எந்த ஒரு சரும பராமரிப்பு வழக்கத்திலும் மாய்ஸ்ட்ரைசிங் இன்றியமையாத ஒன்று. பொதுவாக மார்க்கெட்டுகளில் உடல் மற்றும் முகம் என இரண்டையும் தனித்தனியாக மாய்ஸ்சரைஸ் செய்து கொள்ளும் வகையில் தனித்தனி ஸ்கின் கேர் ப்ராடெக்ட்ஸ்கள் விற்கப்பட்டு வருகின்றன.
எனினும் உடல் மற்றும் முகத்திற்கு தனித்தனி மாய்ஸ்சரைசிங் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துவது உங்கள் பட்ஜெட்டிற்கு இடையூறாக இருக்கலாம். எனினும் சருமத்திற்கு போதுமான ஊட்டமளிக்க மற்றும் ஈரப்பதமாக வைத்திருக்க சரியான தோல் பராமரிப்பு தயாரிப்புகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது முக்கியம்.
தங்கள் முகம் உட்பட முழு உடலுக்கும் பாடி லோஷனை பயன்படுத்தலாம் அதாவது பாடி லோஷனை கூட ஃபேஸ் மாய்ஸ்சரைசராக பயன்படுத்தலாம் என சோஷியல் மீடியாக்களில் டிப்ஸ்கள் ஷேராகி வருகின்றன. இது உண்மையா என்ற ஆச்சரியமான கேள்விக்கு பிரபல தோல் மருத்துவரான டாக்டர் ஆஞ்சல் பந்த் இன்ஸ்டாவில் பதில் அளித்துள்ளார். இது தொடர்பான இன்ஸ்டா போஸ்ட்டில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இந்த கேள்விக்கான தொழில்நுட்ப ரீதியான பதில் ஆம் என்பதாகும். பாடி லோஷனை ஃபேஸ் மாய்ஸ்சரைசராக பயன்படுத்தலாம். வறண்ட சருமம் (dry skin) இருக்கும் ஒருவர் தனது முகத்தில் body moisturiser-ஐ பயன்படுத்தலாம்.
View this post on Instagram
பாடி லோஷன்கள் திக்கராக, க்ரீஸியராகவும் இருக்கும், மேலும் சருமத்தை எண்ணெய் பசையாக உணர வைக்கலாம். எனவே ஆயில் ஸ்கின் கொண்ட ஒருவர் தனது முகத்தில் ஒரு லைட்வெயிட் ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நல்லது என பாந்த் மேலும் கூறி இருக்கிறார். பாடி லோஷனை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் நாம் மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால் பாடி லோஷன்களில் நறுமணம் (fragrance) இருக்கலாம்.
பொதுவாக உடலில் நறுமண தயாரிப்புகளை பயன்படுத்துவது நல்லது. அவை உடலுக்கு நல்ல மணம் தருவதோடு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். ஆனால் எப்போதுமே முகத்தில் அதிக வாசனையுள்ள பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். பாடி லோஷனை நீங்கள் முகத்தில் பயன்படுத்த விரும்பினால் அந்த தயாரிப்பு நறுமணமற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Also Read : ஸ்கின்கேர் தயாரிப்புகளில் உள்ள சாலிசிலிக் ஆசிட் - ரெட்டினோல் சருமத்திற்கு செய்யும் நன்மைகள் என்ன..?
பொதுவாக நம் முகம் மற்றும் உடல் இரண்டுமே மிக வித்தியாசமான தோல் வகைகளை கொண்டுள்ளன. நம் உடலின் தோலை விட, முகத்தில் இருக்கும் தோல் மெல்லியதாக மற்றும் அதிக சென்சிட்டிவ் கொண்டதாக இருக்கும். கூடுதலாக நம் முகம் வெயிலில் வெளியில் செல்வதால் புற ஊதா கதிர்கள் மற்றும் மாசு போன்ற சுற்றுச்சூழல் கூறுகளுக்கு அடிக்கடி வெளிப்படுகிறது. உடல் சருமத்தை விட முக சருமம் சென்சிட்டிவானது என்பதால் சாதாரண பாடி லோஷன்களை வழங்க முடியாத அளவுக்கு முகத்திற்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.
எனவே ஃபேஸ் மாய்ஸ்சரைசர்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நாம் வாங்கி பயன்படுத்துகிறோம். ஏனெனில் அவை நம் ஸ்கின்கேர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தவிர பாடி லோஷன்களுக்கு மத்தியில் ஃபேஸ் மாய்ஸ்சரைசர்கள் உலகளாவிய அளவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆரோக்கிய சருமத்திற்கான சில மாய்ஸ்ட்ரைசிங் டிப்ஸ்கள் இங்கே:
- உங்கள் முகம் மற்றும் உடலை வாஷ் செய்ய வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும், மிக சூடாக இருக்க கூடாது. அப்படி இருந்தால் அது உங்கள் சருமத்தை வறண்டு போக வைக்கலாம்.
- முகம் அல்லது உடலை வாஷ் செய்யும் போது தோலை ஸ்க்ரப்பிங் அல்லது ரப்பிங் செய்வதை விட மெதுவாக மசாஜ் செய்வது நல்லது.
- ஒரு டவலை கொண்டு உங்கள் சருமத்தை அழுத்தி துடைப்பதற்கு பதில் மெதுவாக ஒத்தி எடுத்து ஈரத்தை துடைக்கலாம்.
- சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு ஒரு நாளைக்கு 2 முறை உங்கள் சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்யவும். உங்கள் சருமத்தில் மாய்ஸ்சரைசரை அப்ளை செய்து மேல்நோக்கி மசாஜ் செய்யவும்.
- உங்கள் மாய்ஸ்சரைசரில் சன்ஸ்கிரீன் இல்லை அல்லது குறைந்த SPF இருந்தால்,வெளியே செல்வதற்கு முன் SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட அளவு SPF இருக்கும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.
- சென்சிட்டிவ், நார்மல், ட்ரை, ஆயில் அல்லது நார்மல் டு ட்ரை என உங்கள் ஸ்கின் டைப் எதுவாக இருந்தாலும் அதற்கேற்ற சரியான மாய்ஸ்சரைசரை கண்டறிந்து பயன்படுத்துங்கள்.
- பொதுவாக உங்கள் சரும வகைக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கிரீம்களை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் சருமம் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Moisturizer, Skincare