Home /News /lifestyle /

BB கிரீம் மற்றும் CC கிரீம்... இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன..? எது உங்கள் சருமத்திற்கு ஏற்றது..?

BB கிரீம் மற்றும் CC கிரீம்... இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன..? எது உங்கள் சருமத்திற்கு ஏற்றது..?

BB கிரீம் மற்றும் CC கிரீம்.

BB கிரீம் மற்றும் CC கிரீம்.

இந்த இரண்டு பொருட்களுக்கே சரும நிறத்தை, தோற்றத்தை சீராக்கவும், அழகூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.

மேக்கப் பொருட்கள், அழகு சாதனங்கள் என்று வரும் போது, வழக்கமாகப் பயன்படுத்தும் பொருட்களை தவிர்த்து சில நேரங்களில் கூடுதலான பொருட்கள் தேவைப்படும். ஃபௌண்டேஷன், காம்பாக்ட் பவுடர், டோனர், மாயிஸ்ச்சரைசர் என்று கம்ப்ளீட் மேக்கப்பிறகு பல காஸ்மெடிக்ஸ் தேவை. அதே போல, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த, சரும நிறத்தில் வேறுபாடுகளை மறைக்க, ஒரே மாதிரியான ஸ்கின் டோன் பெற ஒரு சில காஸ்மெடிக்ஸ் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானவை, பிபி கிரீம் மற்றும் சிசி கிரீம்.

இந்த இரண்டு பொருட்களுக்கே சரும நிறத்தை, தோற்றத்தை சீராக்கவும், அழகூட்டவும் பயன்படுத்தப்படுகிறது. பல மேக்கப் சாதனங்கங்களுக்கு பதிலாக, ஒரே காஸ்மெட்டிக் பயன்படுத்தினாலே, நேர்த்தியான மேக்கப்பும், சரும பாதுகாப்பும் கிடைக்கும். ஆனால், இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன, எப்போது எதைப் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

பிபி கிரீம் என்றால் என்ன மற்றும் அதன் பயன்பாடுகள் :

பிபி கிரீம் என்பது பியூட்டி பாம் அல்லது பிளெமிஷ் பாம் என்பதாகும். பிபி கிரீம், மாயஸ்சரைசர், ஃபவுண்டேஷன், சன்ஸ்க்ரீன் என்று அம்சங்களையும் கொண்டுள்ளது. நீங்கள் தனித்தனியாக வெவ்வேறு மேக்கப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். ஃபவுண்டேஷன் முகத்தில் கூடுதல் பளபளப்பைக் கொடுத்து, புள்ளிகள், ஸ்பாட்ஸ், மெல்லிய தழும்புகள் ஆகியவற்றை மறைக்கிறது. சருமத்துக்கு தேவையான அனைத்து உட்பொருட்களையும் கொண்டுள்ளது. சருமத்தை இன்ஸ்டன்டாக ஜொலிக்க வைக்கும் தன்மைக் கொண்டது.



எளிதாக சொல்லவேண்டுமானால், பொலிவான, நேர்த்தியான நோ-மேக்கப் தோற்றம் பெற, நீங்கள் பிபி கிரீம் பயன்படுத்தினால் போதும்.

 

முகத்தை நன்றாகக் கழுவி, துடைத்து, தேவையான அளவு பிபி கிரீமை எடுத்து, நெற்றி, கன்னங்கள், மூக்கு என்று மென்மையாக அப்ளை செய்யலாம். வறண்ட சருமம் இருந்தால், கிரீம் அப்ளை செய்யும் முன்பு மைல்டான சீரம் பயன்படுத்தலாம்.

Sun tanning - ஆல் ஏற்படும் சரும பாதிப்புகளிலிருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியங்கள்..!

சிசி கிரீம் என்றால் என்ன மற்றும் அதன் பயன்பாடுகள் :

சிசி கிரீம் என்பது கலர் கண்ட்ரோல் அல்லது காம்ப்ளக்ஷன் கரக்டர் என்பதாகும். பிபி கிரீம் போலவே இருந்தாலும், அதை விட கூடுதலாக பயனளிக்கிறது. ஸ்கின் டிஸ்கலரேஷன் என்று கூறப்படும் சருமத்தின் நிறம் மாறுதலை சரிசெய்ய சிசி கிரீம் உதவுகிறது. உங்கள் சரும நிறத்தையும், ஒட்டுமொத்த ஸ்கின் டோனையும் இது மேம்படுத்தும்.



ஹைப்பர் பிக்மெண்டேஷன், ஹைபோ பிக்மெண்டேஷன், சிவந்து போதல், சருமம் கருத்தல், ஆகிய பிரச்சனைகளுக்கு சிசி கிரீம் பலன் தரும். இந்த கிரீமில், உங்கள் சருமம் ஹைட்ரேட் ஆகும். SPFஉடன் வரும் சிசி கிரீம் உங்களுக்கு சன்ஸ்க்ரீன் ஆகவும் பயன் தரும். உங்கள் சருமத்தை பொலிவாக்கும்.

சிசி கிரீம் தேர்வு செய்யும் போது, உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற நிறத்தில் இருக்கும் கிரீமை வாங்குவது மிகவும் முக்கியம்.

சிசி கிரீம் அப்ளை செய்யும் முன்பு, முகத்தை நன்றாக கழுவு, ஈரம் போக துடைத்து, மாய்ஸ்ச்சரைசர் பயப்படுத்திய பிறகு, தேவையான அளவு கிரீம் எடுத்து முகம் முழுவதும் விரலால் அப்ளை செய்து, மென்மையாக பிளென்ட் செய்யலாம். சிசி கிரீம் பயன்படுத்தும் போது, வேறு எந்த மேக்கப்பும் தேவையில்லை.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: BB cream, Makeup

அடுத்த செய்தி