நரைத்த முடியை 'கெமிக்கல் டை' இல்லாமல் மீண்டும் இயற்கையாக கருப்பாக்க முடியுமா..?

”முற்றிலும் வெள்ளையாகி இருக்கும் முடிகளை மீண்டும் கருப்பாக்க முடியுமா..?”

நரைத்த முடியை 'கெமிக்கல் டை' இல்லாமல் மீண்டும் இயற்கையாக கருப்பாக்க முடியுமா..?
மாதிரி படம்
  • Share this:
முதுமையில் வெள்ளை முடி தென்படுவது இயற்கை என்றாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்றைய தலைமுறைக்கு இல்லை என்றே சொல்லலாம். அதனால்தான் கெமிக்கல் டை வளர்ச்சி அதிகரித்துள்ளது.

சரி முதுமையில்தான் வெள்ளை முடி என்றாலும் தற்போது இளமையிலேயே வெள்ளை முடி எட்டிப்பார்ப்பதும் சகஜமாகிவிட்டது. இதற்கு என்ன காரணம் என கண்டறியாமல் இளைஞர்களும் கெமிக்கல் டை பக்கம் திரும்பி விடுகின்றனர்.

என்ன காரணம் ?


தலைமுடிக்கு கருமை நிறமிகளை அளிப்பதே மெலனின் என்கிற வேதிப்பொருள்தான். அந்த மெலனின் வயது கூடக் கூட தன் உற்பத்தியையும் குறைத்துக்கொள்வதால் முதுமையில் வெள்ளை முடி வருகிறது. ஆனால் இளமையில் தோன்றுவதற்கு வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடல் ஆரோக்கியம், மரபணு என பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை சரி செய்தாலே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

சரி பிரச்னைகளைக் கண்டறிந்து சரி செய்தாலும் முற்றிலும் வெள்ளையாகி இருக்கும் முடிகளை மீண்டும் கருப்பாக்க முடியுமா..? அல்லது உதிர்ந்து புதிதாக தோன்றும் முடி கருப்பாக வளருமா..?

ஹெல்த்லைன் இதழின் ஆய்வுப் படி உற்பத்தியாகியுள்ள வெள்ளை அல்லது கிரே முடிகளை அப்படியே கருப்பாக மாற்ற முடியாது. வேண்டுமென்றால் இயற்கை முறையில் டை அடித்துக்கொள்ளலாம்.

ஆனால், இளமையில் வெள்ளை முடி எனில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வெள்ளை முடி வளர்ச்சியை தடுக்கலாமே தவிற வெள்ளை முடிகள் கருப்பாக மாறாது. புதிய முடி வளர்ச்சியை கருப்பாக மாற்றலாம். அதேபோல் மரபணு காரணமாக இருந்தாலும் மாற்றுவது கடினம்.

தலைமுடி வெடிப்பு கூந்தல் வளர்ச்சியை தடுக்குமா..? இதற்கான வீட்டுக்குறிப்புகள் இதோ

எனவே வைட்டமின் B12, காப்பர், இரும்புச் சத்து, ஸிங்க், செலெனியம் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். மன அழுத்தம், மனச் சோர்வை குறைத்துக்கொள்ளுங்கள். மேலும் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறலாம்.

அதோடு தலைமுடி பராமரிப்பு, தலைமுடிக்கான வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். இவற்றை சரியாக செய்தாலே மெலனின் உற்பத்தியை அதிகரித்து வெள்ளை முடி வளர்ச்சியை தவிர்க்கலாம்.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 

 
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading