பிரைடல் மேக்அப் சமீபகால டிரெண்டாகி வருகிறது. ஒரு நாள்..அதுவும் நம் வாழ்வின் மிக முக்கியமான நாள் என்பதால் பலரும் செலவு செய்வதில் தயங்குவதில்லை. மேக்அப்பிற்கு மட்டுமே 20 ஆயிரம் வரை கூட செலவு செய்கின்றனர். இப்படி ஆடம்பரம் செய்யும் மக்கள் ஒருபக்கம் எனில் ஒரு சிலர் ஒருநாள் கூத்துக்கு இவ்வளவு செலவு தேவையா..? என நினைப்பார்கள். அப்படி சிம்பிளான திருமணம், நிச்சயதார்த்தத்தை விரும்பும் பெண்களுக்கு அனிதா சம்பத் சொல்லும் இந்த மேக்அப் டிப்ஸ் நிச்சயம் உதவும்.
அதாவது சிம்பிளான முறையில் வீட்டில் நீங்களே மேக்அப் செய்ய நினைத்தால் 2500 ரூபாய் செலவில் பக்காவான மேக்அப் செய்துவிடலாம் என்கிறார். எப்படி என்பதை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
நிச்சயதார்த்தம் என்பது சிம்பிளாக வீட்டிலேயே செய்யக் கூடியதாகவும் இருக்கும். மண்டபமே எடுத்தாலும் மணமேடையில் நீண்ட நேரம் நிர்க்க மாட்டோம். விருந்தினரும் குறைவாகவே அழைத்திருப்போம். இதுபோன்ற தருணத்தில் 20 முத 30 ஆயிரம் வரை செலவு செய்வது சற்று அதிகமாக இருக்கலாம். எனவே அந்த பணத்தை மிச்சம் செய்ய வேண்டும் என நினைத்தால் என்னுடைய இந்த குறிப்பு உங்களுக்கு உதவலாம் என அனிதா அந்த வீடியோவில் குறிப்பிடுகிறார். அதோடு என்னென்ன வாங்க வேண்டும் அதன் பட்ஜெட் என்ன என்பதையும் பட்டியலிடுகிறார்.
மேக்அப் செய்ய தேவையான பொருட்கள் :
ஃபவுண்டேஷன் – ரூ.40
கன்சீலர் – ரூ.350
காஜல் – ரூ.100
ஐ லைனர் – ரூ.150 அல்லது ஜெல் ஐ லைனர் – ரூ.200-250
குட்டி ஐ ஷேடோ பேலட் – ரூ.250- 400
லிப்ஸ்டிக் – ரூ.150 – 200. ப்ராண்ட் பொறுத்து 250 வரை செலவு செய்யலாம்.
பிளஷ், கான்ட்டூர் மற்றும் ஹைலையிட்டர் என மொத்தமும் அடங்கிய பேக் – ரூ.300-500
இப்படி இவை அனைத்தையும் வாங்கினால் 2000 முதல் 2500 வரை மட்டுமே செலவாகும். அதுவும் சிம்பிளான பிராண்டாக வாங்கினால்தான் இந்த செலவில் வரும். ஆனால் ஒரு லிப்ஸ்டிக் 1500 முதல் 3000 வரை கூட இருகின்றன. ஆனால் அதெல்லாம் வேண்டாம். இப்படி பட்ஜெட்டிற்கு ஏற்ப வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார்.
மேக் அப் பயன்படுத்தும் பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என்று கூறியதுடன் அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும். எப்படி மேக்அப் அப்ளை செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறார்.
பெண்கள் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது..ஏன் தெரியுமா ?
மேக்அப் அப்ளை செய்ய முதலில் ஃபேஷ் வாஷ் செய்து நன்கு துடைத்துவிடுங்கள். பின் நீங்கள் தினசரி பயன்படுத்தும் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள் என்கிறார். பின் அவர் பிரைமர் பயன்படுத்துகிறார். அடுத்ததாக கன்சீலர் பயன்படுத்தி ஆங்காங்கே இருக்கும் கரும்புள்ளிகள், கருப்பு திட்டுக்களை மறைக்கிறார். பின் முக்கை நீளமாக காட்ட காண்டூர் செய்கிறார்.
அடுத்ததாக ஐ மேக்அப் அப்ளை செய்ய கை ஷாடோ அப்ளை செய்கிறார். இதை உங்கள் புடவை அல்லது புடவை நிறத்திற்கு ஏற்ப நிறத்தை தேர்வு செய்து அப்ளை செய்யலாம்.
பின் ஐ லைனர் , காஜல் அப்ளை செய்யலாம். தேவைப்பட்டால் ஐ லாஷ் வையுங்கள். பின் ஐப்ரோ அடர்த்தியாக காட்ட ஐப்ரோ ஸ்டிக் அப்ளை செய்யுங்கள்.
அடுத்ததாக லிப்ஸ்டிக் அப்ளை செய்யுங்கள். இதுவும் உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ப அப்ளை செய்யுங்கள். பிளஷ் அப்ளை செய்யுங்கள். இறுதியாக பவுடர் டஸ்ட் செய்து மேலோட்டமாக அப்ளை செய்யுங்கள். அவ்வளவுதான் முழுமையான நிச்சயதார்த்த லுக் முடிந்தது. இறுதியாக அதற்கு ஏற்ற புடவை மற்றும் நகைகளை அணிந்துகொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anitha sampath