தினமும் தவறாமல் பல் துலக்குவது போல தலைமுடியை தினமும் முறையாக சீவுவது அவசியம். இந்த எளிய விஷயம் நம் தலைமுடிக்கு பல நன்மைகளை அளிக்கிறது. எனவே ஆரோக்கியமான முடியை பெற நீங்கள் தினமும் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒரு முடி பராமரிப்பு வழக்கம் தலை முடியை சீவுவது. வறண்ட முடி உள்ளவர்கள் அல்லது அதிகமானமுடி உதிர்தலை சந்திப்பவர்கள் கூடுதல் முடி இழப்பை தவிர்ப்பதற்காக சீப்பு பயன்படுத்த தயங்குவார்கள். ஆனால் தலை முடியை சீவ சீப்பு பயன்படுத்துவது ஒரு சுய பாதுகாப்பு நடைமுறை மட்டுமல்ல பல அறிவியல் நன்மைகளையும் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.
காலை ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை என சராசரியாக நாளொன்றுக்கு 2 முறை தலைமுடியை முறையாக சீவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது நபருக்கு நபர் மாறுபடும். நீண்ட முடி கொண்டவர்கள் சிக்கு மற்றும் முடி உடைவதை தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை தலை சீவ அறிவுறுத்தப்படுகிறது.
தினமும் தவறாமல் சீப்பு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..
* சீப்பை கொண்டு முடியை வாருவது உச்சந்தலையின் நுண்குழாய்களில் சிறப்பாக செயல்படுகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை மயிர்க்கால்களுக்கு திறம்பட கொண்டு செல்ல உதவுகிறது, இதனால் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்பட்டு முடி வேர்கள் பலமாவதால் முடி உதிர்வு குறைகிறது.
* உச்சந்தலையில் காணப்படும் செபாசியஸ் சுரப்பிகள் sebum-த்தை உற்பத்தி செய்கின்றன. இயற்கையாகவே முடியை நிலைநிறுத்தி பாதுகாக்க இந்த sebum உதவுகிறது. தினமும் 2 முறை அல்லது அதற்கு மேல் தலை சீவும் போது செபாசியஸ் சுரப்பிகள் தூண்டப்பட்டு சருமத்தில் இருந்து முடியின் வேர் வரை இயற்கை எண்ணெய்கள் சரியாக செல்வது உறுதி செய்யப்படுகிறது.
* தினமும் தவறாமல் தலை சீவி வருவது பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள தேவையற்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.
* உச்சந்தலையையும் கூந்தலையும் சுவாசிக்க அனுமதிக்கிறது மற்றும் பொடுகு நிறைந்த முடியை புதுப்பிக்கிறது.
* தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க, அடர்த்தியை அதிகரிக்க, ஆரோக்கியமாக மற்றும் புத்துணர்ச்சியுடனும் பராமரிக்க உதவுகிறது.
தலைமுடி பராமரிப்பில் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் 3 தவறுகள் : இதை எப்படி சரி செய்வது..?
தலைமுடியை சரியான முறையில் சீவுவது அவசியம் :
* சரியான டூல்ஸ்..
பிளாஸ்டிக் சீப்புகளை பயன்படுத்துவதை விட மரத்தாலான (ரோஸ்வுட்டால் ஆன) சீப்பை பயன்படுத்தி தலைமுடியை வாருவது உதிர்வு, சேதம் உள்ளிட்டவற்றில் இருந்து முடியை பாதுகாக்கும். தவிர, மர சீப்புகள் தலைமுடியை இழுக்காது மற்றும் உச்சந்தலையில் கீறாது.
* வேர்களில் இருந்து வேண்டாம்..
எப்போதுமே தலைமுடியை பகுதி பகுதியாக பிரெஷ்ஷிங் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். நடு பகுதியில் இருக்கும் முடியிலிருந்து தொடங்குங்கள். மேலிருந்து கீழாக சீவுவது முடியை உடைய செய்யும். எனவே உச்சந்தலையை வரை தலைமுடியை மேலே நோக்கி சீவி பின்னர் முழு நீள முடியை சீவ துவங்குங்கள்.
* ஈரமான முடியை சீவாதீர்கள்..
ஈரமான முடி எளிதில் உடையும் மற்றும் பாதிக்கப்படும் என்பதால் சீப்பைப் பயன்படுத்தும் முன், முடியை உலர்த்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair care