Home /News /lifestyle /

புருவத்திலும் பொடுகு ஏற்படுமா? தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த முழு விபரம்!

புருவத்திலும் பொடுகு ஏற்படுமா? தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த முழு விபரம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Hair Care | வறண்ட சருமம் உள்ள பலருக்கும் புருவத்தில் பொடுகு ஏற்படுவது பொதுவான ஒன்றாகி விட்டது. தலை முடி பொடுகைப் போன்று புருவத்தில் உள்ள பொடுகும் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தலையில் பொடுகு என்ற வார்த்தைகளை அதிகளவில் கேட்டிருப்போம் மற்றும் பல விளம்பரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் புருவத்தில் பொடுகு என்பது இதுவரை அதிகளவில் கேட்காத வார்த்தைகளில் ஒன்றாக உள்ளது. ஆம் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் மலசீசியா எனப்படும் பூஞ்சை மற்றும் வறண்ட சருமத்தினால் பலருக்கு புருவத்தில் பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது. இதோடு மட்டுமின்றி வேறு பல காரணங்களும் புருவத்தில் பொடுகு ஏற்படுவதற்காக வாய்ப்பாக உள்ள நிலையில் அவை என்னென்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொண்டு முன்னெச்சரிக்கையோடு இருக்க முயல்வோம்..

    செபோரிக் டெர்மட்டிட்ஸ்:

    புருவங்களில் பொடுகு ஏற்படுவதற்கு செபோரிக் டெர்ட்டிஸ் அதாவது ஒருவகை ஈஸ்ட் தொற்று காரணம் என கூறப்படுகிறது. மேலும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அதிகப்படியான மன அழுத்தத்தினாலும் புருவ பொடுகு ஒருவருக்கு அதிகரிக்கிறது.

    தடிப்புத் தோல் அழற்சி: ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக செயல்படும் போது தடிப்புத் தோல் அழற்சி ஏற்படுகிறது. இவை ஆரோக்கியமான தோல் திசுக்களைத் தாக்குவதோடு, தோலின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் பலருக்கு தோல் அரிப்பு, தோல் வலி மற்றும் புருவங்களில் தோல் உரிதல் போன்றவை ஏற்படும். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை என்பதால் இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    Read More : முடிக்கு ஹீட்டர் பயன்படுத்துறீங்களா..? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க...


    வறண்ட சருமம்:

    ஒருவருக்கு சருமத்தில் வறட்சி ஏற்பட்டாலும் கண்களின் புருவங்களில் அரிப்பு ஏற்பட்டு பொடுகு ஏற்படுகிறது.

    சொரியாசிஸ்:

    சொரியாசிஸ் ஒருவருக்கு ஏற்பட்டால், முகம் உள்பட உடல் முழுவதும் அலர்ஜி மற்றும் அரிப்பு ஏற்படுவதோடு தோல் பெயர்த்துவிடும். இறந்த திசுக்களால் ஏற்படும் பாதிப்பை முன்னதாக கண்டுபிடிக்காவிடில் நிச்சயம் பல பாதிப்புகளை உங்களுக்கு ஏற்படுத்தும்.

    இதோடு ஒருவருக்கு எக்ஸிமோ பாதிப்பு ஏற்படும்போது சருமத்தில் உள்ள தோல்கள் செதில், செதிலாக உரிந்து பெயர்ந்து வரும். மேலும் சருமம் சிவந்து போவதோடு. சிலருக்கு சருமத்தில் ரத்தக்கசிவும் ஏற்படும். இந்த நோய் ஒருவருக்கு தீவிரமடைவதற்கு முன்னதாக ஒரு சிலருக்கு புருவங்களில் பொடுகு போன்ற அறிகுறிகளும் உங்களுக்கு ஏற்படும். இதோடு அதிக ரசாயனங்கள் கலந்து ஷாம்பு, கிரீம்கள், பேஸ் வாஸ், சோப்பு போன்றவை பயன்படுத்தும் போது பலருக்கு தோல் அழற்சி ஏற்படும். இதுவும் புருவங்களில் பொடுகு உண்டாக வழிவகை செய்கிறது.

    புருவங்களில் பொடுகு ஏற்படுவதற்கான அறிகுறிகள்:

    * செதில் புருவங்கள்
    * புருவ அரிப்பு
    * புருவங்களைச் சுற்றி எண்ணெய் பசை சருமம் உண்டாதல்
    * புருங்களைச் சுற்றி அரிப்பு மற்றும் வெள்ளை, மஞ்சள செதில்கள் ஏற்படுதல்
    * சிவப்பு நிற திட்டு போன்ற தோல் அழற்சி
    * சொறி ஏற்படுதல்
    * ஹைப்பர் பிக்மென்டேஷன்

    ​தடுப்பதற்கான வழிமுறைகள்:

    1. புருவங்களில் ஏற்படும் பொடுகைத் தடுப்பதற்கு முதலில் நீங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.

    2. அதிக ரசாயனம் கலந்து ஷாம்பு, சோப்பு, கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    3. வீட்டிலேயே கிடைக்கும் வேப்ப எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றை வைத்து வாரத்திற்கு இருமுறையாவது கண்களுக்கு மேலே புருவங்களில் மசாஜ் செய்ய வேண்டும்.

    4. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

    மேற்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Beauty Tips, Fashion Tips

    அடுத்த செய்தி