ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

முடி உதிர்தலை தடுக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிய ஷாம்பு வகைகள் : டிரை பண்ணி பாருங்க...

முடி உதிர்தலை தடுக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிய ஷாம்பு வகைகள் : டிரை பண்ணி பாருங்க...

ஹேர் ஃபால் ஷாம்பு

ஹேர் ஃபால் ஷாம்பு

முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கு இயற்கையான பொருட்களை கொண்டு தீர்வு காண முடியுமா என எப்போதாவது யோசித்தீர்களா? இதோ இந்த பதிவில், முடி உதிர்தலை தடுக்கும் சில எளிதான வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஆன்டி ஹேர் ஃபால் ஷாம்பு ரெசிபிகள்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

குளிர்காலமோ வெயில்காலமோ எதுவாக இருந்தாலும் மக்கள் சந்தித்து வரும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். இதற்கு மாறிவரும் சுற்றுச்சூழல் காரணிகளும் நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அதேபோல, தற்போது கிடைக்கும் விதவிதமான ராசாயனம் கலந்த ஷாம்புக்களும் தலைமுடியை சேதப்படுத்தி முடிஉதிர்வுக்கு வழிவகுக்கின்றன.

முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கு இயற்கையான பொருட்களை கொண்டு தீர்வு காண முடியுமா என எப்போதாவது யோசித்தீர்களா? இதோ இந்த பதிவில், முடி உதிர்தலை தடுக்கும் சில எளிதான வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஆன்டி ஹேர் ஃபால் ஷாம்பு ரெசிபிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு குறைந்த அளவு பொருட்கள் மட்டுமே தேவைப்படும் அதோடு எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடையாது.

1. வெங்காயம் மற்றும் ரோஸ் ஷாம்பு

வெங்காயம் உங்கள் தலைமுடிக்கு சிறந்த நிவாரணமாக அமையும். இது முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உச்சந்தலையை ஹைட்ரேட் செய்கிறது மற்றும் உங்கள் முடியை ஆரோக்கியமாக்குகிறது. இருப்பினும், வெங்காயத்தை உங்கள் தலைமுடியில் நேரடியாகப் பயன்படுத்துவதால், அது மிகக்கடுமையான வாசனையை வெளிப்படுத்தும். ஆனால் அதனை ஷாம்புவாக பயன்படுத்தும் போது வெங்காய வாசனை வெளியே வீசாது. இந்த ஷாம்பு தயாரிக்க வெறும் 2 பொருட்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1

ரோஸ் வாட்டர் - 1-2 டீஸ்பூன்

செய்முறை: வெங்காயத்தை தோலுரித்து சாறு பிழியவும். ஒரு பாத்திரத்தில் அந்த சாற்றை ஊற்றி, அதில் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். இப்போது உங்கள் தலைமுடியை ஈரப்படுத்தவும். பின்னர் ரோஸ் வாட்டர் மற்றும் வெங்காய சாறு கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டில் மூலமோ அல்லது கைகளை கொண்டோ உங்கள் முடி முழுவதும் தடவவும். சுமார் 30 நிமிடங்கள் விட்டு பின்னர் சாதாரண நீரில் தலைமுடியை அலசவும்.

2. நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை ஷாம்பு

நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் உங்கள் முடியின் நிறத்தையும் அதிகரிக்கிறது. நெல்லிக்காயில் உள்ள பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் பொடுகு, பூஞ்சை தொற்று, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. அதேபோல எலுமிச்சையிலும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் பண்புகள் உள்ளன. இது முடி உதிர்தல் மற்றும் பிற முடி பிரச்சனைகளைத் தடுக்கிறது.

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் சாறு - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். அதை உங்கள் உச்சந்தலையில் தடவவும். 5 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் சாதாரண நீரில் கழுவவும். வலுவான எலுமிச்சை வாசனையிலிருந்து விடுபட, உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

3. ஷிகாகாய் மற்றும் வெந்தயம் ஷாம்பு

ஷிகாகாய் உங்கள் தலைமுடிக்கு சிறந்த சுத்தப்படுத்தி மட்டுமல்ல, உங்கள் முடி வேர்களை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. மறுபுறம், வெந்தய விதைகளில் உள்ள புரதம் மற்றும் இரும்புச்சத்து கூந்தல் வளர்ச்சிக்கு ஒரு நல்ல மூலமாகும்.

தேவையான பொருட்கள்:

ஷிகாகாய் - 10 கிராம்

தண்ணீர் - 2-3 கப்

வெந்தயம் விதைகள் - 1 டீஸ்பூன்

அரிஷ்டா - 10 கிராம்

செய்முறை: ஒரு பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் பிற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து பின்னர் குறைந்தது 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். தீயை அணைத்து விட்டு ஷாம்பு தண்ணீரை வடிகட்டவும். அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். இப்போது அந்த தண்ணீரை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் முழுவதும் தெளிக்கவும். 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்னர் சாதாரண நீரில் தலையை அலசுங்கள்.

4. முட்டை மற்றும் கற்றாழை ஷாம்பு

வீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டை ஷாம்பு உங்கள் மெலிந்த கூந்தலை வலுவாக்க பயன்படுகிறது. இது உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்திருக்கும் ஒரு முக்கிய பொருளாக செயல்படுகிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின்கள் ஏ, டி, பி12 மற்றும் பிற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் இதில் உள்ளன. அதேபோல கற்றாழை உங்கள் தலைமுடியை மெருதுவாக்கவும், பொடுகை குறைக்கவும் மற்றும் உதிர்வை தடுக்கவும், முடி வளர்ச்சியை மேலும் மேம்படுத்தவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

முட்டையின் மஞ்சள் கரு - 1

தண்ணீர் - தேவையான அளவு

அலோ வேரா ஜெல் - 1 டீஸ்பூன்

ஷிகாகாய் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். மெல்லிய நிலைத்தன்மையைக் பெற சிறிது தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலை முழுவதும் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருங்கள். பின்னர் சாதாரண நீரில் கழுவவும்.

உஷார்..! இந்த 5 பொருட்களையும் தெரியாமல் கூட உங்கள் முகத்தில் பூசி விடாதீர்கள்!

5. கடலை மாவு மற்றும் தேன் ஷாம்பு

கடலை மாவில் புரதம், ஃபோலிக் அமிலம், துத்தநாகம் மற்றும் பிற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளன. இவை அனைத்தும் நம் தலைமுடிக்கு ஆச்சரியமாக தீர்வை கொடுக்கும். கடலை மாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை முடியை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. தேனில் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. இது உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 டீஸ்பூன்

வெந்தயப் பொடி - 2 டீஸ்பூன்

தேன் - 2 தேக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: ஒரு கிண்ணத்தில், மென்மையான பேஸ்ட் செய்ய அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். பேஸ்ட் கட்டிகளாக இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். இப்போது இதனை உங்கள் உச்சந்தலை முழுவதும் தடவவும். 5 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் சாதாரண நீரில் கழுவவும்.

முடி உதிர்தலை தடுக்கும் இந்த ஷாம்புகள் இயற்கையான பொருட்களால் நிரம்பியிருந்தாலும், அவை எல்லா நேரங்களிலும் உங்களுக்கு வேலை செய்யாது. உங்கள் தலைமுடியின் வகைக்கு ஏற்ப பொருட்களை மாற்றி மீண்டும் சோதிக்கலாம். அதே போல, இந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதன் மூலம் விரைவில் முடி உதிர்தல் நின்று விடும் என நினைக்க கூடாது. இந்த ஷாம்புகள் உங்களுக்கு வேலை செய்கிறதா என்பதை நீங்கள் உணர சிறிது காலம் எடுக்கலாம். சிறந்த முடிவுகளுக்கு ஆரோக்கியமான கூந்தல் பராமரிப்பு வழக்கத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Hair care, Hair fall, Shampoo