திருமணத்திற்கு முன் பளிச் முகத்திற்கான கெமிக்கல் இல்லா ஃபேஷியல்.. வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..!

Sivaranjani E | news18
Updated: August 6, 2019, 4:39 PM IST
திருமணத்திற்கு முன் பளிச் முகத்திற்கான கெமிக்கல் இல்லா ஃபேஷியல்.. வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..!
கெமிக்கல் இல்லா ஃபேஷியல்
Sivaranjani E | news18
Updated: August 6, 2019, 4:39 PM IST
திருமண மேடையில் மணமக்கள்தான் ஹீரோ, ஹீரோயின் என்பது அனைவரும் அறிந்ததே. அந்நாளில் குறிப்பாக பெண்கள் தன்னை அழகாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள். அதேபோல் பளிச் முகத்தை ஒரே நாளில் கொண்டு வர முடியாது. திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அழகுப் பராமரிப்பு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் திருமணத்தின்போது தெளிவான முகத்தோற்றத்தை பெற முடியும்.

பார்லர்களில் ஃபேஷியல் செய்தாலும் வீட்டிலேயே கெமிக்கல் இல்லாமல் தயாரித்து பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும். அந்த வகையில் இந்த ஃபேஷியல் கிட்டுகள் முற்றிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் கொண்டதாகும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் , இறந்த செல்கள் முற்றிலும் நீங்கும்.

முதல் படி : கிளென்சர்

இதில் கரும்புள்ளிகள் அகலும். பாதிக்கப்பட்ட சருமத்தை சீராக்கி பளிச் தோற்றத்தை அளிக்கும்.

தேவையான பொருள்

அரிசி மாவு - 1 ஸ்பூன்

கோகோ பவுடர் - 1/2 ஸ்பூன்

ஸ்ட்ராபெர்ரி பழம் - 1



செய்முறை : மொரமொரப்பான அரிசி மாவுடன் கோகோ பவுடர் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை அரைத்து ஊற்றி நன்குக் கலக்கவும். தண்ணீர் ஊற்றாமல் பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும். முகத்தை கழுவி துடைத்தபின் இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து ஐந்து நிமிடங்கள் சீராக தேய்க்கவும். மூக்கு போன்ற பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். அப்போதுதான் வெள்ளை மற்றும் கரும்புள்ளிகள் அகலும்.

படி இரண்டு : மசாஜ் கிரீம்

இந்த படியில் கருமை நீங்கி முகத்தின் நிறம் சீராகும்.

தேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெர்ரி - 3

பனீர் - 1 1/2 ஸ்பூன்

கோகோ பவுட - 1 ஸ்பூன்

செய்முறை : ஸ்ராபெர்ரியை அரைத்துக்கொள்ளவும். பனீர் மற்றும் கோகோ பவுடரை நன்குக் கலந்து அதில் ஸ்ட்ராபெர்ரி பேஸ்டை சேர்த்து நன்குக் கலக்கவும். தற்போது அந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.

மூன்றாம் படி : ஃபேஸ் பேக்

இந்த இறுதி படியில் முகம் தெளிவடைந்து அழகை மெருகேற்றும்.

தேவையான பொருட்கள்

கோகோ பவுடர் - 1 ஸ்பூன்

தேன் - 1/2 ஸ்பூன்

ஸ்ட்ராபெர்ரி - தேவையான அளவு



செய்முறை : ஸ்ட்ராபெர்ரியை அரைத்துக் கொள்ளவும். கோகோ பவுடர், தேன் கலந்து கலக்கவும். ஸ்ட்ராபெர்ரியை பேஸ்ட் பதம் வரும் வரை ஊற்றி கலக்கவும். நன்குக் கலந்ததும் முகம் கழுத்து வரை அப்ளை செய்து 5 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

குறிப்பு : இந்த ஸ்ராபெர்ரி கோகோ ஃபேஷியல் அனைத்துவிதமான சருமம் கொண்டோருக்கும் பொருந்தும். வாரம் இரண்டு முறை செய்யலாம். இதனால் பார்லர் சென்று கெமிக்கல் நிறைந்த ஃபேஷியல் செய்து கொள்வதால் ஏற்படும் சரும அலர்ஜியை தவிர்க்கலாம். வீட்டில் ரிலாக்ஸாகவும் செய்யலாம். குறிப்பாக இதனால் பணமும் மிச்சமாகும்.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...