Home /News /lifestyle /

சமீப நாட்களாக முடி உதிர்வு அதிகமாக இருக்கிறதா..? உடனே இந்த ஹோம் ரெமடியை டிரை பண்ணுங்க

சமீப நாட்களாக முடி உதிர்வு அதிகமாக இருக்கிறதா..? உடனே இந்த ஹோம் ரெமடியை டிரை பண்ணுங்க

முடி உதிர்வு

முடி உதிர்வு

நல்ல பளபளப்பான, இலகுவான, நீண்ட நெடிய கூந்தலை பெறுவதற்கு, மூன்றே பொருட்கள் உங்களுக்கு போதுமானது. அவை அரிசி, கற்றாலை மற்றும் ஆளி விதைகள் ஆகும்.

airபொடுகு தொல்லை, வறட்சியான கூந்தல் போன்றவையே பெரும்பாலான பெண்களுக்கு முடிகளில் ஏற்படும் பிரச்சினையாக இருந்தாலும், அவற்றில் முடி உதிரும் பிரச்சினை தான் மிகவும் கவலைக்குரியதாக இருக்கும். எவ்வளவு தான் நாம் முயற்சி செய்து கொண்டே வந்தாலும், அவ்வபோது முடி உதிரும் பிரச்சினை ஏற்படத்தான் செய்கிறது. ஆகவே, இனியும் அதை புறக்கணிக்காமல் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

முடி உதிர்வதை தடுக்கவும், நீளமான கூந்தலை தக்க வைத்துக் கொள்ளவும் மிகவும் செலவு மிகுந்த சிகிச்சைகளை சிலர் எடுத்துக் கொள்கின்றனர். அதே சமயம், செலவு குறைவானதாகவும், வீட்டிலேயே நாமே செய்து கொள்ளக் கூடியதாகவும் எளிய சிகிச்சை முறைகள் உள்ளன. அதில், ஒன்றுதான் டிஐஒய் கெராடின் சிகிச்சை முறை ஆகும். இது நிச்சயமாக உங்களுக்கு பலன்களை கொடுக்கும்.

நல்ல பளபளப்பான, இலகுவான, நீண்ட நெடிய கூந்தலை பெறுவதற்கு, மூன்றே பொருட்கள் உங்களுக்கு போதுமானது. அவை அரிசி, கற்றாலை மற்றும் ஆளி விதைகள் ஆகும். இதுகுறித்து, கூந்தல் நலக்கான மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “அரிசியில் பொதுவாக கெராடின் சத்து இல்லை என்றாலும் கூட, முடிக்கு தேவையான புரதச் சத்து அதில் நிறைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஏராளமான விட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அரிசியில் உள்ளன. ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்புச் சத்து, நார்சத்து, புரதம், மாவுச்சத்து மற்றும் சர்க்கரை ஆகியவை உள்ளன. கற்றாழையில் முடியை இலகுவாக மாற்றக் கூடிய திறன்கள் நிரம்பியுள்ளன. ஆகவே, இந்த மூன்று கலவைகளையும் சேர்த்து பயன்படுத்தினால், உங்கள் கூந்தல் நலன் நிச்சயமாக மேம்படும்’’ என்று தெரிவித்தனர்.



DIY கெராடின் ஹேர் மாஸ்க் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

அரிசி ஒரு கப் மற்றும் அரை கப் ஆளி விதைகள் எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்கை வைக்கவும்.
மிக லேசான சூட்டில் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அரிசியில் இருந்து கொதி வந்த சூழலிலும், ஆளி விடஹிகளில் இருந்து பளபளப்பு தோற்றம் வெளிவருகின்ற சூழலிலும் அடுப்பை நிறுத்தி விடவும்.

பெண்குயின் கார்னர் 19 : திருமண வயதில் உள்ள பெண்கள் மார்பக அளவை பெரிதாக்க என்ன செய்ய வேண்டும்..? மருத்துவர் ஆலோசனை
 இதை வடிகட்டி, சாதாரண சூடு நிலையில் வைத்திருக்கவும்.
இப்போது கற்றாழை எடுத்து, இந்த கலவையுடன் சேர்த்து பிசைந்து, மாஸ்க் போடுவதற்கான பதத்திற்கு கொண்டு வரவும்.

இதை உங்கள் தலை, முடி வேர்கள் மற்றும் கூந்தல் நீளம் முழுவதும் நன்றாக அப்ளை செய்யவும்/
ஒரு மணி நேரம் காத்திருந்து, வெதுவெதுப்பான நீரில் இப்போது கழுவிவிடவும்.

முதல் முயற்சியிலேயே உங்கள் கூந்தல் பளபளப்பில் மிக அதிகமான வித்தியாசம் இருப்பதை நீங்கள் உணர முடியும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Hair care, Hair fall, Home remedies

அடுத்த செய்தி