ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

முகச்சுருக்கங்களை நீக்க உதவும் போட்டோக்ஸ் சிகிச்சை பற்றிய கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

முகச்சுருக்கங்களை நீக்க உதவும் போட்டோக்ஸ் சிகிச்சை பற்றிய கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

முகச்சுருக்கங்களை நீக்க உதவும் போட்டோக்ஸ்

முகச்சுருக்கங்களை நீக்க உதவும் போட்டோக்ஸ்

உண்மையில் இது தீங்கு விளைவிப்பதில்லை. இது தசைகளை தளர்த்தவே உதவுகிறது. சுமார் இது 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சிகிச்சை நடைமுறையில் இருப்பதால் கவலைப்பட தேவையில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்களை அழகாக வைத்து கொள்ள சரும சிகிச்சை நிபுணர்களை நாடும் பலரும் போடோக்ஸ் (Botox) என்ற சொல்லை கேள்விப்பட்டிருப்பார்கள். சருமத்தில் இருக்கும் கோடுகள், சுருக்கங்கள் மற்றும் மேலும் சிலவற்றை நீக்கி தங்கள் தோற்றத்தையும் மேம்படுத்த விரும்புவோருக்கு இது ஒரு பிரபலமான சிகிச்சையாகும்.

மேலும் போடோக்ஸ் இளமைத் தோற்றத்தை வெளிப்படுத்த உதவுகிறது. இது மிகவும் பிரபலமான மற்றும் பொதுவான காஸ்மெட்டிக் சிகிச்சைகளில் ஒன்றாகும். அன்டர்லையிங் மசில்ஸை (underlying muscles) ரிலாக்ஸிங் செய்வதன் மூலம் முகத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது. இயற்கை அழகுக்கு எதிராக போடோக்ஸ் அல்லது காஸ்மெட்டிக் ஊசிகளை பயன்படுத்துவது பற்றிய விவாதம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

எனினும் போடோக்ஸ் சிகிச்சை பற்றி ஆன்லைனில் தொடர்ந்து சில கட்டுக்கதைகள் பரவி வருகின்றன. எனவே நீங்கள் எதை நம்பக்கூடாது என்பதை பற்றி நாங்கள் இங்கே சொல்கிறோம்.

கட்டுக்கதை 1 : போடோக்ஸ் சிகிச்சை டாக்ஸிக்கானது மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்

உண்மை: உண்மையில் இது தீங்கு விளைவிப்பதில்லை. இது தசைகளை தளர்த்தவே உதவுகிறது. சுமார் இது 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சிகிச்சை நடைமுறையில் இருப்பதால் கவலைப்பட தேவையில்லை.

கட்டுக்கதை 2 : இது மிகவும் செயற்கையான தோற்றத்தை தந்து ஃப்ரீஸ் (freeze) செய்கிறது

உண்மை: போடோக்ஸ் சிகிச்சை மேற்கொண்டால் முகபாவனைகள் மற்றும் முக அமைப்பு செயற்கையாக தோன்றும் என்ற பயம் பலருக்கு பெரும் கவலையாக உள்ளது. ஆனால் இது ஒரு தவறான கருத்தாகும். சரியாக செய்யப்பட்ட போடோக்ஸ் சிகிச்சை மூலம் சில சிறந்த முடிவுகளைப் பெறலாம். இதனால் கிடைக்கும் மாற்றங்கள் மிகவும் நுட்பமானவை என்பதால் நீங்கள் போடோக்ஸ் செய்துள்ளீர்கள் என்பது பார்ப்பவர்களுக்கு அவ்வளவு எளிதாக தெரியாது.

கட்டுக்கதை 3 : முதல் முறை எடுக்கும் சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால் முகம் மோசமாகி விடும்

உண்மை: இந்த சிகிச்சையினால் ஏற்படும் மாற்றங்கள் செயல் 3 - 4 மாதங்கள் வரை நீடிக்கும். சிகிச்சையின் விளைவுகள் முடிந்தவுடன் தசைகள் மீண்டும் முழு இயக்கத்தை பெறுகின்றன. எனவே பிற சிகிச்சைகளைப் போலவே, உங்கள் அடுத்த அப்பாயின்மென்ட்டை புக் செய்ய வேண்டுமா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

முகத்தில் காணப்படும் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை தடுக்க உதவுகிறது. போடோக்ஸ் விஷயத்தில் பாதுகாப்பு குறித்து நீங்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை. இது ஒரு சில மாதங்களுக்கு நீடிக்கும் செமி-பர்மனன்ட் ட்ரீட்மென்ட்டாகும். எனவே இந்த சிகிச்சையை ஒருமுறை செய்து கொண்ட பிறகு நீங்கள் இதனை தொடர வேண்டாம் என்று நீங்கள் முடிவு செய்தால் ஏற்கனவே எடுத்து கொண்ட சிகிச்சையின் விளைவுகள் ஒருசில மாதங்களில் அப்படியே மறைந்துவிடும். சருமம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.

Also Read : பார்லர் போகாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்ய கைட்லைன்..!

ஒருவருக்கு வளர்சிதை மாற்றம் எவ்வளவு அதிகம் இருக்கிறதோ, அவ்வளவு வேகமாக அவர் எடுத்து கொண்ட போடோக்ஸ் சிகிச்சையின் விளைவுகள் மறையும். ஒருசிலருக்கு இந்த சிகிச்சை அலர்ஜியை ஏற்படுத்த கூடும். திறமையற்ற நிபுணரிடம் சென்றால் இந்த சிகிச்சை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போன்ற எபெக்ட்டை கொடுக்க கூடும். எனவே தேர்ந்த நிபுணரிடம் செல்வது நல்லது. சில மருத்துவ நிலைமைகளின் கீழ் போடோக்ஸ் முரணாக உள்ளது. இதில் கர்ப்பம் அடங்கும். எனவே நீங்கள் இந்த சிகிச்சையை தேர்வு செய்யும் முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

First published:

Tags: Skincare