• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சாக்லெட் ஃபேஷியல் அல்லது சூப்பர் ஃபுட் ஃபேஷியல்...சருமப் பொலிவிற்கு இரண்டில் எது சிறந்தது..?

சாக்லெட் ஃபேஷியல் அல்லது சூப்பர் ஃபுட் ஃபேஷியல்...சருமப் பொலிவிற்கு இரண்டில் எது சிறந்தது..?

ஃபேஷியல்

ஃபேஷியல்

பேஸ் மாஸ்குகள் சருமத்தில் நீண்ட நேரம் இருப்பதால் இது சரும துளைகளில் ஊடுருவுகிறது. எனவே உங்கள் சருமம் வறண்டதாக உணர்ந்தால் அல்லது உடனடியாக பளபளப்பாக தோன்ற வேண்டும் என விரும்பினால் ஃபேசியல் மாஸ்க் பயன்படுத்தலாம்.

  • Share this:
பேஸ் மாஸ்க் பயன்படுத்துவது மற்றும் ஸ்கின் கேர் முறைகளை சரியாக பின்பற்றுவது சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்தை ஈரப்பதமாக்குவதிலும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்களை நீக்குவதிலும் ஃபேசியல் மாஸ்க் முக்கிய பங்கு வகிக்கின்றன, இது சருமத்தில் உள்ள சோர்வையும், ஹைப்பர் பிக்மென்டேஷனையும் நீக்குகிறது.

மேலும் பேஸ் மாஸ்க்குகளை வழக்கமாக பயன்படுத்துவது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. பேஸ் மாஸ்குகள் சருமத்தில் நீண்ட நேரம் இருப்பதால் இது சரும துளைகளில் ஊடுருவுகிறது. எனவே உங்கள் சருமம் வறண்டதாக உணர்ந்தால் அல்லது உடனடியாக பளபளப்பாக தோன்ற வேண்டும் என விரும்பினால் ஃபேசியல் மாஸ்க் பயன்படுத்தலாம். சாலிசிலிக் அமிலம் முகப்பருக்களை நீக்க உதவுகிறது, அதேபோல வைட்டமின் சி சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது.

எனவே இவை இரண்டும் இருக்கும் வகையிலான ஃபேசியல் மாஸ்குகளை நீங்கள் முயற்சி செய்யலாம். தற்போது எண்ணற்ற ஃபேசியல் மாஸ்க்குகள் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் சாக்லேட் அடிப்படையிலான ஃபேசியல் மாஸ்க்குகள் மற்றும் சூப்பர்ஃபுட் ஃபேசியல் மாஸ்க் ஆகியவைகள் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

சாக்லேட் ஃபேசியல் மாஸ்க் :

சாக்லேட் டில் பாலிபினால்கள், கேடசின்கள் மற்றும் ஃபிளாவனால்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுவதால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சருமத்தை ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.



சமீபத்தில் பல்வேறு அழகு நிலையங்களில் சாக்லேட் ஃபேசியல் மாஸ்க் செய்யப்படுகிறது. சாக்லேட் பொலிவான சருமத்தை உறுதி செய்கிறது மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால் இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் உங்கள் முகத்தில் உள்ள கோடுகள், சுருக்கங்களையும் நீக்குகிறது. இந்த சாக்லேட் பேஸ் மாஸ்க் அனைத்து விதமான சருமத்திற்கும் ஏற்றது.

சூப்பர்ஃபுட் ஃபேசியல் மாஸ்க் :

சூப்பர்ஃபுட் என்பது சரும பராமரிப்பு துறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பல நன்மைகளைக் கொண்ட முக்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை குறிப்பிடும் சூப்பர்ஃபுட் என்ற வார்த்தை தற்போது பேசியல் மாஸ்குகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மாஸ்குகள் ஆரோக்கியமான சருமத்தை உருவாக்குவதற்கு உதவுகிறது.

Weight Loss | இந்த ஜூஸ் ட்ரை பண்ணுங்க… உடல் எடை சட்டென குறையும்…

வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உட்கொள்ளும் போது நமது சரும அழகு மேம்படுத்துவது போல, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த மாஸ்குகளை நமது சருமத்தில் நேரடியாக பயன்படுத்துவதால் சருமம் பிரகாசமடையும். சூப்பர்ஃபுட் மாஸ்க்குகள் தேன், பப்பாளி மற்றும் கிரீன் டீ போன்ற எளிமையான இயற்கை பொருட்களில் இருந்து தயார் செய்யப்படுகிறது.

அவகோடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் ஈ மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் அது உங்கள் சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே அவகோடா ஃபேசியல் மாஸ்கை பயன்படுத்தலாம்.



ஒரு ஃபேசியல் மாஸ்கை எத்தனை முறை பயன்படுத்தலாம்?

நிபுணர்களின் கூற்றுப்படி பெரும்பாலான ஃபேசியல் மாஸ்குகளை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தப்பட வேண்டும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், நீங்கள் வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம். உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் வாரத்திற்கு ஒரு முறை ஃபேசியல் மாஸ்கை பயன்படுத்துவது நல்லது.

சென்சிடிவ் சருமம் இருப்பவர்கள் எது பயன்படுத்தினாலும் கவனமாக இருக்க வேண்டும், நீங்கள் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும் வகையிலான ஃபேசியல் மாஸ்க்குகளை பயன்படுத்தலாம். இதனை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: