• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கருவளையம் ஏன் வருகிறது தெரியுமா..? சரி செய்யும் வீட்டுக் குறிப்புகள்...

கருவளையம் ஏன் வருகிறது தெரியுமா..? சரி செய்யும் வீட்டுக் குறிப்புகள்...

கருவளையம்

கருவளையம்

குறைந்த கொலாஜன் உற்பத்தி கண்களுக்குக் கீழே இருண்ட வட்டங்களுக்கு வழிவகுக்கும், எனவே கொலாஜன் உற்பத்தி செய்யும் உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது.

  • Share this:
பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமும், வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தும் கருவளைத்தை போக்கலாம். இருப்பினும் கருவளையத்தை சரி செய்ய முயற்சிக்கும் முன்னர், கருவளையம் பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதுகுறித்து தோல் மருத்துவர் டாக்டர் மாதுரி அகர்வால், கூறிய தகவல் குறித்து இங்கு காண்போம்...

* கண் பகுதியைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது மற்றும் சோர்வு, வயதான அறிகுறிகளை தெளிவாக காட்டும் பகுதியாகும். எனவே கருவளையம் ஏற்படாமல் பார்த்து கொண்டால் நீங்கள் இளமையாக காட்சியளிப்பீர்கள்.
ஒவ்வாமை கருவளையத்தை ஏற்படுத்தும், எனவே உங்கள் சருமத்திற்கு பொருந்தாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள் என அவர் கூறியுள்ளார்.

* சிறுநீரக பிரச்னை, உயர் அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும் கருவளையங்கள் உண்டாகும். எனவே உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது.

home remedies for dark circles

* புகைபிடித்தல் கருவளையங்கள் ஏற்படும். மது அருந்துவதால் கண்களுக்குக் கீழே இரத்த நாளங்கள் விரிவடைந்து கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும், மேலும் ஆல்கஹால் எடுத்து கொள்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்னையும் ஏற்படும். இதன் எதிரொலியாக கருவளையங்கள் தோன்றுகிறது. எனவே இந்த பழக்கங்களை கைவிடுவது நல்லது.

* இதேபோல புகைபிடித்தல் பழக்கம் இருப்பவர்களுக்கும் கருவளையம் மற்றும் வயதான தோற்றத்தை ஏற்படுகிறது. எனவே புகைப்பிடிப்பதை அறவே தவிர்த்து விடுங்கள்.

* குறைந்த கொலாஜன் உற்பத்தி கண்களுக்குக் கீழே இருண்ட வட்டங்களுக்கு வழிவகுக்கும், எனவே கொலாஜன் உற்பத்தி செய்யும் உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது.

முகப்பருக்கு ப்ரீத்தியின் டாக்டர் வாழைப்பழ தோல் தானாம்! பயங்கரமான ரிசல்ட்

* உங்கள் கண்களை அடிக்கடி தேய்க்கும் பழக்கம் இருந்தால் பெரியோர்பிட்டல் மெலனோசிஸ் அல்லது கருமையான வட்டங்கள் அடிக்கடி தோன்றும். கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அடிக்கடி கண்களை தேய்ப்பதாலும் கருவளையம் ஏற்படுகிறது.* தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. இது இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைவு காரணமாகவும் ஏற்படுகிறது.

* மனவருத்தம், மனஉளைச்சலால் அவதிப்படுபவர்களுக்கு கருவளையம் ஏற்படுகிறது. எனவே எப்போதும் ரிலாக்ஸாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டால் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற இனி வேக்ஸிங் , ஷேவிங்கை வேண்டாம்.. இந்த இயற்கையான முறைகளை டிரை பண்ணுங்க

* அதிகப்படியான வேலை செய்பவர்களுக்கும் கருவளையம் ஏற்படும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதனை தடுக்க முடியும். உதாரணமாக வெளியே வெயிலில் செல்லும்போதும், கணினியில் வேலை செய்யும் போதும் கண்ணாடி அணிந்தால் கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.* ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களை தவிர்த்தால் நாளடைவில் கருவளையத்தை சரி செய்ய முடியும்.

* மேலும் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து கருவளையத்திற்கு நல்ல பலனளிக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: