ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

hyper pigmentation-க்கு இந்த 2 ஊட்டசத்து குறைபாடுகள்தான் காரணம்..!

hyper pigmentation-க்கு இந்த 2 ஊட்டசத்து குறைபாடுகள்தான் காரணம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Hyper Pigmentation | ஃபோலிக் அமிலம் குறைவாக இருந்தால் அது இரத்த சோகைக்கு வழிவகுக்கும், இது மேலும் வெளிர் சருமத்தை ஏற்படுத்தும் மற்றும் தோல் நிறமியின் தோற்றத்தைக் குறைக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹைப்பர் பிக்மென்டேஷன், அல்லது அதிகப்படியான மெலனின் உற்பத்தியின் காரணமாக தோல் கருமையாகிறது, இது மிகவும் பொதுவான தோல் பிரச்சினைகளில் ஒன்றாகும். ஆனால் இது ஒரு அழகு கவலை மட்டுமல்ல, ஹைப்பர் பிக்மென்டேஷன் என்பது சில ஊட்டச்சத்து குறைபாடுகளையும் குறிக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, தோல் உடலின் மிகப்பெரிய உறுப்பு . எனவே ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாக இது உள்ளது. உள்ளே ஏதாவது தவறு நடக்கும் போதெல்லாம், அது உங்கள் தோலில் பிரதிபலிக்கிறது!

உதாரணமாக, ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற பாதிப்புகளால் உங்கள் உடலுக்குள் ஏதோ சரியாக இல்லை என்று உங்கள் உடல் கூறிவிடும். இது நாள்பட்ட நிலைமைகள், ஹார்மோன் சமநிலை குறைபாடு மற்றும் முதுமை காரணமாக இருக்கலாம், கூறுகின்றனர். எனவே ஒருவரின் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பல்வேறு காரணிகள் இருக்கிறது.

வைட்டமின்கள் குறைபாடுகள் என்பது இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதால் ஏற்படும் நிலையாகும். உங்கள் சருமத்தை மந்தமாகவும், கருமையாகவும் இது மாற்றலாம். மேலும் இது ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு வழிவகுக்கும். அதோடு பல்வேறு சருமம் சார்ந்த பாதிப்புகளையும், உடல் நல பிரச்சனைகளையும் இதனால் உண்டாக்கும் என்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த தோல் மற்றும் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனுப் திர் கூறிகிறார்.

Read More : என்றும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வாழ ஆசையா..? உங்களுக்குதான் இந்த டிப்ஸ்..!

எனவே, ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு வழிவகுக்கும் இரண்டு பொதுவான குறைபாடுகளாக ஃபோலிக் அமிலம் குறைபாடு மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு ஆகியவற்றை பட்டியலிடுகிறார்.

ஃபோலிக் அமிலம்

ஃபோலிக் அமிலம் என்பவை உடலின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. இது ஆற்றல் உற்பத்திக்கு தேவைப்படுகிறது மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் முக்கியமானதாக உள்ளது. ஃபோலிக் அமிலம் குறைவாக இருந்தால் அது இரத்த சோகைக்கு வழிவகுக்கும், இது மேலும் வெளிர் சருமத்தை ஏற்படுத்தும் மற்றும் தோல் நிறமியின் தோற்றத்தைக் குறைக்கும்.

ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலத்தின் உயர்ந்த அளவுகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் நிகழ்வை அதிகரிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள செல்களின் உற்பத்தியை சேதப்படுத்தலாம். இங்குதான் ஃபோலிக் அமிலத்தில் உள்ள ஃபோலேட் உதவுகிறது. ஹோமோசைஸ்டீனை உடைக்க இது உதவுகிறது. மேலும் இது தோலை ஒளிரச் செய்கிறது. எனவே ஃபோலிக் அமிலம் என்பது ஒருவரின் உடலுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.

வைட்டமின் பி12

வைட்டமின் பி 12 ஹீமோகுளோபின் உற்பத்திக்கும், உடலில் திசுக்களில் உள்ள ஆற்றலுக்கான ஊட்டச்சத்துக்களுக்கும் தேவைப்படுகிறது. வைட்டமின் பி 12 குறைபாடு இயற்கைக்கு மாறான தோல் கருமை மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தும். இது செல்களை இனப்பெருக்கம் செய்ய ஊக்குவிக்கிறது. தோலின் மந்தமான மற்றும் கருமையான புள்ளிகளை பிரகாசமாக்குகிறது. இது வீக்கம் மற்றும் முகப்பருவை குறைக்க உதவுகிறது. ஆதலால், வைட்டமின் பி12 அளவை சீராக வைத்திருப்பதும் மிக அவசியம்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Skin Care, Skin Disease, Vitamins