• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மேக்கப் போடுபவர்கள் கட்டாயம் ஆவி பிடியுங்கள்... தேவயானி சொல்லும் சீக்ரெட்ஸ்!

மேக்கப் போடுபவர்கள் கட்டாயம் ஆவி பிடியுங்கள்... தேவயானி சொல்லும் சீக்ரெட்ஸ்!

தேவயானி

தேவயானி

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மட்டுமே தனது மேனியை பாதுகாத்துக் கொள்வாராம்.

  • Share this:
    சின்னத் திரையில் வெற்றி நாயகியாக வலம் வரும் நடிகை தேவயானியின் அழகுக்கு காரணமான ஆவி பிடித்தல் பற்றி தெரிந்து கொள்வோம்.

    தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம் என பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தனர் நடிகை தேவயானி. மும்பையை பூர்வீகமாக் கொண்டவர் என்றாலும், தேவயானிக்கு கை கொடுத்து தூக்கி விட்டது தமிழ் சினிமா தான்.பார்க்கவே பக்கத்துக்கு வீட்டு பெண் போல் தோன்றும் எதார்த்தமான அழகு, இவரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஹீரோயினாக மாற்றியது. இதுவரை கிட்டத்தட்ட 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    வெள்ளித்திரையில் இருந்து திருமணம் ஆகி விலகிய பின்னர், சின்னத் திரையிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார். சன் டிவியில் இவர் நடித்திருந்த 'கோலங்கள்' சீரியல் இன்று வரை, இல்லத்தரசிகளால் மறக்க முடியாத சீரியல் ஆகும். நீண்ட இடைவெளிக்கு பின்பு சன் டிவி ராசாத்தி சீரியலில் நடித்தார். அதன் பின்பு ஜி தமிழில் ஒளிப்பரப்பாகும் புது புது அர்த்தங்கள் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். அன்றிலிருந்து இன்று வரை தேவயானி அழகில் எந்த மாற்றமில்லை. அதே பொலிவான முகத்துடன் குறைந்த அளவு மேக்கப் போட்டு ஸ்கீரினில் ஜொலிக்கிறார். தேவயானியின் இந்த முக அழகுக்கு அவர் பின்பற்றும் சில முறைகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

    முடி கொட்டாமல் இருக்க கல் உப்பு போதுமாம்.. பாவம் கணேசன் சித்ராவின் டிப்ஸ்!

    அவரின் அழகு சாதன பொருட்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது தேங்காய் எண்ணெய் தான். இதை தான் அவர் மாஷ்ரைசராக பயன்படுத்துவராம். அடுத்தது ஆவி பிடிப்பது. குக்கரில் தண்ணீரை கொதிக்க வைத்து முகத்திற்கு ஆவி பிடிப்பாராம். அதே போல் தக்காளியை அப்படியே கட் செய்து நேரடியாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வாராம்.



    வாழைப்பழ தோலை முகத்தில் தேய்த்தால் வழுவழுப்பான கன்னங்களாக மாறுமாம். இப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மட்டுமே தனது மேனியை பாதுகாத்துக் கொள்வாராம். இதை தவறாமல் கடைப்பிடிப்பாராம். இதை அவரின் தாயிடம் கற்றுக் கொண்டராம். அதுமட்டுமில்லை தனது முகத்திற்கு எந்தவித கெமிக்கல் பொருட்களையும் தேவயானி இதுவரை பயன்படுத்தியதே இல்லையாம். தன்னுடைய குழந்தைகளுக்கு இப்போது இதை தான் ஃபாலோ செய்கிறாராம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: