முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கோடையில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் கற்றாழை - வெள்ளரி பேஸ்பேக் பற்றி தெரியுமா..?

கோடையில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் கற்றாழை - வெள்ளரி பேஸ்பேக் பற்றி தெரியுமா..?

உங்க முகம் பருக்கள் இல்லாமல் மிருதுவாக இருக்க இதை செய்யுங்கள்!

உங்க முகம் பருக்கள் இல்லாமல் மிருதுவாக இருக்க இதை செய்யுங்கள்!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும். இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாகக் குறையும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil |

நாம் அனைவரும் பளபளப்பான சருமத்தை பெற ஆசைப்படுவோம். பருக்கள் இல்லாமல் முகம் பொலிவுடன் இருக்க நாம் பல அழகுசாதனப் பொருள்களை உபயோகிப்போம். ஆனால், அனைவருக்கு சரியான பலன் கிடைப்பதில்லை. ஆனால், காலம் காலமாக நாம் பயன்படுத்தும் இயற்கையான பொருட்கள் நமது சருமத்திற்கு நல்ல பலன்களை கொடுத்தாலும் அவற்றை உபயோகிப்பதில்லை. ஏனென்றால், யாருக்கும் எடுத்து… அதை அரைத்து… முகத்தில் போட நேரமில்லை. ஒரு 20 நிமிடம் இருந்தால் போதும், உங்கள் முகத்தை பளபளன்னு மாத்தலாம்.

சரும ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்த கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் பேஸ்பேக்கை வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கற்றாழை தண்டு - 2.

வெள்ளரிக்காய் - 1.

ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்.

தேன் - 2 ஸ்பூன்.

பேஸ்பேக் செய்ய கிண்ணம் - ஒன்று.

செய்முறை :

பேஸ்பேக் செய்ய எடுத்துக்கொண்ட கற்றாழையை முதலில், தோல் நீக்கி ஜெல்லியை தனி கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இதையடுத்து, வெள்ளரிக்காயினை தண்ணீரில் சுத்தமாக கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

தற்போது, இவை இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கூழ்மமாக அரைத்து ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும்.

தொடர்ந்து, அதில் தேவையான அளவு ரேஸ் வாட்டர் மற்றும் தேனை சேர்த்து குழைத்துக்கொள்ளவும். இப்போது, பேஸ்பேக் ரெடி. இதை அப்படியேவும் உபயோகிக்கலாம். இல்லையெனில், ஒரு வெள்ளித்தூணியின் வடிகட்டி அதன் சாற்றை மட்டும் உபயோகிக்கலாம்.

பயன்படுத்தும் முறை :

முதலில், உங்கள் முகத்தை சுத்தமாக கழுவவும்.

இப்போது, முறையாக தயார் செய்த இந்த பேஸ்பேக்கினை, முகம் மற்றும் கழுத்து பகுதிக்கு தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.

சுமார், 20 நிமிடங்களுக்கு பின்னர், குளிர்ந்த நீரில் இதனை சுத்தம் செய்துவிட நல்ல மாற்றம் தெரியும்.

பயன்கள் :

பேஸ்பேக்கில் நாம் பயன்படுத்தும் வெள்ளரி, கற்றாழை இரண்டும் சருமத்தின் ஈரப்பதத்தினை தக்க வைக்க உதவுகிறது. அந்த வகையில் சரும வறட்சி, சரும துளைகள் உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்குகிறது.

பேஸ்பேக்கில் நாம் பயன்படுத்தும் கற்றாழை, சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அந்த வகையில் இந்த பேஸ்பேக், சருமத்தில் காணப்படும் பருக்களை குறைக்க உதவுகிறது.

இந்த கற்றாழை - வெள்ளரி கலவையானது சருமத்தின் இறந்த செல்களை அகற்றி புதிய திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அந்த வகையில் இந்த பேக், மிருதுவான சருமத்தை பெற உதவுகிறது.

மேலும், இதில் சேர்க்கப்படும் தேன் மற்றும் ரோஸ் வாட்டரில் நிறைய பயன்கள் உள்ளது. தேனில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. எனவே, இதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், சருமம் பளீச் லுக்கைப் பெறுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.

First published:

Tags: Beauty Tips, Skin allergy, Skin Care