கூந்தல் பராமரிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். போர்ஹுவாக உங்கள் கூந்தலின் வகை, நீளம், அடர்த்தி, கூந்தலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்ற அடிப்படையில் நீங்கள் கூந்தல் பராமரிப்புப் பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். கூந்தல் பராமரிப்பு பொருட்களில் கண்டிஷனருக்கு முக்கியமான இடமுள்ளது.
ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவது உங்கள் கூந்தலை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும். அதே நேரத்தில் ஹேர் கண்டிஷனரை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி கொட்டும் அபாயமும், முடியின் அடர்த்தி குறையவும் வாய்ப்புள்ளது என்றும் பலர் கூறுகின்றனர். ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஹேய் கண்டிஷனர் பயன்படுத்துவது முடி உதிர்வை ஏற்படுத்தாது ஆனால் ஹேர் கண்டிஷனரை தவறான முறையில் பயன்படுத்தினால் கூந்தல் பாதிப்படையும் என்று சரும நிபுணர், டாக்டர் ஆன்ச்சல் பன்த் கூறுகிறார். இதுகுறித்து விளக்கிய அவர், "ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவது உங்கள் முடி உதிர்வுக்குக் காரணமாகாது. கண்டிஷனரை நீங்கள் கூந்தலில் மூன்றில் இரண்டு பகுதிக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி, ஹேர் கண்டிஷனரை முடியில் வேர்களில் பயன்படுத்தக்கூடாது" என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதற்கான காரணங்களையும் மருத்துவர் பட்டியலிட்டுள்ளார்.
1. ஹேர் கண்டிஷனர் பயன்பாடு கூந்தலை சிக்கலின்றி பராமரிக்க உதவும். அடர்த்தியான அல்லது நீண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு கூந்தலில் சிக்கு விழுவது இயல்பு. அதிலேயே கூந்தல் அடர்த்தியை இழக்க நேரிடும் வாய்ப்பும் உள்ளது. எனவே, ஒவ்வொரு முறை தலைக்குக் குளித்த பின்னே, கண்டினஷர் பயன்படுத்துவது, கூந்தலை மிருதுவாக்கி, முடி பராமரிப்பை எளிதாக மாற்றுகிறது. கூந்தலில் விழும் சிக்கை நீக்குவதிலும் உதவுகிறது.
Monsoon : மழைக்காலத்தில் உண்டாகும் சரும பாதிப்புகளை தவிர்க்க வேண்டுமா? நீங்கள் பின்பற்ற வேண்டிய லிஸ்ட் இதுதான்…!
2. முடி ஆரோக்கியமாக அடர்த்தியாக இருந்தாலும் நுனி முடியில் இருக்கும் பிளவுகள் ஒட்டுமொத்த முடியின் ஆரோக்கியத்தை கெடுத்து அதிகப்படியான முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். நுனி முடியில் உண்டாகும் பிளவுகளை கட்டுப்படுத்துவதில் ஹேர் கண்டிஷனர் மிகவும் உதவியாக இருக்கின்றது.
3. ஹேர் கண்டிஷனர் பயன்பாடு உங்கள் கூந்தலுக்கு, மற்றொரு கூந்தல் லேயராக பாதுகாப்பு அளிக்கிறது. எனவே நீங்கள் கூந்தலை ஸ்டைல் செய்யும் கருவிகளை பயன்படுத்தும் போது அதிக வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஹேய் கண்டிஷனர் உதவி செய்கிறது.
4. பொதுவாகவே உங்களின் கூந்தல் ஆரோக்கியமாக இருந்தாலும், அவ்வப்போது பளபளப்பான மற்றும் மென்மையான கூந்தலை பெற வேண்டுமானால் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தவதால் கிடைக்கும் நன்மைகளைப் பகிர்ந்து கொண்ட மருத்துவர், யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்பதையும் கூறியுள்ளார். உங்களுக்கு எண்ணெய் பசை உள்ள பெண்கள் இருந்தாலோ, அல்லது உங்கள் முதல் மிகவும் மெல்லியதாக இருந்தாலோ, நீங்கள் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை உங்கள் கூந்தலை மேலும் தட்டையாக காட்டக்கூடும்.
உங்களுக்கு சுருட்டையான முடி இருந்தால், அதனை எளிதாகக் கையாள, கண்டிப்பாக ஹேர் கண்டிஷனர் தேவை. வறட்சியான கூந்தலுக்கு ஊட்டமளித்து, பளபளக்காகக் மாற்றும் ஹேர் கண்டிஷனர்கள் உள்ளன. அதே போல, உங்கள் கூந்தல் வகைக்கு ஏற்றவாறு ஹேர் கண்டிஷனர்கள் கிடைக்கின்றன. ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்துவதால் முடி உதிராது மற்றும் பாதிப்பும் அடையாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.