ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இதையெல்லாம் சாப்பிட்டாலே போதும்.. உங்க சருமம் பளபளக்கும்.. ஆரோக்கிய சருமத்துக்கு சூப்பர் டயட் ப்ளான்!

இதையெல்லாம் சாப்பிட்டாலே போதும்.. உங்க சருமம் பளபளக்கும்.. ஆரோக்கிய சருமத்துக்கு சூப்பர் டயட் ப்ளான்!

சரும பராமரிப்பு

சரும பராமரிப்பு

குடை மிளகாயில் இருக்கும் அதிக நார்ச்சத்து, வைட்டமின் ஏ, இரும்பு, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை செய்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருவரது உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கிறது நமது சருமம். ஒட்டுமொத்த நல்வாழ்வை பிரதிபலிக்கிறது என்பதை தவிர, நம்மை மிகவும் அழகாக காட்ட மிருதுவான, தெளிவான, பளபளப்பான மற்றும் ஆரோக்கிய சருமத்தை பெறவே நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம்.

எனவே பலரும் வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் பியூட்டி பார்லர்களுக்கு செல்வது அல்லது அழகு சிகிச்சை மேற்கொள்வது என பல சரும பராமரிப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். இது போக ஃபேஷியல், ஃபேஸ் க்ரீம்கள் என வீட்டிலேயே மினி பியூட்டி பார்லர் வைத்து கொண்டு தங்களை மெருகூட்டி கொள்கின்றனர். பராமரிப்பு நடைமுறைகள் தவிர உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்துவதும் நம் சருமத்தை பொலிவாக பெரிதும் உதவும்.

ஆம், மோசமான உணவு தேர்வுகள் நம் சருமத்தை பாதிக்க செய்யும். அதே நேரம் ஆரோக்கியமான உணவுகள் சருமத்தை ஜொலிக்க செய்யும். உங்களுக்கு இளமையான, குறைபாடாற்ற மற்றும் பொலிவான சருமம் வேண்டும் என்றால் அதற்கு உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், பைட்டோகெமிக்கல் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் இருக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

ஆரோக்கிய மற்றும் ஜொலிக்கும் சருமத்திற்கு உதவும் டயட் டிப்ஸ்கள் கீழே:

கரோட்டின் மற்றும் பிற கரோட்டினாய்டுகள் போன்ற பைட்டோ கெமிக்கல்ஸ் அடங்கிய உணவுகள், சருமத்தை புற ஊதா கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் பொதுவாக ஆரஞ்சு, கேரட், யாம், ஆப்ரிகாட், பாகற்காய் மற்றும் வின்டர் ஸ்குவாஷ் போன்ற பிரகாசமான உணவுகளில் காணப்படுகின்றன.
கிரேப்ஃப்ரூட் , எலுமிச்சை, பல வகையான ஆரஞ்சுகள் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் காணப்படும் வைட்டமின் சி சத்தானது ஸ்மூத்தான மற்றும் எலாஸ்டிக் சருமத்திற்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ்களை நமக்கு வழங்குகின்றன.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் உள்ளிட்டவை முகப்பருவை குறைத்து சருமத்தில் பொலிவு மற்றும் தெளிவை ஏற்படுத்துகின்றன.
குடை மிளகாயில் இருக்கும் அதிக நார்ச்சத்து, வைட்டமின் ஏ, இரும்பு, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை செய்கிறது.
சூரியகாந்தி விதைகள் பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக இருக்கும் நிலையில், இதிலிருக்கும் வைட்டமின் ஈ நம் சருமத்திற்கு ஒரு முக்கிய ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்படுகிறது.
ஆப்பிள், வெங்காயம், ரெட் ஒயின், டீ உள்ளிட்டவற்றில் காணப்படும் quercetin, ஒரு ஃபிளாவனாய்டு ஆகும். இது சருமம் சிவத்தல், சரும அரிப்பு மற்றும் சேதமடைந்த சருமத்தின் பாதிப்பை குறைக்கும். சரும தடுப்பு செயல்பாட்டை மீட்கவும், சருமத்தில் நீரேற்றத்தை அதிகரித்து நீரிழப்பை குறைக்கவும் உதவும்.
வைட்டமின் சி மற்றும் அனைத்து முக்கிய கரோட்டினாய்டுகளின் நல்ல மூலமாக இருக்கிறது தக்காளி. மிதமான அளவு தினமும் உங்கள் டயட்டில் தக்காளியை சேர்ப்பது சருமத்தை சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாத்து சுருக்கம் ஏற்படுவதை தடுக்கிறது.
டார்க் சாக்லேட்டில் சேர்க்கப்படும் கோகோவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சரும சுருக்கங்களை போக்க மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
Published by:Josephine Aarthy
First published:

Tags: Skincare