியும். 

    ஸ்டெப் 1 : முதலில் பிசுக்கை போக்க காய்ச்சாத பாலை பஞ்சில் நனைத்து முகம், கழுத்தை துடையுங்கள்.

    ஸ்டெப் 2 : ஈரம் காய்ந்ததும் எலுமிச்சை சாறு 1 tsp, சர்க்கரை 1 tsp மற்றும் தேன் 1/2 tsp எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் இறந்த செல்கள், அழுக்குகள் வெளியேறும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.

    முட்டிக்கு மேல் உடை அணியும்போது கால் முட்டிக் கருமை சங்கடத்தை ஏற்படுத்துகிறதா..? இதோ ஹோம் டிப்ஸ்

    ஸ்டெப் 3 : கற்றாழை ஜெல் - 2 tsp, எலுமிச்சை சாறு 1 tsp, ஆலிவ் எண்ணெய் 1 tsp என எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். தற்போது கொஞ்சம் எடுத்து முகத்தில் தேய்த்து வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்களுக்கு இப்படி செய்யுங்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின் நீரில் கழுவி விடுங்கள்.

     



    ஸ்டெப் 4 : கடலை மாவு 2 tsp, மஞ்சள் தூள் - 1/4 tsp, பால் - 2 tsp, தேன் 1 tsp, ரோஸ் வாட்டர் 1 tsp என அனைத்தையும் சேர்த்து நன்குக் கலக்குங்கள். முகத்தில் இந்த பேஸ்டை அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வையுங்கள். இறுதியாகா கழுவும் முன் கொஞ்சம் தண்ணீர் விட்டு 5 நிமிடம் மசாஜ் செய்துவிட்டுக் கழுவுங்கள்.

    தற்போது உங்கள் முகம் முன்பை விட பளபளப்பாக ஜொலிப்பதை உணரலாம்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: