Home /News /lifestyle /

உங்கள் கழுத்து கருமையாக இருப்பதற்கான 8 காரணங்களும்… அதற்கான தீர்வுகளும்..!

உங்கள் கழுத்து கருமையாக இருப்பதற்கான 8 காரணங்களும்… அதற்கான தீர்வுகளும்..!

கழுத்து கருமை

கழுத்து கருமை

பெரும்பாலும் கழுத்து மற்றும் அக்குளில் உள்ள தோல் கருமையாவதற்கான பொதுவான காரணங்கள், உடல் பருமன் மற்றும் எண்டோக்ரின் டிஸார்டரே ஆகும்.

உங்கள் கழுத்து பகுதியில் ஏற்படும் நிறமாற்றம் அல்லது கருமைக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்து கொள்ள சிரமப்படுகிறீர்களா? இதற்கு ஒரு பதில் அல்ல, 8 பதில்கள் (காரணங்கள்) உள்ளன. நமது தோல் மிகவும் சென்சிடிவானது. வானிலை, உணவுமுறை அல்லது சரும பராமரிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், தோல் அதற்கேற்ப ரியாக்ட் செய்யும். எனவே, உங்கள் கழுத்தைச் சுற்றியுள்ள தோல் கருமையாகிறது என்றால் உங்கள் உடல் மாற்றங்களைச் சந்திக்கிறது என்று அர்த்தம்.

மூலக்காரணங்களை அறிந்து கொள்ளாமல், கழுத்தில் உள்ள கருமையானத் திட்டுகள் அல்லது நிறமிகளை உங்களால் சரி செய்ய முடியாது. அதற்கு, உங்களுக்கு ஒரு தோல் மருத்துவர் தேவை, அப்படியான மருத்துவர்களில் ஒருவர் தான் ஸ்கின் டாக்டர் ஜெய்ஸ்ரீ ஷரத். சமீபத்தில் இவர் கழுத்துப்பகுதி கருப்பு நிறத்தில் மாறுவதற்கான காரணங்களை இன்ஸ்டாகிராம் வழியாக பகிர்ந்து கொண்டார்.

1. மரபியல் காரணம் : அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் (Acanthosis Nigricans) எனப்படும் ஒரு கோளாறு உங்களின் கழுத்தைச் சுற்றி கருமையான சருமம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கலாம். இது சருமத்தின் இருண்ட, வெல்வெட்டி ஹைப்பர் பிக்மென்டேஷன் பகுதியால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை ஆகும். இந்த நிலை பரம்பரை பரம்பரையாக வரலாம் அல்லது ஜெனிடிக் சிண்ட்ரோமின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

2. உடல் பருமன் : பெரும்பாலும் கழுத்து மற்றும் அக்குளில் உள்ள தோல் கருமையாவதற்கான பொதுவான காரணங்கள், உடல் பருமன் மற்றும் எண்டோக்ரின் டிஸார்டரே ஆகும்.

3. அதிகப்படியான இன்சுலின் : உங்கள் இரத்தத்தில் இன்சுலின் அதிகமாக இருப்பதற்கான ஒரு அறிகுறியே - கருமையான கழுத்து. உடன் சில அறிகுறிகளை நீங்கள் கண்டால், நீங்கள் உங்களின் இரத்த சர்க்கரையை பரிசோதித்து, ஒரு நீரிழிவு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.



4. பிசிஓஎஸ் : பிசிஓஎஸ் உள்ள பெண்களின் இரத்தத்தில் இன்சுலின் ஹார்மோன் அதிக அளவில் இருக்கும். இதன் விளைவாக சில சமயங்களில் கழுத்தின் பின்புறம், கைகளின் கீழ் மற்றும் இடுப்பு பகுதியில் கருமை உண்டாகும்.

5. சர்க்கரை நோய் : முன்னரே குறிப்பிட்டபடி, உங்கள் கழுத்தின் பின்புறத்தில் உள்ள தோலில் ஏற்படும் கருமை திட்டுகள் பெரும்பாலும் நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறி ஆகும். நீங்களொரு சர்க்கரை நோயாளி என்றால் இதை கடந்தே ஆக வேண்டும்.

மன அழுத்தத்தை குறைக்கும் அரோமா தெரபி : எப்படி செய்ய வேண்டும்..?

6. ஹைப்போ தைராய்டிசம் : மீண்டும், முன்னரே குறிப்பிட்டபடி சருமத்தில் கருமையான திட்டுகளை ஏற்படுத்தும் அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ் என்கிற நிலையானது, பொதுவாக உங்களுக்கு இருக்கும் தைராய்டு அல்லது எடை அதிகரிப்பு போன்ற மருத்துவ சூழ்நிலைகளுடன் தொடர்புடையது. இதன் விளைவாகவும் உங்கள் சருமம் கருமையாகும்.



7. வாசனை திரவியங்கள் அல்லது ஹேர் டை சார்ந்த ஒவ்வாமை : ஆம், உங்களுக்கு சில பொருட்களின் விளைவான ஒவ்வாமை இருக்கலாம், எனவே எந்தவொரு தயாரிப்பையும் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது, பின் குறைந்தபட்சம் 24 மணிநேரம் காத்திருந்து அது உங்கள் சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

முகத்தில் உள்ள முடியை எளிதாக வீட்டிலேயே நீக்க உதவும் 4 ஃபேஸ் மாஸ்க் டிப்ஸ்

8. லிச்சென் பிளானஸ் பிக்மென்டோசஸ் போன்ற நிலைகள் : லிச்சென் பிளானஸ் பிக்மென்டோசஸ் (LPP) என்பது ஒரு நாள்பட்ட நிறமிக் கோளாறு ஆகும், இது சூரிய ஒளி படும் பகுதிகளான முகம், கழுத்து மற்றும் பிற நெகிழ்வான மடிப்புகளில் ஏற்படும் க்ரோனிக் பிக்மென்டேஷன் டிஸார்டர் ஆகும்.



கருமையான கழுத்துக்கான தீர்வுகள்:

- உடல் எடையை குறைக்கவும் அல்லது ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்

- கழுத்தை சுத்தமாக வைத்திருங்கள்

- அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்யாதீர்கள்

- ஹார்மோன்களை பரிசோதிக்கவும்

- லாக்டிக் ஆஸிட் அடிப்படையிலான கிரீம்கள் / லோஷன்களைப் பயன்படுத்துங்கள்

- வாசனை திரவியங்களை தோலில் தெளிப்பதை தவிர்க்கவும்

- சருமத்தை அடிக்கடி தேய்ப்பதை தவிர்க்கவும்

- சன்ஸ்கிரீனை மறக்க வேண்டாம்

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Dark Neck

அடுத்த செய்தி