Home /News /lifestyle /

கருகரு கூந்தலை பெற வீட்டிலேயே தயார் செய்ய ஹேர் ஆயில் : உங்களுக்கான டிப்ஸ்...

கருகரு கூந்தலை பெற வீட்டிலேயே தயார் செய்ய ஹேர் ஆயில் : உங்களுக்கான டிப்ஸ்...

தலைமுடி பராமரிப்பு

தலைமுடி பராமரிப்பு

எண்ணெய் முடியில் இருக்கும் ஈரப்பதத்தை தக்கவைத்து வறட்சி அடைவதைத் தவிர்த்து, முடி உதிர்வதையும் குறைத்து முடியை அழகாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.

ஜனவரி மாதம் முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தாலும், குளிர் இன்னும் குறையவில்லை. வழக்கத்திற்கு மாறாக ஒரு சில இடங்களில் குளிர் மிகவும் அதிகரித்திருக்கிறது. குளிர்காலம் சருமம் மற்றும் கூந்தலை பெரிதாக பாதிக்கக் கூடும். எனவே குளிர்காலத்தில் கூந்தல் மற்றும் சருமத்திற்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தேவை.

எவ்வளவோ விதமான ஹேர் கேர் தயாரிப்புகள் இருந்தாலும் கூந்தல் ஆரோக்கியம் பொருத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். சில கூந்தல் பராமரிப்புப் பொருட்கள் சிலருக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. ஏனென்றால், குளிர்காலத்தில் ஈரப்பதம் குறைந்து கூந்தல் வறட்சி ஏற்படுவதால் முடி கொட்டும் பிரச்சனையும் அதிகமாகும்.

பண்டைய காலத்தில் குளிர் காலத்திற்கு என்றே சிறப்பான, வீட்டிலேயே தயார் செய்யப்படும் ஆரோக்கியமான எண்ணையை பயன்படுத்தி வந்தனர். இந்த எண்ணெய் முடியில் இருக்கும் ஈரப்பதத்தை தக்கவைத்து வறட்சி அடைவதைத் தவிர்த்து, முடி உதிர்வதையும் குறைத்து முடியை அழகாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. இன்று பலரும் அவதிப்படும் இள நரைக்கும் தீர்வாக அமைகிறது.

வீட்டிலேயே, எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நீங்களே தயார் செய்யக்கூடிய ஸ்பெஷல் எண்ணெயால் பின்வரும் பலன்கள் கிடைக்கும்.

* முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்
* இளநரையைப் போக்கும், நரை ஏற்படாமல் தடுக்கும்
* முடியின் வேர்களை பலப்படுத்தும்
* முடியை பளபளப்பாக, அடர்த்தியாக மாற்றும்
* முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து அளிக்கும்



ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய ஸ்பெஷல் ஹேர் ஆயிலை எப்படி செய்யலாம் என்பதை பற்றிய குறிப்பை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

 

தேவையான பொருட்கள்:

செம்பருத்திப் பூக்கள் - 20
வேம்பு இலை - ஒரு கொத்து
கருவேப்பிலை - ஒரு கொத்து
சின்ன வெங்காயம் - ஐந்து
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
கற்றாழை இலைக்கீற்று - 1
மல்லிகைப்பூ - 15 முதல் 20
தேங்காய் எண்ணெய் - ஒரு லிட்டர்

நகங்களை கஷ்டப்பட்டு வளர்த்தும் உடைந்து போகுதா..? இந்த நெயில் மாஸ்க் அப்ளை பண்ணி பாருங்க...

மேலே உள்ள பொருட்களின் அளவு ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்க்கான அளவாகும். மற்ற பொருட்களின் அளவு, நீங்கள் எவ்வளவு தேங்காய் எண்ணெய்யை அதிகரிக்கிறீர்களோ அல்லது குறைவாக பயன்படுத்துகிர்களோ அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளலாம்



செய்முறை

* வெந்தயத்தை நீரில் அரை மணிநரம் ஊற வைக்கவும்
* கற்றாழையை சிறு சிறு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
* எண்ணெய் தவிர்த்து, மேலே கூறப்பட்டுள்ள எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்
* அனைத்து பொருட்களையும் அரைத்த கலவையை தூய தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்றாகக் கலந்து, குறைந்த தீயில் 45 நிமிடங்கள் வரை சூடு செய்யவும். எண்ணெயின் நிறம் பச்சை நிறத்தில் வரும் வரை சூடு செய்தால் போதுமானது.
* கொதிக்க வைத்த எண்ணெயை நன்றாக ஆறவைத்து, வடிகட்டி ஈரமில்லாத பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Hair care, Hair oil

அடுத்த செய்தி