Home /News /lifestyle /

Eyeliner-ஐ இப்படித்தான் அப்ளை செய்ய வேண்டும்.. தீபிகா படுகோனின் மேக்அப் ஆர்டிஸ்ட் டிப்ஸ்..!

Eyeliner-ஐ இப்படித்தான் அப்ளை செய்ய வேண்டும்.. தீபிகா படுகோனின் மேக்அப் ஆர்டிஸ்ட் டிப்ஸ்..!

தீபிகா படுகோனேவின் ஐ-மேக்கப்

தீபிகா படுகோனேவின் ஐ-மேக்கப்

ரெட் கார்பெட் தோற்றத்துக்கு பக்காவான மேக்கப் என்றாலே தீபிகா படுகோன் தான். மெல்லிய உயரமான உடல்வாகிற்கு, போட்டோஜெனிக் தோற்றம் வர கண்களுக்கான மேக்கப் மிகவும் முக்கியம்.

மேக்கப்பை பொறுத்தவரை கண்களுக்கான மேக்கப் என்பது முக அழகை மேம்படுத்தும் அல்லது முழுவதுமாக கெடுத்து விடும். முகத்தில் வேறு எந்த விதமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தாமல் இருந்தாலும், ஐ-மேக்கப் மட்டுமே கிளாமரான தோற்றத்தைக் கொடுக்கும். கண்களுக்கான மேக்கப்பில் பிரத்யேகமான முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளில் தீபிகா முதன்மையானவர்.

வாழைத்தண்டு கால்களுக்கு சொந்தக்காரி என்று வர்ணிக்கப்படும் பாலிவுட் நடிகை தீபிகா மேக்கப்பில் பலவித எக்ஸ்பெரிமென்ட்களை செய்யத் தயங்குவதில்லை. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன், மாடலாக இருந்த காலத்தில் இருந்தே, வெரைட்டியான தோற்றங்களை ஆடைகள் மட்டுமின்றி மேக்கப் வழியாகவும் வெளிகாட்டி வருகிறார்.

ரெட் கார்பெட் தோற்றத்துக்கு பக்காவான மேக்கப் என்றாலே தீபிகா படுகோன் தான். மெல்லிய உயரமான உடல்வாகிற்கு, போட்டோஜெனிக் தோற்றம் வர கண்களுக்கான மேக்கப் மிகவும் முக்கியம்.

தீபிகா படுகோனேவின் ஐ-மேக்கப் ரகசியங்கள் பற்றி அவருடைய மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பகிர்ந்து கொண்டவை இங்கே.

ஐலைனரைப் பொறுத்தவரை தீபிகாவைப் போல யாருமே நேர்த்தியாக, பொருத்தமாக, கிளாமரான தோற்றம் கொண்டு வர பயன்படுத்த முடியாது. எனவே, கண்களுக்கான மேக்கப்பிற்கு ஐலைனரை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

என்ன தான் கண்களுக்கான மேக்கப்பை தேர்வு செய்யும் கவனமாக இருந்தாலும், சரும நிறத்துக்கு ஏற்ற ஃபவுண்டேஷனைத் தேர்வு செய்வது முக்கியம். தீபிகா பயன்படுத்தும் ஃபவுண்டேஷன் இயற்கையானது மற்றும் ஈரப்பதமானது. அது மட்டுமின்றி, அதில் ஹைலைட்டரை சேர்த்து பிளென்ட் செய்து பயன்படுத்தும் போது, கன்னங்கள் செழுமையாகத் தோன்றும்.

சிலர், கண் இமைகளுக்கு முதலில் மேக்கப் செய்து விட்டு, லைனர் பயன்படுத்தலாம் என்று கூறுவார்கள். ஆனால், அப்படி செய்யும் போது, ஐலைனரின் லேசாக கை தவறினாலே கண் இமைகளின் மேக்கப் பாதிக்கப்படும். எனவே, இமைகள் மீது லேசான பவுடர் போட்டு, லைனரை பயன்படுத்தி கண்களை வரையலாம்.




ஐலைனர் மிக விரைவிலேயே காய்ந்து விடும் தன்மை கொண்டது. அது மட்டுமின்றி, கண்களில் இருந்து உதிரத் துவங்கும். இது ஒட்டுமொத்த அழகையே கெடுக்கும். அதனால், லிக்விட் அல்லது ஜெல் ஐலைனரைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, ஜெல் ஐலைனர் நீண்ட நேரத்துக்கு உதிராமல், வறண்டு போகாமல் இருக்கும், அழகாக கண்களை வரைந்து கொள்ள உதவும்.

ஐலைனரைப் பயன்படுத்தும் போது, புருவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முகத்துக்கு மற்றும் கண்களின் வடிவத்துக்கு ஏற்ற புருவங்கள் மேக்கப்பை மேம்படுத்திக் காட்டும்.

வீட்டிலேயே செய்யக்கூடிய கார்டியோ பயிற்சிகள்.. சாரா அலி கான் ஃபிட்னஸ் டிரெய்னர் பகிர்ந்த வீடியோ...

கண்களை ஹைலைட் செய்து காட்டும் போது, முகத்தின் மற்ற இடங்களில் மிதமான மேக்கப் இருந்தாலே போதும். குறிப்பாக, லிப்ஸ்டிக் அல்லது லிப்க்ளாஸ் நிறங்களைத் தேர்வு செய்யும் போது, மைல்டான ஷேடுகளைப் பயன்படுத்துங்கள். பளிச்சென்ற லிப்ஸ்டிக் நிறத்தை தேர்வு செய்தால், ஐ-மேக்கப் எடுபடாது.

பல விதமான காஜல்களை பயன்படுத்திய தீபிகாவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட், லாக்மேவின் காஜல் தான் அவருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது என்று கூறியுள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Deepika Padukone, Eye makeup

அடுத்த செய்தி