ஆரோக்கியமான தோல் பராமரிப்பிற்கு தேங்காய் மற்றும் மஞ்சள்.. எப்படி பயன்படுத்தவேண்டும் தெரியுமா..?

உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் விரும்பினால், இந்த பானம் உங்கள் உணவில் ஒரு சக்திவாய்ந்த கூடுதலாக இருக்கும்.

ஆரோக்கியமான தோல் பராமரிப்பிற்கு தேங்காய் மற்றும் மஞ்சள்.. எப்படி பயன்படுத்தவேண்டும் தெரியுமா..?
தேங்காய் பால் மற்றும் மஞ்சள் பானம்
  • News18 Tamil
  • Last Updated: November 17, 2020, 11:00 AM IST
  • Share this:
நம் உடலின் மற்ற பாகங்களை போலவே, சருமத்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்க சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. நமது உடல் உறுப்புகளில் மிகப் பெரியது, வெளிப்புறச் சூழலின் செயல்களுக்கும், நம் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களுக்கும் எளிதில் பாதிக்கூடியது நமது தோல், ஆனால் நம் வெளிப்புற சூழல்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பதால், நமது உடல் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.

நமது உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே சருமத்திற்கும் நல்ல ஆரோக்கியத்தை கடைப்பிடிக்க சில அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. நமது உடலின் மிக முக்கிய உறுப்பான சருமம் வெளிப்புற சுற்றுச்சூழல் அத்துடன் உடலுக்கு உள்ளே நடக்கும் மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படுகிறது. வெளிப்புறச் சுற்றுச்சூழல்களால் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

உங்கள் சருமம் அதன் இயற்கையான பொலிவை இழந்ததற்கு, மாசு, நீங்கள் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள் அல்லது வேலையில் உள்ள மன அழுத்தம் போன்றவற்றைக் குறை கூறிக்கொண்டே இருக்கிறீர்கள். அதற்கு இப்போதும் நீங்கள் எதுவும் செய்யாவிட்டால், அது இன்னும் ஆரோகியத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்.


தோல் பராமரிப்பு குறிப்புகள் :

தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அறியப்பட்ட சில ஊட்டச்சத்துக்களில் ஆக்ஸிஜனேற்றிகள், ஒமேகா -3 மற்றும் -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் E மற்றும் C ஆகியவை அடங்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற தாவர உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க முக்கியமான அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டிருக்கின்றன. வைட்டமின் C கொலாஜனின் தொகுப்புக்கு உதவுகிறது, அதே நேரத்தில் வைட்டமின் E சூரியன் மற்றும் புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க முக்கியமானது.

இரத்த சோகையை ஏற்படுத்தும் இரும்புச்சத்து குறைபாட்டைத் தடுக்கவேண்டுமா? இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்..தேங்காயின் நன்மைகள்:

தேங்காய் எண்ணெய் இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. முடியின் வளர்ச்சிக்கும், வறண்ட முடியை சரி செய்வதற்கும், தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. கொசு மற்றும் பூச்சிக் கடிக்கு மருந்தாக தேங்காய் எண்ணெய் செயல்படுகிறது. நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், முகப்பரு மற்றும் தோல் அரிப்பு பிரச்சனைகளை போக்கவும் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக தேங்காய் இருக்கிறது.

தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. சுருக்கங்களை போக்கி இளமைத் தோற்றத்தைத் தருகிறது. மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல் அரிப்பு போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் போக்குகிறது.



மஞ்சளின் நன்மைகள்:-

மஞ்சளில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்புத்தன்மை, பருக்கள் உட்பட, எல்லா விதமான சரும சிக்கல்களையும் குணப்படுத்த உதவுகிறது. அழற்சியை எதிர்த்தும் மஞ்சள் போராடுகிறது. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. பருக்கள், அவற்றால் ஏற்படும் சிவந்த தடிப்புகள், அழற்சிகள் போன்றவற்றிற்கு எதிர்த்து போராடி, அவற்றை போக்கும் தன்மை மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் இதனை சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.

இதனால் சருமம் மிருதுவாகவும், ரோமங்கள் இன்றி மென்மையாகவும் இருக்கும். பாதங்களில் ஏற்படும் வெடிப்பை போக்க மஞ்சள் ஒரு சிறந்த மருந்தாக உதவி செய்கிறது. மஞ்சளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் மற்றும் அதன் காயங்களை குணப்படுத்தி, வலி நிவாரணம் அளிக்கும் பண்பு பாத வெடிப்புகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.



தேங்காய் மற்றும் மஞ்சள் பானம் - நன்மைகள் :

இந்த பானத்தை தயாரிக்க வாழைப்பழம், அன்னாசி, ஆளிவிதை, தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், இஞ்சி, இலவங்கப்பட்டை, மஞ்சள் ஆகியவை தேவைப்படுகின்றன. உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் விரும்பினால், இந்த பானம் உங்கள் உணவில் ஒரு சக்திவாய்ந்த கூடுதலாக இருக்கும். தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் முக்கியமான வைட்டமின்களின் ஆதாரங்களாகவும் உள்ளது.

மேலும் பளபளப்பான ஆளிவிதைகள் உங்களுக்கு ஒமேகா கொழுப்பு அமிலங்களை தருகின்றன. இஞ்சி மற்றும் மஞ்சள் இரண்டும் வேர் மசாலாப் பொருட்களாகும், அவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதன் மூலமும் அழற்சியை எதிர்த்துப் போராடுவதன் மூலமும் முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் நன்மைகளைக் கொண்டுள்ளன.



பானத்தை தயாரிக்கும் முறை :

1. வாழைப்பழம் மற்றும் அன்னாசிப்பழத்தை நறுக்கவும்.

2. அவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் அரைத்த இஞ்சி, தேங்காய் எண்ணெய், இலவங்கப்பட்டை தூள், மஞ்சள் தூள் மற்றும் ஆளிவிதை ஆகியவற்றை சேர்க்கவும்.

3. தேங்காய் பாலைச் சேர்த்து, கையில் வைத்திருக்கும் பிளெண்டரைப் பயன்படுத்தி அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.

4. நீங்கள் விரும்பினால் பானத்தை இனிமையாக்க சிறிது தேனையும் சேர்க்கலாம்.

5. இப்போது இந்த பருக பானம் தயார். நீங்கள் பரிமாறலாம்!.

 
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading