• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • முகப்பரு பிரச்சனையால் வீட்டுக்குள்ளே இருந்த தர்ஷா.. இந்த ஜூஸ் குடிச்சி தான் சரி பண்ணாராம்!

முகப்பரு பிரச்சனையால் வீட்டுக்குள்ளே இருந்த தர்ஷா.. இந்த ஜூஸ் குடிச்சி தான் சரி பண்ணாராம்!

சொல்லப்போனால் தர்ஷாவின் மேனி பளபளக்க காரணமே இந்த ஜூஸ் தானாம்.

 • Share this:
  குத் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா முகம் அழகு பெற குடித்த ஜூஸ் மற்றும் அவருடைய அழகு குறிப்புகளை பற்றி தான் பார்க்க போகிறோம்.

  சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரபலங்களில் விஜய் டிவி குத் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் தர்ஷா குப்தாவும் ஒருவர். இவரின் மாடி ஃபோட்டோ ஷூட் பற்றி கேட்கவே வேண்டாம். அந்த அளவுக்கு ரசிகர்களுக்காக வித விதமான ஃபோட்டோ ஷூட்களை லாக்டவுனில் நடத்தினார். இது தவிர்த்து முள்ளும் மலரும்’, ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் தர்ஷா. குறிப்பாக இவருக்கு நெக்டிவ் ரோல் பக்காவா சூட் ஆகும். இவரின் நடிப்பு செந்தூரப்பூவே சீரியலில் பாராட்டுக்களையும் கூடவே பட வாய்ப்பையும் வாங்கி தந்தது.

  அதுமட்டுமில்லை விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குத் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் தர்ஷா கலந்து கொண்டார். சோஷியல் மீடியாவில் பயங்கர பிஸியான தர்ஷாவுக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர தொடங்கின. இதனால் சீரியலில் இருந்து விலகினார். ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படத்தை திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி இயக்குகிறார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது.

  பார்ப்பதற்கு மெழுகு சிலை போல் இருக்கும் தர்ஷா முகப்பரு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். சீரியலில் கூட இவரின் முகப்பருக்கள் அப்பட்டமாக தெரிய தொடங்கின. இதனால் நெகடிவ் கமெண்டுகள், முகம் குறித்த கிண்டல்களை தர்ஷா சந்தித்தார். இதனால் சில நாட்கள் வீட்டிலே முடங்கியும் இருந்தார். இதுக் குறித்து ஒரு முறை தன்னுடைய இன்ஸ்டாவில் லைவில் கண்கலங்கியப்படி பல விஷயங்களை ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது தர்ஷாவின் முகம் பருக்களே இல்லாமல் அழகாக மாறிவிட்டது. அதற்கு அவர் பல வழிமுறைகளை ஃபாலோ செய்திருக்கிறார்.  தர்ஷாவின் ஸ்கீன் சென்சிடிவ் என்பதால் மேக்கப் போடுவதை குறைத்துவிட்டாராம். அப்படியே ஷூட்டிங்காக போட்டாலும் தேங்காய் எண்ணெய் வைத்து மேக்கப்பை ரிமூவ் செய்துவிட்டு ஐஸ் தண்ணீரால் முகத்தை கழுவாராம். பகலில் மட்டுமில்லை இரவிலும் முகத்தில் சன் ஸ்கீரின் போடுவாராம். அவருக்கு தலையில் பொடுகு இருந்ததாலும் முகபப்ரு பிரச்சனை வந்திருக்கு. அதற்கு சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தலையில் தடவி மசாஜ் செய்து பொடுகு தொல்லையை சரி கட்டினாராம். எண்ணெய் உணவுகளுக்கு குட் பாய் சொல்லிவிட்டவர், தினமும் காலையில் குடிப்பது ஏபிசி ஜூஸ் தான். சொல்லப்போனால் தர்ஷாவின் மேனி பளபளக்க காரணமே இந்த ஜூஸ் தானாம்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: