ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்களுக்கு மேக்கப் போட பிடிக்குமா? தீபாவளிக்கு தேவதையாய் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்!

உங்களுக்கு மேக்கப் போட பிடிக்குமா? தீபாவளிக்கு தேவதையாய் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உங்கள் பண்டிகை கால பட்ஜெட்டுக்குள் அடங்க கூடிய, அதே சமயம் தரமான சில அழகு சாதன பொருட்கள் பற்றியும், அதன் நன்மைகள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பண்டிகை வந்துவிட்டாலே உற்சாகமும், மகிழ்ச்சியும் தானாகவே வந்துவிடும். நாடு முழுவதும் உள்ள மக்கள் கோலாகலமாக கொண்டாடக்கூடிய தீபாவளி திருநாள் விரைவில் வர உள்ளது. அதைக் கொண்டாட பெண்கள் பலகாரங்கள், பட்டாசுகள், புத்தாடை என பெரிய லிஸ்டே போட்டு வைத்திருப்பார்கள். அத்துடன் உங்களையும் ஜொலி, ஜொலிப்பாக காட்டக்கூடிய அழகு சாதன பொருட்கள் மற்றும் மேக்கப் டிப்ஸ்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பண்டிகை கால பட்ஜெட்டுக்குள் அடங்க கூடிய, அதே சமயம் தரமான சில அழகு சாதன பொருட்கள் பற்றியும், அதன் நன்மைகள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்...

1. பவர்பெர்ரி சன்ஸ்கிரீன்:பண்டிகை கால மேக்கப்பை பாதுகாக்க, சூரியனின் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேண்டியது அவசியமாகும். Happier நிறுவனத்தின் பவர்பெர்ரி சன்ஸ்கிரீன் (Powerberry Sunscreen) PA 40++++ மதிப்பீடு கொண்டது ஆகும். சூரியஒளியிலிருந்து வரும் UVA மற்றும் UVB போன்ற கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இது ஆயில் ப்ரீ சன்ஸ்கிரீன் என்பதால், பிரேக்அவுட்களை ஏற்படுத்தாது. இது ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற ஊதா ஒளியிலிருந்து தோல் சேதத்தைத் தடுக்க உதவும்.

2. கவர்ந்திழுக்கும் லிப்ஸ்டிக்:ஒரே ஸ்டோக்கில் கவர் செய்யக்கூடிய சூப்பரான லிப்ஸ்டிக்கை தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், Recode's Selfie மேட் லிக்விட் பொருத்தமானதாக இருக்கும். லைட் அண்ட் கிரிமீயான இது உதடுகளை மென்மையாகவும், அழகாகவும் காட்ட உதவுகிறது. இது ஹைபோஅலர்கெனிக், பாராபின்ஸ் அல்லது மினரல் ஆயில் ஆகியவை இல்லாத அடர்த்தி குறைவான லிப்ஸ்டிக் ஆகும். வாட்டர் ப்ரூஃப் மற்றும் ஸ்மட்ஜ்-ப்ரூஃப் ஆகிய இரண்டு நன்மைகளும் இதில் இருப்பதால் பண்டிகை நேரத்தில் நீங்கள் பிசியாக இருக்கும் போது இதனை ஒருமுறை அப்ளே செய்தாலே போதுமானதாக இருக்கும்.

3. பளீச் சருமம்:ஹெல்த் வேதா ஸ்கின் ரேடியன்ஸ் கொலாஜன் பில்டர் காப்ஸ்யூல்கள், சருமத்தை பொலிவாக்கவும், ஈரப்பதத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்கள் சருமத்திற்கு மென்மை, ஈரப்பதம், இளமையான தோற்றம் ஆகியவற்றைக் கொடுக்கிறது.

4. ஸ்கின் சீரம்:ஃபுல் ஃபேஸ் மேக்கப் முடிந்த முன்னர், முகத்தை ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்ள ஃபைனைட்டின் (Finite) ஸ்கின் ஹைட்ரேஷன் ஃபேஸ் சீரத்தை பயன்படுத்தலாம். இது சருமத்தின் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்க உதவுவதோடு, அதனை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் ஹைட்ரோ-போஸ்டிங் நேச்சுரல் சுகர் மற்றும் மாய்ஸ்சுரைசிங் பொருட்கள் அடங்கியுள்ளது.

5. கண் அழகு:வசீகரமான கண் அழகைப் பெற ஐ லாஷ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் கண்களுக்கு ஏற்ற வளைவான செயற்கை கண் இமைகள் வேண்டும் என்றால், ஹாட்லாஷ் நிறுவனத்தின் காடெஸ் லேஷ் ஸ்டைலைப் பின்பற்றலாம். பார்பி பொம்மை போன்ற அழகான லுக்கை விரும்புவோருக்கு இந்த ஐ லாஷ் சிறப்பான தேர்வாகும்.

First published:

Tags: Beauty Tips, Deepavali, Diwali, Makeup