வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர அறிமுகமானது புதிய கருவி..!

முற்றிலும் வழுக்கையாக இருப்பவர்களுக்கு இது உதவாது. வழுக்கையில் ஆரம்ப நிலையில் இருப்போருக்கே இந்த கருவி உதவும்.

வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர அறிமுகமானது புதிய கருவி..!
வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர அறிமுகமானது புதிய கருவி..!
  • News18
  • Last Updated: September 28, 2019, 3:10 PM IST
  • Share this:
வழுக்கை தலையில் முடியே வளராதா என ஏங்கும் பலருக்கும் இந்த செய்தி நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும். வழுக்கைத் தலையில் முடி வளருவதற்கான புதிய கருவி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அணியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி மனிதனின் ஆற்றலால் இயங்கக் கூடியது. அணிந்துகொள்பவரின் அசைவுகளுக்கு ஏற்ப முடி வளராத இடத்தில் ஒருவகையான எலக்ரிக் ஆற்றலை செலுத்துகிறது. இதனால் முடியின் வேர் பகுதிகளில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு முடிகள் மீண்டும் வளர்கின்றன.

இதனால் இந்த கருவிக்கு பேட்டரி தேவையில்லை. எலக்ட்ரானிக் சிக்கல்களும் இல்லை. இதை நாம் சாதாரணமாக அணியக் கூடிய கேப்பிற்குள் வைத்தும் அணிந்துகொள்ளலாம். இதனால் மற்றவர்களுக்கும் தெரியாது.
இந்த கருவி நிச்சயம் பலருக்கும் சிறந்த தீர்வாக இருக்கும் என இதை தயாரித்த ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

வழுக்கைத் தலைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கருவி மிக குறைந்த அளவிலாக அதிர்வெண்களை அளிக்கக் கூடியது. மனிதனில் தினசரி ஆற்றலால் இயங்கக் கூடியது.இவை மழமழ வென மென்மையான சருமத்தைக் கொண்ட தலையில் இயங்காது. வளராமல் தடைபட்டிருக்கும் மயிர்க்கால்களைத் தூண்டி வளர வைக்கும் என்கிறார் ஆராய்ச்சியாளர். அதாவது முற்றிலும் வழுக்கையாக இருப்பவர்களுக்கு இது உதவாது. வழுக்கையில் ஆரம்ப நிலையில் இருப்போருக்கே இந்த கருவி உதவும்.

பார்க்க :

சாதாரண கடைகளில் விற்கும் சன் கிளாஸ் வாங்கி அணியலாமா ?


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading