• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆண்களே ஷேவிங் செய்யும்போது இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்..!

ஆண்களே ஷேவிங் செய்யும்போது இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்..!

ஷேவிங் கிரீம் காலியாகி விட்டதை மறந்து போய் ஷேவ் செய்ய இறங்கிவிட்டீர்கள் எனில் கவலையே வேண்டாம். வீட்டுக் கிட்சனில் ஆலிவ் எண்ணெய் இருந்தால் அதை தாடைகளில் தடவி ஷேவ் செய்யலாம். இது கெமிக்கல்களிலிருந்து விடுபட்டு இயற்கை முறையை பின்பற்றவும் நல்ல வழி.

ஷேவிங் கிரீம் காலியாகி விட்டதை மறந்து போய் ஷேவ் செய்ய இறங்கிவிட்டீர்கள் எனில் கவலையே வேண்டாம். வீட்டுக் கிட்சனில் ஆலிவ் எண்ணெய் இருந்தால் அதை தாடைகளில் தடவி ஷேவ் செய்யலாம். இது கெமிக்கல்களிலிருந்து விடுபட்டு இயற்கை முறையை பின்பற்றவும் நல்ல வழி.

வேலைக்குச் செல்லும் அவசரத்தில் விறுவிறுவென ஷேவ் செய்துவிட்டுக் கிளம்பும் ஆண்களுக்கு அதனால் ஏற்படும் ஆபத்து பற்றித் தெரியுமா?

  • News18
  • Last Updated :
  • Share this:
    வேலைக்குச் செல்லும் அவசரத்தில் விறுவிறுவென ஷேவ் செய்துவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். அதன் விளைவு பிளேட் கீறல் , இரத்தக் கசிவு, சீரற்ற ஷேவிங். இப்படி என்னென்ன தவறுகள் நீங்கள் செய்கிறீர்கள். அதனால் ஏற்படும் ஆபத்து என்ன தெரியுமா ?

    ஷேவ் செய்யச் சருமத்தை தயார் நிலையில் வைக்காதது : ஷேவ் செய்ய இதுதான் முதல் படி. பலரும் அப்படிச் செய்யாமல் நேரடியாக கிரீமைத் தடவி ஷேவ் செய்வார்கள். அதன் விளைவு முடிகள் சீராக வராது. மழிக்கவும் கடினமாக இருக்கும். அழுத்தித் தேய்க்கும்போது கீறல், இரத்தக் காயம் ஏற்படும்.



    இதைத் தவிர்க்க முகத்தை முதலில் சோப் அல்லது ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவுங்கள். அடுத்ததாக வெப்பமான டவலால் முகத்தைத் துடையுங்கள். இதனால் முடி எடுக்கும்போது இலகுவாக வரும். ஸ்மூத்தாக இருக்கும். பயன்படுத்தும் துணியும் மென்மையான காட்டன் துணியாக இருக்க வேண்டும்.

    தவறான பிளேட் தேர்வு : இருப்பதிலேயே பிளேட் தேர்வுதான் மிக முக்கியம். அவசரத்தில் பிளேடைக் கூட மாற்றாமல் அப்படியே ஷேவிங் செய்வது பல ஆபத்துகளை ஏற்படுத்தும். துருப் பிடித்த பிளேடாக இருப்பின் சருமத்தின் இரத்தக் காயங்களை ஏற்படுத்தி செப்டிக் ஆகிவிடும். எனவே ஒவ்வொரு முறையும் புது பிளேடை பயன்படுத்துங்கள். அதுவும் கூர்மையான பிளேடாக இருந்தால் எளிதில் முடியை மழித்துவிடலாம்.



    பொறுமை இல்லாதது : பிளேட் போன்ற பொருட்களை அதுவும் முகத்திற்குப் பயன்படுத்தும்போது பொறுமை மிகவும் அவசியம். ஷேவ் செய்வதற்கென நேரம் ஒதுக்கி ஒவ்வொரு படிகளையும் பொறுமையாகச் செய்தால் அந்த இடத்தில் மீண்டும் முடி வளர்வது தாமதமாகும். இதனால் அடிக்கடி ஷேவ் செய்யும் தொல்லையும் இருக்காது.

    முடியின் வளர்ச்சிக்கு ஏற்ப ஷேவிங் செய்தல் : இதை ஆங்கிலத்தில் against the grain and with the grain என அழைப்பார்கள். இந்த கேள்வி ஷேவிங் செய்யும் ஆண்கள் பலருக்கும் உண்டு. முடி வளரும் பாதைக்கு ஏற்ப ஷேவ் செய்ய வேண்டுமா அல்லது அதற்கு எதிரான வகையில் ஷேவ் செய்ய வேண்டுமா என்பதுதான்.

    முதலில் உங்கள் முடியின் வளர்ச்சிப் பாதையைக் கண்டறிய வேண்டும். அதற்கு ஏடிஎம் கார்ட் போன்ற அட்டையை எடுத்துக் கொண்டு தாடியில் தடவுங்கள்.. அப்போது முடி நீட்டிக் கொண்டிருந்தால் அது அதன் வளர்ச்சிப் பாதைக்கு எதிரான ஷேவிங். மடங்கியிருந்தால் அதன் வளர்ச்சிப் பாதையை நோக்கிய ஷேவிங். இதைத் தெரிந்து கொள்ளாமலேயே பல ஆண்கள் ஷேவ் செய்கிறார்கள். இதன் விளைவு எரிச்சல், அரிப்புதான் ஏற்படும். எனவே ஷேவ் செய்யும்போது ஏடிஎம் கார்ட் வைத்துக் கண்டறிந்தபின் , முடி மடங்கியவாறு இருக்கும் அதன் வளர்ச்சிப் பாதைக்கு ஏற்ப ஷேவ் செய்வதுதான் நல்லது.



    ஷேவிங் கிரீமை சரியாகத் தேர்வு செய்யாதது : உங்கள் சருமத் தன்மைக்கு ஏற்ப ஷேவிங் கிரீம் தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் அதுவும் உங்கள் சருமத்தைப் பாதிக்கும். உதாரணமாக வறண்ட சருமம் கொண்டோர் மேலும் வறட்சி ஏற்படுத்தும் கிரீமைத் தடவினால் வறட்டுத் தன்மை அதிகமாகும். எனவே வல்லுநர்களை ஆலோசித்து ஷேவிங் கிரீம் தேர்வு செய்யுங்கள்.

    மாய்ஸ்சரைஸர் பயன்படுத்தாதது : ஷேவிங் செய்த பின் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துவது மிக மிக அவசியம். இதனால் ஷேவ் செய்த இடத்தில் எரிச்சல் இல்லாமல், சரும பாதிப்புகளும் ஏற்படுத்தாது. ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு குளிர்ச்சியாகவே இருக்கும்.




    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: