சோப் மற்றும் டூத்பேஸ்டில் இருக்கும் வேதிப்பொருட்கள் எலும்புகளை பாதிக்குமா ?

இந்த கெமிக்கலானது பெண்களின் எலும்புகளை எளிதில் தாக்கும் ஆற்றல் கொண்டது.

News18 Tamil
Updated: June 27, 2019, 2:08 PM IST
சோப் மற்றும் டூத்பேஸ்டில் இருக்கும் வேதிப்பொருட்கள் எலும்புகளை பாதிக்குமா ?
சோப்
News18 Tamil
Updated: June 27, 2019, 2:08 PM IST
குளியலில் உடம்பு தேய்க்கப் பயன்படுத்தப்படும் சோப் மற்றும் பல் துலக்கப் பயன்படுத்தப்படும் பேஸ்ட் இரண்டிலும் டிரைக்ளோசன் ( triclosan ) என்னும் வேதிபொருளானது  எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

டிரைக்ளோசன் என்னும் வேதிபொருளானது  கிருமி நீக்கியாகப் ( Antibacterial ) பயன்படுத்தப்படுகிறது. இது எண்டோக்ரைன் (endocrine) அமைப்பை சீர்குலைக்கும் ஆற்றல் கொண்டது.

அதாவது எண்டோக்ரைன் என்பது உடல் வெளியிடும் ஹார்மோன்களை சமன் செய்யும். டிரைக்ளோசன் உடலில் புற்று நோய் போன்ற தீவிரமான நோய்களை ஏற்படுத்துவதால் இதை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இந்த கெமிக்கலை தடை செய்தது.


Clinical Endocrinology & Metabolism, என்னும் தளத்தில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த கெமிக்கலானது பெண்களின் எலும்பை வலுவிழக்கச் செய்து செல் அரிப்பது போல் அரித்து ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis ) என்று சொல்லக் கூடிய எலும்புப் புரையை உண்டாக்குகிறது என்று கூறியுள்ளது.சோப், சானிடைசர், டூத்பேஸ்ட், மவுத் வாஷ் போன்ற மனிதர்கள் தினசரி பயன்படுத்தக் கூடிய பொருட்களில் இந்த டிரைக்ளோசன் கெமிக்கல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

Loading...

ஆய்வில் டிரைக்ளோசன் கெமிக்கல் எலும்பின் கனிம அடர்த்தியை நேரடியாகத் தாக்கி செல்களை அரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனால், மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன என்று யின்ஜுன் லி கூறுகிறார். இவர் சீன ஹாங்ஸௌ மருதுவக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியராவார்.

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1,848 பெண்களை அதிகமாக தாக்கியதால் இந்த கெமிக்கலானது பெண்களின் எலும்புகளை எளிதில் தாக்கும் ஆற்றல் கொண்டது என்று கண்டறிந்துள்ளனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...