கணினி, செல்ஃபோனில் வெளியாகும் புளூ லைட் கதிர்களைத் தடுக்க அறிமுகமானது சன் ஸ்கிரீன்

இளமையிலேயே முதுமைத் தோற்றம், சரும வறட்சி , சரும வெடிப்புகள் போன்ற பிரச்னைகள் வர இதுவும் முக்கியக் காரணம்.

news18
Updated: June 10, 2019, 10:35 PM IST
கணினி, செல்ஃபோனில் வெளியாகும் புளூ லைட் கதிர்களைத் தடுக்க அறிமுகமானது சன் ஸ்கிரீன்
புளூ லைட் கதிர்களைத் தடுக்க அறிமுகமானது சன் ஸ்கிரீன்
news18
Updated: June 10, 2019, 10:35 PM IST
வெயிலால் ஏற்படும் சரும பாதிப்பைத் தடுக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் நாம் கணினி, செல்ஃபோன், ஃபுளோரசண்ட் லைட் , டிவி போன்றவற்றிலிருந்து வெளியாகும் புளூ லைட் கதிர்களைக் கண்டுக் கொண்டதே இல்லை.

இந்த லைட்ஸ் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் சருமத்தின் ஆழம் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா ?
இளமையிலேயே முதுமைத் தோற்றம், சரும வறட்சி , சரும வெடிப்புகள் போன்ற பிரச்னைகளைக் காரணமே தெரியாமல் எதிர் கொள்கிறீர்கள் எனில் அது நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்திருப்பதால்தான். இந்த புளூ லைட் கதிர்கள் சருமத்தின் ஆழம் வரை சென்று நிறத்தை மங்கச் செய்கிறது. சருமத்தை பாதிப்படையச் செய்கிறது.

இதை ஆர்கானிக் ஹார்வஸ்ட் நிறுவனம் கண்டறிந்து வெளியிட்டுள்ளது. அதுமட்டுமன்றி இந்த புளூ லைட் கதிர்களை எதிர்கொள்ளும் வகையில் சன் ஸ்கிரீன் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இது குறித்து இதன் சி.இ.ஓ ராஹுல் அகர்வால் ”நீங்கள் பயன்படுத்தும் திரைகளின் வெளிச்சத்தைக் குறைத்துப் பயன்படுத்துங்கள் என பரிந்துரையும் செய்கிறார். இருப்பினும் இதனால் சருமம் பாதிக்காதா என்றாலும் உறுதி இல்லை” என்கிறார்.

Loading...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...