Home /News /lifestyle /

வயதாகும் அறிகுறிகளை அகற்றும் போடாக்ஸ் சிகிச்சை பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்...

வயதாகும் அறிகுறிகளை அகற்றும் போடாக்ஸ் சிகிச்சை பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்...

வயதாகும் அறிகுறிகளை அகற்றும் போடாக்ஸ் சிகிச்சை

வயதாகும் அறிகுறிகளை அகற்றும் போடாக்ஸ் சிகிச்சை

போடோக்ஸ் என்பது பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் ஒரு பாதுகாப்பான காஸ்மெட்டிக் சிகிச்சையாகும். இதுவரை உலகம் முழுவதிலும் 16 மில்லியனுக்கும் மேற்பட்ட போடோக்ஸ் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

முகத்தில் ஏற்படும் வயதாவதற்கான அறிகுறிகள் அதாவது ஏஜிங் சைன்ஸ் என்பதை நீக்குவதற்கு உதவும் பிரபலமான சிகிச்சைகளில் ஒன்றுதான் போடோக்ஸ் (Botox) என்பதாகும்.. போடோக்ஸ் என்பது சுத்திகரிக்கப்பட்ட புரதத்தை முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் ஊசி மூலமாக தசைகளில் செலுத்தப்படும் சிகிச்சை ஆகும். புரதம் தசைகளில் செலுத்தப்படும் பொழுது சருமத்தில் மடிப்புகள் மற்றும் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கி இளமையான மற்றும் பொலிவான தோற்றத்தை வழங்குகிறது.

ஆன்டி-ஏசிங் சிகிச்சை என்று கூறப்படும் இளமையான தோற்றம் பெறுவதற்கு உதவும் சிகிச்சைகளில் ஒன்றான போடோக்ஸில் பயன்படுத்தப்படும் ஆக்டிவான உட்பொருள் பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. முறையான பயிற்சி பெற்ற மற்றும் தகுதிவாய்ந்த சான்றளிக்கப்பட்ட மருத்துவர் மட்டுமே இந்த சிகிச்சையை வழங்க வேண்டும். பலரும் இளமையான தோற்றத்தை பெறுவதற்கு இந்த சிகிச்சையை தற்போது நாடி வருகின்றனர். இந்த சிகிச்சை பற்றி பரவலாக கூறப்படும் தவறான விவரங்கள் மற்றும் கட்டுக்கதைகளை பார்க்கலாம்.

போடோக்ஸ் ஆபத்தானது மற்றும் நச்சு விளைவுக்கும்:

போடோக்ஸ் என்பது பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் ஒரு பாதுகாப்பான காஸ்மெட்டிக் சிகிச்சையாகும். இதுவரை உலகம் முழுவதிலும் 16 மில்லியனுக்கும் மேற்பட்ட போடோக்ஸ் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. சில மருத்துவ சிகிச்சைகளில் போடோக்ஸ் சிகிச்சையும் சேர்க்கப்படுகிறது. உதாரணமாக தீராத ஒற்றை தலைவலி என்று கூறப்படும் மைக்ரேன், அதிகப்படியான வியர்வை மற்றும் ஓவர்-ஆக்டிவ் சிறுநீர்ப்பை ஆகியவற்றுக்கும் போடோக்ஸ் சிகிச்சை மருத்துவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே போடோக்ஸ் சிகிச்சை என்பது ஆபத்தானது கிடையாது மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சுக்கள் இதில் இல்லை.



போடோக்ஸ் என்பது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்

ஊசி போடுவது என்றாலே அது கொஞ்சம் வலி நிறைந்ததாகத்தான் இருக்கும். எனவே காஸ்மெடிக் சிகிச்சைகள் பொறுத்தவரை என்பது வலியற்ற இன்ஜெக்ஷன் என்று ஒன்று கிடையாது. எனவே போடோக்ஸ் சிகிச்சையை பெறும் பொழுது கொஞ்சம் வலியும் அசௌகரியமும் ஏற்படும். ஆனால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அசௌகரியமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக கொசு கடிப்பது போன்று தான் வலி இருக்கும்.

முகம் பளபளக்க எந்த வகை ஃபேஷியல் சிறந்தது..? உங்களுக்கான டிப்ஸ்..!

முகச் சுருக்கத்துக்கு மட்டுமே போடோக்ஸ் பயன்படும்

முகச்சுருக்கம், இளமைத் தோற்றம் என்பதைக் கடந்து போடோக்சின் பயன்பாடு பெரியது. தலைவலி, கழுத்து மற்றும் முதுகு வலி, முகம் வெட்டி இழுப்பது, தாடை வலி, மற்றும் மன அழுத்ததுக்குக் கூட போடோக்ஸ் உதவுகிறது.



போடாக்ஸ் ஃபில்லர் சருமத்தை தீவிரமாக பாதிக்கும்

போடாக்ஸ் மற்றும் டெர்மல் ஃபில்லர் சென்று கூறப்படும் இளமை தோற்றத்துக்கான காஸ்மெட்டிக் சிகிச்சைகளை பெற்றால் சருமம் முன்பு இருந்ததை விட மோசமாக பாதிக்கப்படும் என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. போடாக்ஸ் மட்டுமல்லாமல் ஃபில்லர்களும் 6 - 8 மாதங்கள் வரை தான் எட்டு மாதங்கள் வரை தான் இளமையான தோற்றத்தைத் தரும். அதன் பிறகு அதனுடைய விளைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

மழையில் நனைவது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்குமா..? 

எனவே இவை சருமத்திற்கான நிரந்தர சிகிச்சை அல்ல. போடாக்ஸ் சிகிச்சை பெறுவதற்கு முன்பு உங்கள் சருமம் எப்படி இருந்ததோ, அதன் விளைவு குறையத் தொடங்கிய பிறகு அதே போலத்தான் இருக்கும். இதனால் சருமத்திற்கு வேறு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

நீங்கள் சுருக்கங்கள் இல்லாத, மடிப்புகள் இல்லாத தோற்றம் விரும்பினால் நீங்கள் சில மாதங்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம்.



பெண்களுக்கானது மட்டுமல்ல

போடாக்ஸ் மட்டுமல்லாமல் அழகு மற்றும் காஸ்மெட்டிக் சிகிச்சை என்றால் அது பெண்களுக்கானது தான் என்ற தவறான கருத்தும் நிலவி வருகிறது ஆனால் போடாக்ஸ் சிகிச்சையை ஆண்களும் செய்து கொள்ளலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Skin Care

அடுத்த செய்தி