அழகுப் பராமரிப்பிற்காக தீபிகா படுகோன் பின்பற்றும் ஃபேஸ் ஷீட் மாஸ்க் : நீங்களும் வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

இந்த எளிய முறையை தினமும் செய்வதால் முகத்திற்கு ஃபிரெஷ் குளோ கிடைக்கும்.

அழகுப் பராமரிப்பிற்காக தீபிகா படுகோன் பின்பற்றும் ஃபேஸ் ஷீட் மாஸ்க் : நீங்களும் வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!
தீபிகா படுகோன்
  • Share this:
தீபிகா படுகோன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் முகச் சருமத்தைப் பராமரிக்க முகத்தில் அலுமினிய ஷீட் அப்ளை செய்தபடி அமர்ந்திருக்கிறார்.

இந்த அலுமினிய ஷீட் முகத்தில் அப்ளை செய்வதால் சருமத்தின் அழுக்குகளை நீக்கி சுத்திகரிக்க உதவுகிறது. இதனால் கரும்புள்ளிகள், கருமை, முகப்பருக்கள் வராது. அதேசமயம் சுருக்கங்கள் இருந்தாலும் அவற்றை இறுகச் செய்து இளமையான சரும அழகைத் தரும்.

இது மைக்ரோஃபைபர் ஷீட் அணிந்தால் கூலாக உணர்வைத் தருவதுபோல் அல்லாமல் வெப்பமான உணர்வைத் தரும். அதுதான் சருமத்தை பாதுகாக்க சிறந்தது என்கின்றனர். மேலும் இது கொரியன் வகை அழகுக் குறிப்பு என்பதால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சரி இதை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

அலுமினியம் ஷீட் (Aluminium foil)
கத்தரிக்கோல்பருத்தி துணி



 




View this post on Instagram




 

Gearing up for the weekend...🥳 #selfie #selflove #selfcare


A post shared by Deepika Padukone (@deepikapadukone) on






செய்முறை :

பருத்தித் துணியை சதுரமான வடிவில் ஒரு பக்கமாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல் அலுமினியம் ஷீட்டையும் வெட்டிக்கொள்ளுங்கள்.

துணியை முகத்தில் வைத்துப் பார்த்து மார்க் செய்துகொள்ளுங்கள். அதன்படி வட்டமாக வெட்டி கண் , மூக்கு, வாய் என வெட்டிக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக அதை வைத்து அலுமினியம் ஷீட்டிலும் அவுட்டர் லைன் வரைந்து அதன்படி வெட்டுங்கள். தற்போது உங்கள் முக அமைப்பிற்கு ஏற்ப ஷீட் கிடைத்திருக்கும்.

அடர்த்தியான கண் இமைகளைப் பெற இந்த ஒரு பொருள் போதும்..!

பருத்தித் துணியை விருப்பத்திற்கு ஏற்ப தக்காளி சாறு அல்லது அரிசி தண்ணீர், எலுமிச்சை சாறு என அவற்றின் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து அதை அப்படியே அலுமினியம் ஷீட்டில் ஒட்டி முகத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள். எங்கும் இடைவெளி இல்லாத அளவிற்கு ஒட்டுங்கள்.

இதை அப்படியே 30 நிமிடங்களுக்குக் காய விடுங்கள். பின் எடுத்துவிட்டு சாதாரண தண்ணீரில் கழுவி விடுங்கள். பருத்தித் துணியை மட்டும் கழுவி அடுத்தமுறை பயன்படுத்த பத்திரப்படுத்தி வையுங்கள்.

இந்த எளிய முறையை தினமும் செய்வதால் முகத்திற்கு ஃபிரெஷ் குளோ கிடைக்கும்.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading