பிரகாசமான முக அழகை பெற வீட்டிலேயே ஈசியாக 'ஃபேஸ் சீரம்' தயாரிப்பது எப்படி..?

பிரகாசமான முக அழகை பெற வீட்டிலேயே ஈசியாக 'ஃபேஸ் சீரம்' தயாரிப்பது எப்படி..?

சீரம்

உங்கள் சரும பராமரிப்பு பிரச்சனைகளுக்கு ஃபேஸ் சீரம் பயன்படுத்துவது ஒரு தீர்வாக இருக்கும். மேலும் இதை பயன்படுத்துவது அனைத்து தோல் பிரச்சனைகளையும் தடுக்க உதவும் என்றும் கூறுகின்றனர்.

  • Share this:
ஏராளமான அழகுசாதன பொருட்களை போல ஃபேஸ் சீரம்களும் (Face serums) அழகு சந்தையை கையகப்படுத்தி ஆக்கிரமித்துள்ளன. வழக்கமான க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்சரைசிங்கிற்கு பிறகு ஃபேஸ் சீரம் பயன்படுத்தி அற்புதமான அழகு நன்மைகளை பயன்படுத்தலாம் என்று தோல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் சரும பராமரிப்பு பிரச்சனைகளுக்கு ஃபேஸ் சீரம் பயன்படுத்துவது ஒரு தீர்வாக இருக்கும். மேலும் இதை பயன்படுத்துவது அனைத்து தோல் பிரச்சனைகளையும் தடுக்க உதவும் என்றும் கூறுகின்றனர்.

உங்கள் சருமத்தை மேம்படுத்தும் பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் சீரம்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மூல பொருட்களில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன. நீங்கள் ஃபேஸ் சீரம் வாங்க ஆன்லைனில் தேடினால் ஏராளமான சீரம்கள் இருப்பதை பார்க்க முடியும்.

ஆனால் சந்தைகளில் கிடைக்கும் பல ஃபேஸ் சீரம்களில் பல தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் நிரம்பியுள்ளன. இவை நீண்ட காலத்திற்கு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ஃபேஸ் சீரம்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நம் சருமத்தை பாதுகாக்க இயற்கை அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட அழகு பொருட்களை பயன்படுத்துவது சிறந்த பலனை தரும். எனவே வீட்டில் நீங்களே தயாரித்து கொள்ளும் வகையிலான ஃபேஸ் சீரம் குறித்து தற்போது பார்க்கலாம் வாருங்கள்.

வீட்டிலேயே ஃபேஸ் சீரம் தயாரிக்க தேவையானவை :

* 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்
* 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
* 2 ஈ வைட்டமின் காப்ஸ்யூல்கள்



செய்முறை:

ஒரு கிண்ணத்தை எடுத்து கொண்டு அதில் கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்க்கவும். உங்கள் வீட்டிலேயே கற்றாழை செடி வைத்திருந்தால், ஒரு ஸ்பூனால் அதிலிருக்கும் ஜெல்லை எடுத்து இதற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் வீட்டில் ஏற்கனவே இருக்கும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். அதே போல பிரெஷ்ஷான ரோஜா இதழ்களை பயன்படுத்தி வீட்டிலேயே ரோஸ் வாட்டரையும் தயார் செய்யலாம். பின் சிறிது நேரம் கழித்து கிண்ணத்தில் இருக்கும் கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் கலவையுடன் எடுத்து வைத்திருக்கும் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது உங்கள் ஃபேஸ் சீரம் தயாராகிவிட்டது.

உதட்டின் மேல் முடி வளர்வது சங்கடமாக உள்ளதா..? வீட்டிலேயே அகற்ற எளிய முறை..!

எவ்வாறு பயன்படுத்துவது?

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஃபேஸ் சீரமை ஒரு நாளைக்கு 2 முறை பயன்படுத்தலாம். எப்போது பயன்படுத்தினாலும் உங்கள் முகத்தை கழுவிய பின் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஃபேஸ் சீரமை விரல்களில் எடுத்து கொண்டு உங்கள் முகம் முழுவதும் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின் சிறிது நேரம் கழித்து ஃபேஸ் சீரம் முகத்தில் தடவியது தெரியாத அளவிற்கு காய்ந்த பின் சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள்.



நன்மைகள்:

வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த இயற்கை பொருட்கள் அடங்கிய ஃபேஸ் சீரத்தை முகத்திற்கு பயன்படுத்துவதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சந்தைகளில் கிடைக்கும் எந்த ஃபேஸ் சீரத்தையும் விட இது சிறந்தது. கற்றாழை, ரோஸ் வாட்டர் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் கலவை உங்கள் முகத்தில் அழகாக்கி பிரகாசத்தை அளிக்கிறது. இது முகத்தில் இருக்கும் டார்க் ஸ்பாட்ஸ்களை குறைக்க உதவும். ரோஸ் வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளை தடுக்கிறது. மேலும் இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக, இளமையாக வைத்திருக்க உதவும்.

இந்த சீரமில் இருக்கும் கற்றாழை முகத்திற்கு மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது கருவளையத்தை குறைக்கிறது. இதிலிருக்கும் கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் முகத்தில் இருக்கும் துளைகளை சுத்தப்படுத்துகின்றன. வைட்டமின் ஈ தோல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவ்வளவு நன்மைகளை தரும் இந்த ஹோம்மேட் சீரம் மூலம் அலர்ஜி ஏதேனும் ஏற்படுவதை தவிர்க்க முகத்தில் தடவும் முன், கை சருமத்தில் தடவி பரிசோதித்து கொள்ளுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published: