முக அழகுக்கு பாரதி கண்ணம்மா அஞ்சலி யூஸ் பண்ணும் பொருள் இது தான்!

பாரதி கண்ணம்மா அஞ்சலி

ட்ரை ஸ்கின் இருக்கும் பலருக்கும் இவர் பரிந்துரைப்பது இந்த முறையை தான்.

 • Share this:
  பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடிக்கும் கண்மணி மனோகரன் முக அழகுக்காக பயன்படுத்தும் சீக்ரெட் பொருள் இதுதான்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்மணி மனோகரனுக்கு இளம்பெண்கள் மத்தியில் மவுசு அதிகம். பார்க்க பேபி டால் போல் இருக்கும் இவரின் முகம் மேக்கப் இல்லாமலும் பளிச் சென்று இருக்கும். அதே போல் முகத்தில் பருக்கள் இல்லாமல் கிளின் ஸ்கின் டோனை கொண்டுள்ளார். இதற்கு இவர் சில பியூட்டி டிப்ஸ்களை ஃபோலோ செய்கிறார். அதுக்குறித்து தான் இங்கு பார்க்க போகிறோம்.

  கண்மணியின் ஸ்கின் டோன், ட்ரை ஸ்கின் டோன். எனவே தவறாமல் டோனர் பயன்படுத்துவாராம். அதே போல் வைட்டமின் சி இருக்கும் பியூட்டி பொராடக்டுகளை தான் யூஸ் செய்வாராம். அவரின் பேகில் இருக்கும் முக்கிய பொருள் சன்ஸ்க்ரீன் லோஷன் தானாம். வெளியே செல்லும்போது, மறக்காமல் அதை பயன்படுத்துவராம். ட்ரை ஸ்கின் இருக்கும் பலருக்கு இவர் பரிந்துரைப்பது இந்த முறையை தான்.  இதை எல்லாம் தாண்டி அவரின் அழகுக்கு காரணமாக இருக்கும் மிக முக்கியமான் பொருள் தயிர் தானாம். வெயிலில் ஷூட்டிங் சென்று வந்தவுடன் ஒரு கப் தயிரை எடுத்து மசாஜ் செய்து முகத்தை கழுவி விடுவாராம். சருமம் டேனாக மாறாமல் இருக்க, உடனடியாக பளீச் முகத்திற்கு அவர் பயன்படுத்தும் சீக்ரெட் பொருள் தயிர் தானாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆனால் அதே போல் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதை ஃபாலோ செய்வதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டுமாம். கழுத்தில் அல்லது கையில் முதலில் தேய்த்து எந்த வித எரிச்சலும் ஏற்படாமல் இருக்கா என சோதித்து கொள்ளுங்கள். எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை என்றால் தயிரை முகத்தில் அப்ளை செய்யலாமாம். சிலரின் சருமத்திற்கு தயிர் சூட் ஆகாமல் போகவும் வாய்ப்புண்டு. எனவே இதை கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம் என்கிறார் அழகு கண்மணி.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: