முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முகத்தில் உள்ள கரும்புள்ளியை குறைக்க உதவும் அரிசி மாவு பேஸ் பேக்..!

முகத்தில் உள்ள கரும்புள்ளியை குறைக்க உதவும் அரிசி மாவு பேஸ் பேக்..!

அரிசி மாவு பேஸ் பே

அரிசி மாவு பேஸ் பே

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்க உதவும் எளிய பேஸ்பேக் ஒன்றினை தேன், அரிசி மாவு பயன்படுத்தி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரிசி மாவை வைத்து தோசை, இட்லி மட்டும் அல்ல சரும அழகையும் பராமரிக்கலாம் என்பது நமது வீட்டு பெண்களுக்கு தெரியும். இயற்கை மருத்துவம், இயற்கையாக அழகை பராமரிக்க விரும்புபவர்களுக்கு வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு பராமரிக்க நினைக்கிறார்கள். அந்தவகையில், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்க உதவும் எளிய பேஸ்பேக் ஒன்றினை தேன், அரிசி மாவு பயன்படுத்தி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1 ஸ்பூன்.

டீ தூள் - 1 ஸ்பூன்.

தேன் - 1 ஸ்பூன்.

வெந்நீர் - சிறிதளவு.

பேஸ்பேக் தயார் செய்ய கிண்ணம் - 1.

செய்முறை :

முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதில், அரை கப் தண்ணீர் ஊற்றி, அதில் 1 ஸ்பூன் டீ தூள் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்ததும், டிக்காஷனை மட்டும் வடிகட்டி தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது, ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும்.அதில், அரிசி மாவு மற்றும் தேநீர் சேர்த்து பதத்திற்கு நன்கு குழைத்துக்கொள்ளவும். பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன், அதில் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது, பேஸ்பேக் ரெடி.

Also Read | கோடையில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் கற்றாழை - வெள்ளரி பேஸ்பேக் பற்றி தெரியுமா..?

பயன்படுத்துவது எப்படி?

பேஸ்பேக்யை பயன்படுத்துவதற்கு முன், உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும்.

இதையடுத்து, ஒரு சுத்தமான டவல் வைத்து உங்கள் முகத்தை ஈரம் இல்லாமல் துடைக்கவும்.

பின்னர், தயார் செய்த பேஸ்பேக்கினை, ஒரு பிரஷ் பயன்படுத்தி முகம் மற்றும் கழுத்து பகுதிக்கு தடவி 20 நிமிடங்களுக்கு உலர விடவும்.

இதன் பின், குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்துவிட நல்ல மாற்றம் தெரியும். இதை வாரத்திற்கு 2 முறை உபயோகித்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

பயன்கள் :

சருமத்தின் pH அளவினை சமநிலைப்படுத்தும் பண்பு அரிசி மாவிற்கு உள்ளது. அந்த வகையில், அரிசி மாவு பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பேஸ்பேக், சருமத்தின் இயற்கை நிறத்தை மீட்டு தந்து, சரும பொலிவுக்கு உதவுகிறது.

பேஸ்பேக்கில் நாம் பயன்படுத்தும் தேன், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு கொண்டது. அந்த வகையில், இந்த பேஸ்பேக் சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்கி, மிருதுவான சருமம் பெற உதவுகிறது.

அரிசி மாவு மற்றும் தேன் கலவையில் தயாரிக்கப்படும் இந்த பேஸ்பேக், சருமம் தளர்வடைவதை தடுப்பதோடு, சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் மற்றும் மென் கோடுகளையும் மறைக்கிறது.

சருமத்துளைகளில் உள்ள மாசுக்களை ஆழ்ந்து சுத்தம் செய்யும் பண்பு இந்த பேஸ்பேக்கிற்கு உள்ளது. அந்த வகையில் இந்த பேஸ்பேக்கினை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள பருக்கள் குறையும்.

First published: