ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தலையில் எண்ணெய் தடவுவதுதான் பொடுகு அதிகரிக்க காரணமா..? அதிர்ச்சி தரும் அழகுக்கலை நிபுணர்..!

தலையில் எண்ணெய் தடவுவதுதான் பொடுகு அதிகரிக்க காரணமா..? அதிர்ச்சி தரும் அழகுக்கலை நிபுணர்..!

பொடுகு தொல்லை

பொடுகு தொல்லை

பொடுகு பிரச்சனைக்கு எண்ணெய் தடவினாலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.. ஏன்? என்ன காரணம் என்பது குறித்தும், பொடுகு தொல்லையை குறைக்க எண்ணெய் உதவுமா? இல்லையா?

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொடுகு பிரச்சனையை சரி செய்ய தலையில் எண்ணெய் தடவும் போது, இறந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தான் செய்யும்என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.

  பொடுகுத் தொல்லை நம்மில் பலரும் சந்திக்கக்கூடிய பெரும் பிரச்சனையாக உள்ளது. ஆரம்பத்திலே இதற்குத் தீர்வு காணவிடில் இறந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து பெண்களும் மொட்டை எடுக்கும் அளவிற்கு கொண்டுவந்துவிடும். எனவே பொடுகு பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்துவிட வேண்டும் என்கின்றனர். குறிப்பாக தலையில் வறட்சி ஏற்படும் போது தான் பொடுகு பிரச்சனை ஆரம்பிக்கிறது என்பதால் அந்த நேரத்தில் எண்ணெய் தடவும் பழக்கத்தை மக்கள் அதிகளவில் மேற்கொள்கின்றனர்.

  ஆனால் பொடுகு பிரச்சனைக்கு எண்ணெய் தடவினாலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.. ஏன்? என்ன காரணம் என்பது குறித்தும், பொடுகு தொல்லையை குறைக்க எண்ணெய் உதவுமா? இல்லையா? என்பது குறித்து டெய்கா ஆர்கானிக்ஸ் நிறுவனர் ஆர்த்தி ரகுராம் என்ன சொல்கிறார்? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

  தலைமுடிக்கு எண்ணெய் தடவினால் பொடுகு அதிகரிக்குமா?

  பொடுகு என்பது உச்சந்தலையில் ஏற்படும் ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இது வறட்சியினால் ஏற்படுவது அல்ல உலர்ந்த மற்றும் இறந்த செல்களில் உள்ள பாக்டீரியாக்களினால் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வறட்சியைப் போக்க வேண்டும் என்பதற்காக எண்ணெய் தடவுவது என்பது தீர்வாகாது. எப்படி முகத்தில் அதிகப்படியான எண்ணெய் படித்தால் சருமத்துளைகள் அடைத்து முகப்பருக்களை உருவாக்குகிறதோ? அதை போன்று தான் உச்சந்தலையில் அதிக எண்ணெய் சேரும் போது பொடுகு உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது.

  Also Read : முடியை நேராக்கும் ஹேர் ரீபாண்டிங் சிகிச்சை: பக்க விளைவுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!

  குறிப்பாக உங்களது தலைமுடிக்கு அடிக்கடி எண்ணெய் ஊற்றி ஒரே இரவில் வைத்திருக்கும் போது, உங்களது உச்சந்தலையில் இறந்த சரும செல்களை அதிகரிக்கிறது. மேலும் பொடுகு உச்சந்தலையில் ஈஸ்ட் தொற்று போன்று என்பதால், எண்ணெய் அதிகபாக்டீரியாக்களை உச்சந்தலையில் பாதிப்பை ஏற்படுத்தி உலர்ந்த மற்றும் செதில்களாக மாற்றுகின்றது. எனவே பொடுகுத் தொல்லையைப் போக்குவதற்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தேய்க்கும் போது உச்சந்தலையில் பாக்டீரியாக்கள் அதிகமாக வளர உதவுகின்றன. எனவே எண்ணெய் நிறைந்த உச்சந்தலையில் பொடுகுத் தொல்லை குறைவதற்குப் பதில் அதிகரிக்க வழிவகுக்கிறது.

  பொடுகு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள்:

  வறண்ட தலையில் பொடுகுத் தொல்லை ஏற்படுவதைத் தடுக்க எண்ணெய் தேய்ப்பதற்குப் பதிலாக எலுமிச்சை, கற்றாழை ஜெல் மற்றும் வெந்தயத்தை அரைத்துத் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தலையில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.

  Also Read :  மாதவிடாய் காலத்தில் முகப்பருக்கள் வர என்ன காரணாம்..? தடுக்கும் வழிகள் இதோ...

  இதே போல, ஆப்பிள் சைடர் வினிகரைத் தண்ணீர் கலந்து அல்லது பேக்கிங் சோடாவைத் தண்ணீரில் கரைத்து தலையை அலசினால் பொடுகுத் தொல்லை ஏற்படுவதை டுக்கலாம்.

  தலையில் மென்மையான ஷாம்புவைப் பயன்படுத்த வேண்டும். மேலும் பொடுகைத் தடுக்க தலையில் அழுக்கு சேர்வதையும் இறந்த சரும செல்கள் தங்குவதையும், அதிக எண்ணெய் தலையில் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்வது அவசியமான ஒன்று. அதற்கென்று அதிக கெமிக்கல் கலந்த ஷாம்புகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதனால் முடி உதிர்தல் பிரச்சனை உங்களுக்கு அதிகளவில் ஏற்படக்கூடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Dandruff