முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்கள் கன்னம் பளபளப்பாக மாறுவதற்கு பப்பாளி மற்றும் கற்றாழை மாஸ்க்குகளை முயற்சி செய்யுங்கள்.!

உங்கள் கன்னம் பளபளப்பாக மாறுவதற்கு பப்பாளி மற்றும் கற்றாழை மாஸ்க்குகளை முயற்சி செய்யுங்கள்.!

பப்பாளி

பப்பாளி

Skin Care | நீங்கள் இழந்த பொழிவை திரும்ப பெற முடியும். அதுவும் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் செய்துவிட முடியும் என்று சொன்னால் அது எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குறிப்பாக, இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால் இதில் பக்க விளைவுகள் கிடையாது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நம்முடைய முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், பரபரப்பான வாழ்க்கை சூழல் காரணமாக நமது சருமம் சற்று மந்தமான தோற்றத்தில் காணப்படும். குறிப்பாக வெயில் காலங்களில் நமது சருமத்தை பாதுகாப்பது இன்னும் சவாலான காரியமாக மாறி விடுகிறது.

அதிகப்படியான வியர்வை மற்றும் ஈரப்பதமின்மை போன்ற காரணங்களால் கட்டி மற்றும் தசை சுருக்கம் போன்ற பிரச்சினைகள் இந்த வெயில் காலத்தில் வருவது இயல்பானது தான். நீங்கள் இழந்த பொழிவை திரும்ப பெற முடியும். அதுவும் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் செய்துவிட முடியும் என்று சொன்னால் அது எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குறிப்பாக, இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால் இதில் பக்க விளைவுகள் கிடையாது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

இந்த ஃபேசியல் தயார் செய்வது எப்படி.?

முதலில் பப்பாளியை எடுத்து தோல் சீவி, அதை நன்றாக மசித்து கொள்ளுங்கள். இதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். இதை நேரடியாக முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்கவும். இறுதியாக சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

ஃபேஸ் மாஸ்க்கின் பலன்கள் :

பருவ கால மாற்றங்களால் ஏற்படும் எண்ணெய் வழிந்த முகம் அல்லது வறண்ட முகம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளலாம். இது உங்கள் சருமத்தை பொழிவாக மாற்றும். குறிப்பாக, கன்னத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து நல்ல தோற்றத்தை கொடுக்கும்.

ஜொலிக்கும் சருமம் வேண்டுமா..? பிங்க் சால்டுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து அப்ளை செய்து பாருங்க

வெள்ளரிக்காய், கற்றாழை மாஸ்க் :

பப்பாளிக்குப் பதிலாக நீங்கள் வெள்ளரிக்காய் சேர்த்து கற்றாழை மாஸ்க் தயாரிக்கலாம். வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் சி, விட்டமின் ஏ மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவை உங்கள் சருமத்திற்கு இளமையான தோற்றத்தை கொடுக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும்.

ஆரஞ்சு தோலை வைத்து இத்தனை விஷயங்கள் செய்யலாமா..! இனிமே தூக்கி போடாமல் இப்படி பயன்படுத்துங்க...

கற்றாழையில் வயது முதிர்வுக்கு எதிரான பண்புகள் இருக்கின்றன. அத்துடன் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கும். இதனால் வளையங்கள் மறையும்.

இந்த ஃபேசியல் தயார் செய்வது எப்படி.?

2 டீ ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் எடுத்து, அதனுடன் அரைத்து வைத்த வெள்ளரிக்காய் சேர்த்து பேஸ்ட் போல மாற்றிக் கொள்ளவும். இதனை சருமத்தில் நேரடியாக அப்ளை செய்து, லேசாக மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

இந்த 5 இலைகள் உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுமாம்...

குறிப்பு :

பப்பாளி, கற்றாழை மாஸ்க் அல்லது வெள்ளரிக்காய், கற்றாழை மாஸ்க் என எதுவாக இருந்தாலும் தினந்தோறும் இதை தயார் செய்து கொண்டிருக்க முடியாது அல்லவா. ஆகவே, ஒரு வாரத்திற்கு தேவையான பேஸ்ட்-ஐ ஒரே நாளில் தயார் செய்து, அதை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் சமயங்களில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

First published:

Tags: Aloevera, Face mask, Papaya, Skin Care