Home /News /lifestyle /

DIY கொரியன் ஹேர் கேர்: அடர்த்தியான நீளமான கூந்தலுக்கு இதை மட்டும் செய்தால் போதும்!

DIY கொரியன் ஹேர் கேர்: அடர்த்தியான நீளமான கூந்தலுக்கு இதை மட்டும் செய்தால் போதும்!

காட்சி படம்

காட்சி படம்

Hair Care Tips : அரை கப் அரிசி இருந்தால் போதும் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.. எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க!

கூந்தலுக்கு தினமும் பயன்படுத்தும் எண்ணெய் முதல் சிறப்பு பரமாரிப்புக்கு ஹேர் சீரம், மாயிஸ்ச்சரைசர் உள்ளிட்ட கூந்தல் பராமரிப்புக்காக பல்வேறு பொருட்களுக்கு நிறைய பணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். மேலும், ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி முடி வளர்ச்சிக்கான காஸ்மெட்டிக் சிகிச்சைகளும் உள்ளன. கொரிய ஸ்கின்கேர் போலவே, ஹேர்கேர் ரகசியங்களும் உள்ளன.

குறிப்பாக, கொரிய DIY ஹேக்ஸ் மூலம், கூந்தல் பராமரிப்பை எளிதாக்கலாம். அதிலும், கூடுதலாக ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் முடி வளர்ச்சிக்கென்று வீட்டிலேயே இருக்கும் ஒரு பொருளைப் பயன்படுத்தி கூந்தலை அழகாகவும், ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் மாற்ற முடியும்.

எந்த வகை கூந்தலாக இருந்தாலும் சரி, கடுமையான வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் போது, தீவிரமாக பாதிக்கப்படும். அதிலும், ஏற்கனவே வறண்ட கூந்தல் அல்லது தீவிரமான முடி உதிரும் பிரச்சனை உள்ள கூந்தலுக்கு வானிலை மாற்றங்கள், மாசு ஆகியவை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், உங்கள் கூந்தல் எந்த விதமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த DIY கொரியன் ஹேர்கேர் மூலம், பிரச்சனைகளை தடுக்கலாம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்.

உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும் உதவும் அந்த பொருள், அரிசி தான்! அரிசி இல்லாத இல்லங்களே கிடையாது. இந்தியா மட்டுமல்லாமல், பல நாடுகளிலும் அரிசி தான் பிரதான உணவாக உள்ளன. கொரியர்கள் அரிசியை உணவாக மட்டுமல்லாமல், அழகுக்காகவும், கூந்தல் ஆரோக்கியத்துக்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.



அரிசி ஊறவைத்து வடித்த நீரைப் கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால், பல்வேறு முடி வளர்வது முதல் பல நன்மைகள் கிடைக்கும்.

* அரிசி தண்ணீர் உங்கள் முடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது.
* முடியின் நீளமும் அதிகரிக்கும்.
* அரிசி தண்ணீர் உங்கள் முடியை பளபளப்பாக மாற்றுகிறது. எந்த விதமான கெமிக்கல்கள் அல்லது விலையுயர்ந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களும் பயன்படுத்தாமலே, பொலிவான ஆரோக்கியமான முடியைப் பெறலாம்.
* அரிசி தண்ணீரைப் தொடர்ந்து பயன்படுத்தினால், தலைமுடியின் தன்மை மிகவும் மிருதுவாக மாறும்.



தலைமுடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கு அரிசி தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும் ?

இதற்குத் தேவையான பொருட்கள் பின்வருமாறு:

1/2 கப் அரிசி
2 கப் தண்ணீர்
வடிகட்டி
2 கிண்ணங்கள்
மூடியுடன் உள்ள ஒரு பாத்திரம்
ஒரு ஸ்ப்ரே பாட்டில்

½ கப் சமைக்காத அரிசியை நன்றாக தண்ணீர் விட்டு அலசி தனியே வைக்கவும். 2 கப் தண்ணீருடன் ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்க்கவும். சாதாரண வெப்பநிலையில் 24 மணி நேரம் வரை அரிசியை நீரில் ஊற வைக்கவும். நன்கு ஊறிய அரிசி தண்ணீரை, ஒரு சுத்தமான பாத்திரத்தில் வடிகட்டவும். வடிகட்டிய அரிசி நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம்.



இந்த அரிசி தண்ணீரை எப்படி பயன்படுத்துவது?

இந்த நீரை பயன்படுத்த நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டாம். வழக்கமாக தலைக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளிக்கும் போது, அரிசி தண்ணீரைப் பயன்படுத்தலாம். தலைக்கு குளிப்பதற்கு முன்பு, ஸ்ப்ரே பாட்டிலில் உள்ள அரிசி நீரை தலையில் நன்றாக ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். அரிசி தண்ணீரைப் பயன்படுத்தும் போது, நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று,

உங்கள் உச்சந்தலை முதல் நுனி முடி வரை நீங்கள் அப்ளை செய்ய வேண்டும். ஸ்ப்ரே பாட்டிலில் எளிதாக தலை முழுவதும் பயன்படுத்தட்ட முடியும். சில நிமிடங்கள் ஊறிய பின்பு, ஷாம்பூ தேய்த்து குளிக்கலாம். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். இரண்டு அல்லது மூன்று முறை அரிசி தண்ணீரை பயன்படுத்திய உடனேயே உங்களுக்கு முடி வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரியும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Hair, Hair care

அடுத்த செய்தி