வீட்டிலேயே வேக்ஸிங் செய்யும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை..!

வேக்ஸிங் செய்யும் போது பொறுமை மிக அவசியம். ஒரு இடத்தில் அமர்ந்து நேரம் ஒதுக்கி பொறுமையாக செய்ய வேண்டும்.

வீட்டிலேயே வேக்ஸிங் செய்யும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை..!
வேக்ஸிங்
  • Share this:
உடலில் தேவையற்ற முடிகளை நீக்க பலரும் வீட்டிலேயே வேக்ஸிங் செய்துகொள்கின்றனர். ஒருவகையில் இதுவும் ஆபத்தான விஷயம்தான். இதை செய்வதாலும்
எரிச்சல், வலி, வீக்கம் போன்றவை உண்டாகலாம். எனவே செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்ன என்று பார்க்கலாம்.

செய்ய வேண்டியவை :


வேக்ஸிங் கிரீம், லோஷன், ஸ்ட்ரிப் என வாங்கினால் அவற்றின் பின்குறிப்புகளை படித்துவிட்டு உங்கள் சருமத்திற்கு ஏற்ப வாங்குங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள
பின்குறிப்புகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

வேக்ஸிங் செய்யும் முன் முடி உள்ள இடத்தை எண்ணெய், பிசுபிசுப்பு, அழுக்குகள் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு தொடங்குங்கள். அதேபோல் வேக்ஸிங் செய்த பிறகுமாய்ஸ்சரைஸர் அப்ளை செய்வதை மறவாதீர்கள். இது எரிச்சலைக் கட்டுப்படுத்துத்துவதோடு, ஈரப்பதம் அளிக்கும்.

வேக்சிங் செய்யும் முன் ஸ்கிரப்பிங் அல்லது மசாஜ் செய்தால் முடியின் வேர்கள் சிலிர்த்து இரத்த ஓட்டம் இருக்கும். இதனால் எளிமையாக முடிகளை நீக்கிவிடலாம்.
வலியும் இருக்காது.

எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு முடி எளிதில் வெளியேறாது. அவர்கள் வேக்ஸிங் ஸ்ட்ரிப் பயன்படுத்தினால் அந்த இடத்தில் பவுடர் தேய்த்துவிட்டு செய்தால் எண்ணெய் இருக்காது.

வேக்ஸிங் செய்யும் போது பொறுமை மிக அவசியம். ஒரு இடத்தில் அமர்ந்து நேரம் ஒதுக்கி பொறுமையாக செய்ய வேண்டும்.செய்யக் கூடாதவை :

பிறப்புறுப்பில் வேக்ஸிங் செய்யாதீர்கள். இது மிகவும் ஆபத்தானது.

மிகவும் சிறிய அதாவது 1/4 இஞ்ச் கொண்ட முடிகளை வேக்ஸிங் மூலம் அகற்ற முயற்சிக்காதீர். இது கடுமையான வலியை ஏற்படுத்தும்.

வேக்ஸிங் கிரீம், லோஷனை பயன்படுத்தும்போது அதன் வெப்பநிலை எவ்வாறு உள்ளது என டெஸ்ட் செய்துவிட்டு முழுவதும் அப்ளை செய்யவும். கடுமையான எரிச்சல்,
வெப்பநிலை சருமத்தை பொசுக்கிவிடும். சரும நிறத்தை மாற்றிவிடும்.

முடி எந்த வாட்டத்தில் வளர்கிறது அந்த திசையை நோக்கி கிரீம் , ஸ்ட்ரிப் அப்ளை செய்து நீக்க வேண்டும். புண், காயங்கள் இருந்தால் வேக்ஸிங் செய்வதை தவிருங்கள்.


பார்க்க :
First published: April 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading