கோடைக்காலம் மற்றும் குளிர்காலம் என எல்லா காலத்திலும், நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை வியர்வை துர்நாற்றம். வியர்வையில் இருக்கும் துர்நாற்றத்திற்கு காரணம் அதில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் கிருமிகள். வியர்வை துர்நாற்றத்தை போக்குவதற்காக சந்தைகளில் பல டியோ டிரன்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அது சரியானை பலனை கொடுப்பதில்லை.
ஒரு வேலை நீங்களும் அக்குள் துர்நாற்றத்தை போக்க விரும்பினால், இங்கே நாங்க உங்களுக்காக சில வீட்டு வைத்தியங்களை நாங்கள் கூறுகிறோம். சுருக்கமாக கூறினால், உங்கள் அக்குள் துர்நாற்றத்தை போக்க உதவும் சில டியோடரன்டை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என இங்கே காணலாம்.
லாவெண்டர் டியோடரன்ட்
தேவையான பொருட்கள் :
கிரீன் டீ வாட்டர் – 1 கப்.
லாவெண்டர் எசன்ஷியல் ஆயில் – 5 சொட்டு.
ரோஸ் வாட்டர் – 1 கப்.
செய்முறை :
ரோஸ் வாட்டர் தயாரிப்பதற்கு, முதல் நாள் இரவே ரோஜா இதழ்களை தண்ணீரில் ஊற வைக்கவும்.
அடுத்த நாள் காலையில் அந்த நீரில், கிரீன் டீ வாட்டரை சேர்க்கவும். பின்னர் அதில் 5 சொட்டு லாவெண்டர் எசன்ஷியல் ஆயிலை சேர்க்கவும்.
இப்போது, இவற்றை நன்கு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைக்கவும். பின்பு இதை அக்குள் பகுதியில் உபயோகித்து வந்தால் துர்நாற்றம் நீங்கும். இதை ஒரு நாளைக்கு 2 முறை பயன்படுத்தவும்.
பேக்கிங் சோடா டியோடரன்ட்
தேவையான பொருட்கள் :
பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்.
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்.
கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்.
தண்ணீர் - 1/2 கப்.
செய்முறை :
முதலில், 1/2 கப் தண்ணீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர், அதில் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
நீங்கள் விரும்பினால் எலுமிச்சை தோலை தண்ணீரில் கொத்திக்க வைத்து, அந்த நீரையும் சேர்க்கலாம்.
Also Read | உங்கள் உதட்டை ரோஜா இதழ் போல மென்மையாக மாற்ற உதவும் லிப் ஆயில் பற்றி தெரியுமா..?
பின்னர், இந்த கலவையில் கற்றாழை ஜெல் சேர்த்து எல்லா பொருட்களும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
இப்போது இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து அக்குளில் தடவி வர, அக்குள் துர்நாற்றம் மட்டும் அல்ல அக்குள் கருமையும் நீங்கும்.
சந்தன எண்ணெய் டியோடரன்ட்
தேவையான பொருட்கள்:
சோள மாவு – 1 கப்.
சந்தன எண்ணெய் – 5 சொட்டு.
செய்முறை :
முதலில், சோள மாவை தண்ணீரில் கரைத்து மெல்லிய கலவையாக தயார் செய்யவும்.
பின்னர் இதில் சந்தன எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைக்கவும். இதை, திமமும் பயன்படுத்தி வந்தால் வந்தால், அக்குளில் வரும் துர்நாற்றத்தை குறைப்பதோடு அக்குள் கருமையையும் நீக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Deodorant, Under Arm care