கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வெளியில் இயல்பாக செல்ல முடியாத அளவு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அடிக்கும் வெயிலுக்கு நீங்கள் என்ன தான் சன்ஸ்கிரீனை பயன்படுத்தினாலும் சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் கருமை அல்லது பழுப்பு நிறமாற்றத்தை தவிர்ப்பது கடினம்.
சூரிய கதிர் தாக்கத்தால் சருமத்தில் படரும் கருமை அல்லது பழுப்பை தான் சன் டேனிங் (Sun Tanning) என்கிறோம். பெரும்பாலான மக்களின் சருமம் வெயிலில் அலைய துவங்கும் 1 முதல் 2 மணி நேரத்திற்குள் டேனிங்காகி விடும். வரும் நாட்களில் வெயில் இன்னும் வெளுக்க போவதால் சன் டேனிங்கிற்கான வீடு வைத்தியங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
* லெமன் ஜூஸ், ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரி ஜூஸ் உள்ளிட்டவற்றின் கலவையை முகத்தில் ஃபேஸ் பேக்காக பயன்படுத்த வேண்டும். லெமன் ஜூஸில் உள்ள சிட்ரிக் ஆசிட் சருமத்தில் உள்ள டேனிங்கை அகற்ற உதவுகிறது.
* சிறிது தேன் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து சருமம் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவது சிறந்த ஆன்டி-டேன் பேக்ஸ்களில் ஒன்றாகும்.
* சிறிது பச்சை பால், மஞ்சள் மற்றும் சிறிது லெமன் ஜூஸ் இவற்றை கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை சருமத்தில் தடவி, அது காயும் வரை வைத்திருக்க வேண்டும். பின் சிறிது குளிர்ந்த நீரில் பேஸ்ட் தடவிய இடத்தை கழுவ வேண்டும்.
* மோரில் சிறிதளவு ஓட்ஸ் கலந்து ஒரு கலவையை தயார் செய்து ஸ்கின் டேனிங்காகி இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும். ஓட்ஸ் சருமத்தை உரிக்க உதவும், மறுபுறம் மோர் சருமத்திற்கு மிகவும் நன்மையை தர கூடியது.
எலுமிச்சை முதல் பேக்கிங் சோடா வரை... இந்த 5 பொருட்களை மறந்தும் கூட முகத்தில் அப்ளை செய்யாதீங்க..!
* சிறிது கடலை மாவு, லெமன் ஜூஸ் மற்றும் சிறிது தயிர் கலந்து இந்த கலவையை சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து தடவினால் சன் டேனிங்கிற்கு எதிராக நலன் பலன் கிடைக்கும்.
* முழங்கைகள், முழங்கால்கள் அல்லது பேட்சஸ்கள் உள்ள பகுதிகளில் குறைந்தது 15 நிமிடங்கள் சிறிது ப்ரெஷ் லெமன் ஜூஸை தடவி ஊற வைத்து பின் கழுவுவது டேனிங்கால் ஏற்பட்ட நிற மாற்றத்தை சரி செய்ய உதவுகிறது.
* கைகள் மற்றும் முகத்தில் ப்ரெஷ்ஷான தேங்காய் நீரை பயன்படுத்தும் வழக்கம் சருமத்தை மிருதுவாக மற்றும் மென்மை வைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* பால் பவுடர், லெமன் ஜூஸ் , தேன் மற்றும் பாதாம் ஆயில் ஆகியவற்றின் சம அளவை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கிரீம், சன் டேனிங்கிற்கு சிறந்த நிவாரணமாக இருக்கும்.
* சிறிதளவு பப்பாளி பழத்தை மசித்து எடுத்து சன் டேனிங் உள்ள இடத்தில் மசாஜ் செய்யவும். பப்பாளி சருமத்திற்கு சிறந்தது மற்றும் ஆன்டி-ஏஜிங்கிற்கு உதவுகிறது.
Stress Eating என்றால் என்ன..? மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் தாறுமாறாக பசிப்பது ஏன்..?
* ஓட்ஸ், தயிர், சிறிதளவு லெமன் மற்றும் தக்காளி ஜூஸை கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்து பாதிப்பு உள்ள இடத்தில் தடவலாம். பின் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் நீங்களே வித்தியாசத்தை பார்ப்பீர்கள்.
* முல்தானி மெட்டியுடன் சிறிதளவு பூசணி சாற்றை சேர்த்து முகம் முழுவதும் தடவினால், சன் டேனிங்கால் ஏற்பட்ட கருமை வெகுவாக குறையும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.