• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சருமத்திற்கு அழகு சேர்க்கும் கருப்பு மிளகு எண்ணெய்...எப்படி பயன்படுத்த வேண்டும்..? நன்மைகள் என்ன?

சருமத்திற்கு அழகு சேர்க்கும் கருப்பு மிளகு எண்ணெய்...எப்படி பயன்படுத்த வேண்டும்..? நன்மைகள் என்ன?

கருப்பு மிளகு எண்ணெய்

கருப்பு மிளகு எண்ணெய்

கருப்பு மிளகு எண்ணெய் மிகவும் வலுவானது. எனவே உங்கள் சருமத்தில் இதனை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. முகத்தில் தடவுவதற்கு முன்பு பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஏதேனும் ஒரு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளுங்கள்.

  • Share this:
இந்திய சமயலறைகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் கருப்பு மிளகும் ஒன்று. இவை உணவுகளுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல் பல நன்மைகளை தரக்கூடியது. மருத்துவக் குணம் மிகுந்த இவை, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு அனைத்து வீடுகளிலும் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. ஏனெனில் கருப்பு மிளகினை சாப்பிடுவதால் அவை சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

தினமும் மிளகுடன் வெல்லம் அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா பிரச்சனை நீங்கும். இதுதவிர, கருப்பு மிளகிலிருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மூலக்கூறுகள் நிறைந்திருப்பதால் அது நமது சருமத்தை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் நாம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளை குறைக்கவும் உதவுகின்றன. கருப்பு மிளகு எண்ணெய் சருமத்திற்கு எவ்வாறு சிறந்தது என்பது பற்றியும் அதை உங்கள் தோல் பராமரிப்பு முறையில் ஏன் சேர்க்க வேண்டும் என்பதை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

சருமத்தில் கருப்பு மிளகு எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்துவது:

கருப்பு மிளகு எண்ணெய் மிகவும் வலுவானது. எனவே உங்கள் சருமத்தில் இதனை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. இதை உங்கள் முகத்தில் தடவுவதற்கு முன்பு பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒரு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதை சிறிது சூடாக்க வேண்டும். பின்னர் உங்கள் உள்ளங்கையில் கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றி, அதனை உங்கள் முகத்தில் பூச வேண்டும். குறைந்தபட்ச அழுத்தத்தைப் பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கடைசியாக, உங்கள் முகத்தை மைல்டு கிளீன்சர் பயன்படுத்திக் கழுவுங்கள். அதன்பின் உங்களிடம் இருக்கும் மாயிஸ்ச்சரைக் முகத்தில் தடவிக்கொள்ளுங்கள்.



கருப்பு மிளகு எண்ணெயின் நன்மைகள்:

உங்கள் சருமத்தை சுத்தமாகவும் தெளிவாகவும் உருவாக்குவதிலிருந்து அதை புத்துணர்ச்சியுற செய்வதற்கும், க்ளோவ்யிங் சருமத்திற்கும் என கருப்பு மிளகு எண்ணெய் அனைத்தையும் செய்கிறது. இந்த அத்தியாவசிய எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

1. சருமத்தை டிடாக்ஸ் செய்கிறது:

இந்த எண்ணெயில் ஆன்டிவைரல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. மேலும், இந்த எண்ணெய் சருமத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளை கொள்வதால் லேசான தோல் நோய்கள் மற்றும் ஒவ்வாமைகளை குணப்படுத்தும் மூலப்பொருளாக பார்க்கப்படுகின்றன.

2. முகப்பரு மற்றும் பருக்களை அகற்ற உதவும்:

கருப்பு மிளகு எண்ணெய் ஒரு சிறந்த தோல் சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. இது அடைபட்ட துளைகளை திறப்பதோடு சருமத்தில் குவிந்திருக்கும் கூடுதல் எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. இந்த எண்ணெயை கொண்டு வழக்கமாக மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் எஞ்சியிருக்கும் இறந்த சரும செல்கள் நீங்கிவிடும்.



3. ஒரே மாதிரியான ஸ்கின் டோனை பெற உதவும்:

இதன் டீப் கிளீன்சிங் செயல்முறை அழுக்கு அல்லது பிற மாசுபடுத்திகளின் அடுக்கைக் குறைக்க வழிவகை செய்கிறது. அதிக வெளியில் காரணமாக சிலருக்கு ஸ்கின் டோன் மாறியிருக்கும். அவை நம் அசல் சருமத்தை மறைக்கின்றன. நீங்கள் இந்த எண்ணெயை தவறாமல் பயன்படுத்தும் போதும் அது உங்கள் முக செல்களைத் தூண்டக்கூடும். அது உங்கள் சருமத்தை பிரகாசமாகவும் ஒரே டோனிலும் வைத்திருக்க உதவும். மேலும் உதடுகளைச் சுற்றியுள்ள அமைத்திருக்கும் பிக்மென்ட்டேஷனை குணப்படுத்த உதவுகிறது. உங்கள் கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தை நீக்கி அந்த பகுதியை பிரகாசமாகும்.

புளியங்கொட்டையில் கூட அழகுப் பராமரிப்பு இருக்கா..? எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம் என தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

4. ஆன்டி-ஏஜ்ஜிங் ஸ்கின் ஆயில்:

உங்கள் சருமம் வயதான தோற்றத்தை பெற்றால் அதிலிருந்து மீளவும், நிரந்தர தீர்வுக் காணவும் கருப்பு மிளகு எண்ணெய்யை அவசியம் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் கறைகள், சுருக்கங்கள் மற்றும் வயதான தோல் போன்ற பிற அறிகுறிகளைக் மட்டுப்படுத்த உதவும். மேலும் இது உங்களுக்கு மென்மையான, மிருதுவான மற்றும் இளமையான சரும பிரகாசத்தைத் தரும்.

5. சருமப் பொலிவு கிடைக்கும்:

கருப்பு மிளகு எண்ணெய் முகத்தைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை மேம்மபடுத்த உதவுகிறது. எனவே, சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்வதற்கு இந்த எண்ணெய் உதவும். இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் சருமத்திலிருந்து நச்சுகளை எளிதில் வெளியேற்ற முடியும். இதன் மூலம் நீங்கள் உங்கள் சருமத்தை பொலிவுறச் செய்யலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: